|
உறவினர்கள் இடையே பிரச்னை வருவது இயல்பு. இதனால் மகிழ்ச்சி கெடுவதுடன், ஒரு குலமே அழிந்துவிடும் என மஹாபாரதம் சொல்லியுள்ளது. மஹாபாரத போருக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும்போது, கவுரவர்களின் தந்தை திருதாஷ்டிரன் கவலை அடைந்தார். எனவே தன் தம்பியும், அமைச்சருமான விதுரரிடம் ஆலோசனை கேட்டார். அதற்கு அவர் கதை ஒன்றை சொன்னார். இரு பறவைகள் பறந்து கொண்டிருக்கும்போது, வேடன் ஒருவன் வலை வீசினான். அதில் சிக்கினாலும் அவை இடைவிடாமல் பறந்தன. வேடன் அதுபோகும் திசையிலேயே ஓட ஆரம்பித்தான். இதைப்பார்த்து சிலர் சிரிக்க, மனம் தளராமல் ஓடிக்கொண்டே இருந்தான் வேடன். திடீரென பறவைகளுக்குள் சண்டை மூண்டதால் வெவ்வேறு திசைகளில் அவை பறக்க ஆரம்பித்தன. அந்நிலையில் வலையுடன் சேர்ந்து பறவைகள் கீழே விழுந்தது. இதைப்போலத்தான் உறவினர்களும். ஒருவரையொருவர் பகைத்துக்கொண்டால் அதன் விளைவு அழிவுதான். ஒற்றுமையாக வாழ்ந்தால் சிறப்பான வாழ்க்கை அமையும்.
|
|
|
|