|
ஆடம்பரமாக வாழ வேண்டும் என கணவரை நச்சரித்து வந்தாள் ஒரு பெண். அவளுக்கு உண்மையை புரிய வைக்க ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்றார் கணவர். ஒரு சாக்குப்பையை அவளிடம் கொடுத்து, “இதில் பெரிய கற்களை நிரப்ப முடியுமா?” எனக் கேட்டார். நாலைந்து கற்களை வைத்து விட்டு, “இதற்கு மேல் முடியாது” என்றாள். அதன்பின் கணவர் சில கூழாங்கற்களை பையில் நிரப்பினார். வேடிக்கை பார்த்த அவள், ‘‘சாக்குப்பை நிரம்பி விட்டது” என்றாள். அதன்பின் சிறிது மணலை இட்டு பையைக் குலுக்கினார். கற்கள், கூழாங்கற்களுக்கு இடையில் மணல் இறங்கியது. அப்போது அவளிடம்,“முதலிலேயே மணலை நிரப்பினால் கற்களுக்கு இடம் இருக்குமா?’’ எனக் கேட்டார். ‘இருக்காது’ என்றாள். “இது போலத்தான் குடும்பமும். நம்மை மேம்படுத்தும் அன்பு, கருணை, பொறுமை போன்ற நற்பண்புகள் பெரிய கற்கள் போன்றவை. வீடு, கார், பணம் போன்றவை கூழாங்கற்களுக்குச் சமமானவை. விருந்து, கேளிக்கை போன்ற பொழுதுபோக்கு விஷயங்கள் மணல் போன்றவை. நல்ல பண்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்காவிட்டால் அற்ப விஷயங்கள் நம்மை ஆக்ரமித்து விடும்.
|
|
|
|