Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நினைப்பதெல்லாம் நடந்தால்...
 
பக்தி கதைகள்
நினைப்பதெல்லாம் நடந்தால்...

விவசாயி ஒருவன் கிருஷ்ண பக்தனாக இருந்தான். மழை பெய்தாலும் சரி, வெயில் அடித்தாலும் சரி அவனுக்கு மனதில் நிம்மதி இருந்ததில்லை. ஒரேயடியாக மழை பெய்கிறதே; வெயில் கொளுத்துகிறதே என புலம்புவான்.  ஒருநாள் கிருஷ்ணர் கோயிலுக்குச் சென்ற விவசாயி, “ பகவானே! நினைச்ச நேரம் மழை வருது. தப்பான நேரத்தில் காற்றடிக்குது. இயற்கையின் பணிகளை என் போன்ற விவசாயிகளிடம் ஒப்படைச்சா எவ்வளவு நன்றாக இருக்கும்” என எண்ணிய படி பிரகாரத்தைச் சுற்றினான். “அப்படியா? இனி வெயில், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டில் இருக்கட்டும்” என வானில் அசரீரி ஒலித்தது.  விவசாயி மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்தான். விதைப்பிற்கான பருவம் வந்தது. உடனே “மழையே பெய்” என கட்டளையிட்டான். வானில் மேகம் கூடி மழை பெய்தது. நிற்கச் சொன்னான். அப்படியே நடந்தது.  

ஈரமான நிலத்தை உழுதான். விவசாயியின் கட்டளையை மீறாமல் இயற்கையும் செயல்பட்டது. சீரான வேகத்தில் காற்றை வீசச் செய்து விதைகளைத் தூவினான். நீர் பாய்ச்சி உரமிட்டான். எங்கும் பச்சைப்பசேல் எனக் காட்சியளித்தது. அறுவடைக் காலம் வரும் வரை கண்ணும் கருத்துமாக இருந்தான்.  ஒருநாள் நெற்கதிர் ஒன்றை கையில் எடுத்துப் பார்த்தான் விவசாயி. நெல் இல்லாமல் வெறும் பதராக இருந்தது. இன்னொரு கதிரையும் அறுத்தான்...அதிலும் தானியம் இல்லை. என்ன நடந்ததென்றே அவனுக்கு புரியவில்லை.   “பகவானே! மழை, வெயில், காற்று எல்லாம் சரியான விகிதத்தில் இருந்தும் கூட பலனில்லாமல் போனதே?” என அழுதான். “என் கட்டுப்பாட்டில் இருந்த போது காற்று பலமாக வீசும். அப்போது பயிர்கள் தற்காத்துக் கொள்ள பூமிக்குள் ஆழச் சென்று வேர்களால் இறுகப் பற்றிக் கொள்ளும். தண்ணீரைத் தேடி நாலாபுறமும் வேர்கள் செல்லும். இப்படியாக போராட்டம் இருந்தால் தான் பயிருக்கு சுயமுயற்சி இருக்கும். அதன் பயனாக வேர் ஆழமாகச் செல்லும். தேவைகள் எல்லாம் முன்னதாகவே கிடைத்ததால் வந்த விளைவு இது” என அசரீரியாக விளக்கம் அளித்தார் கிருஷ்ணர். போராட்டம் இன்றி பூந்தோட்டம் இல்லை என்பதை உணர்ந்த விவசாயி மன்னிப்பு கேட்டான்.  வாழ்வின் சுவையே பிரச்னையை எதிர்கொண்டு அதில் வெற்றியடைவதில் தான் இருக்கிறது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar