|
போரில் பெற்ற வெற்றியால் மன்னனுக்கு ஆணவம் அதிகரித்தது. அதன் முடிவாக பிறரை அவமானப்படுத்தி பேசுவதில் மகிழ்ச்சி கொண்டான். ஒருநாள் வயதான துறவி அரண்மனைக்கு வந்தார். அவரது நடையைக் கண்ட மன்னன், என்ன துறவியாரே.... எருமை மாடு போல அசைந்தாடி வருகிறீரே என சொல்லி சிரித்தான். துறவி சற்றும் கலங்கவில்லை. மாறாக மன்னனைக் கண்டு புன்னகைத்தபடி, மன்னா... நான் வணங்கும் புத்தர் போல தாங்கள் காட்சியளிக்கிறீர்கள் என புகழ்ந்தார்.இகழ்ந்தாலும் பிறர் மீது கோபம் கொள்ளாத துறவியைக் கண்ட மன்னனுக்கு வியப்பு எழுந்தது. எருமை என நான் இகழ்ந்தும் என்னை புத்தர் என புகழ்கிறீரே... ஏன் எனக் கேட்டான். மன்னா. உள்ளம் போலவே இந்த உலகம் காட்சியளிக்கும் என்பர். என் உள்ளத்தில் புத்தர் பெருமான் இருப்பதால் எங்கும் புத்தர்மயமாக தென்படுகிறது. அதைப் போல தாங்களும் சிந்தித்தால் உண்மை புரியும். உலகில் யாரும் உயர்ந்தவரோ, தாழ்ந்தவரோ இல்லை. எல்லாம் சரி சமமானவரே என்றார் துறவி. துறவியின் பேச்சில் உண்மை இருப்பதை உணர்ந்த மன்னன், அக்கணமே ஆணவத்தைக் கைவிட்டான்.
|
|
|
|