|
ஒரு அறையில் அமைதி, அன்பு, அறிவு, நம்பிக்கை என்னும் நான்கு மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டு இருந்தன. காற்று பட்டதும்... அமைதி என்னும் மெழுகுவர்த்தி ‘ஐயோ காற்று வீசுகிறது, நான் அணைந்து விடுவேனே’’ என பதறியது. காற்றில் அணைந்தது. அன்பு என்னும் அடுத்த மெழுகுவர்த்தியும் காற்றை எதிர்க்க முடியாமல் காணாமல் போனது. அறிவு என்ற மூன்றாவது மெழுகுவர்த்தியாலும் தாக்குப் பிடிக்க முடியவில்லை. நம்பிக்கை என்னும் மெழுகுவர்த்தி மட்டும் காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுத்தது. அப்போது அந்த அறைக்குள் சிறுவன் ஒருவன் நுழைந்தான். ‘அடடா... இந்த மெழுகுவர்த்திகள் அணைந்து விட்டதே என்று கவலைப்பட்டான். அதற்கு எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தி, ‘‘ நம்பிக்கை இழக்காதே. என்னை வைத்து மற்றவற்றை ஏற்று’ என்றது. எதை இழந்தாலும் மனிதன் நம்பிக்கையை இழக்கக் கூடாது.
|
|
|
|