|
சில ஆண்டுகளாக மழை பெய்யாததால் கிராமத்தில் பஞ்சம் நிலவியது. இரக்கம் மனம் கொண்ட பண்ணையாரிடம் மக்கள் ‘‘ நாங்கள் பசியைப் பொறுத்துக் கொள்வோம். ஆனால் குழந்தைகள் என்ன செய்வார்கள்... அவர்களுக்கு நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும்’’ என வேண்டினர். ‘‘குழந்தைகளுக்கு சத்து மாவு உருண்டை கொடுக்க ஏற்பாடு செய்கிறேன்” என்றார். தன் வேலைக்காரனிடம்,‘‘ நாளை முதல் நம் கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஆளுக்கொரு சத்து மாவு உருண்டை கொடுக்க வேண்டும்’’ என வேலைக்காரனுக்கு தினமும் காலை கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு காத்திரு’’ என்றார். மறுநாள் வேலைக்காரன் கூடையுடன் காத்திருக்க, அவனை சிறுவர்கள் சூழ்ந்து கொண்டனர். பெரிய உருண்டையை எடுப்பதில் கடுமையான போட்டி நிலவியது. ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள். எல்லோரும் எடுத்துச் சென்ற பின், மீதம் இருந்த சிறிய உருண்டையை எடுத்துச் சென்றாள். தினந்தோறும் பண்ணையார் இதைக் கவனித்து வந்தார். அன்றும் அந்த சிறுமி தனக்கு கிடைத்த உருண்டையை எடுத்துக் கொண்டு தாயிடம் கொடுத்தாள். அதை இரண்டாக பிரித்த போது அதற்குள் தங்கக்காசு இருந்தது.
அந்த தங்கக்காசை பண்ணையாரிடம் ஒப்படைக்க வந்தாள் சிறுமி. ‘‘உன் பெயர் என்னம்மா’’ என்று கேட்டார் பண்ணையார். ‘‘என் பெயர் சத்யா’’ என பதிலளித்தாள். பொறுமைக்கும், நேர்மைக்கும் நான் அளித்த பரிசு இது. வைத்துக் கொள்’’ என இன்னொரு தங்கக்காசையும் கொடுத்தார். தாயிடம் நடந்தை தெரிவித்தாள் சிறுமி.
|
|
|
|