|
ஏழை ஒருவர் துளையுள்ள நாணயம் (பழங்கால காசு) ஒன்றை கண்டார். ‘துளையுள்ள நாணயம் வீட்டில் இருந்தால் அதிர்ஷ்டம் வரும்’ என பாட்டி சொன்னது நினைவுக்கு வரவே, அதை மனைவியிடம் கொடுத்து ‘இன்று முதல் யோகம்’ என சொன்னார். அதை ஒரு துணியில் முடிந்து வைத்தாள். படிப்படியாக முன்னேறிய அவர் பணக்காரர் ஆனார். ஒருநாள் அந்த நாணய துணிமுடிப்பை மனைவியிடம் கேட்ட போது அதில் வேறொரு நாணயம் இருந்தது. அதைப் பார்த்த பணக்காரர் அதிர்ச்சியடைந்தார். ‘‘ வீட்டைக் காலி செய்த போது நாணயம் தொலைந்து விட்டது. கிடைக்காததால் வேறொன்றை முடிந்து வைத்தேன். நடந்ததை மறைத்ததற்காக மன்னியுங்கள்’’ என்றாள். ‘அதிர்ஷ்டத்திற்கு காரணம் துளையுள்ள நாணயம் அல்ல; உழைப்பின் மீதுள்ள நம்பிக்கையே’ என்பது அப்போதுதான் அவருக்கு புரிந்தது.
|
|
|
|