|
ஒரு ஊரில் சகோதரர் இருவர் வாழ்ந்தனர். அவர்களில் மூத்தவன் போதைப் பழக்கமுள்ளவன். எப்போதும் மனைவியை மிரட்டி பணம் வாங்கிக் குடிப்பான். இளையவன் நல்லவனாக, மனைவி, குழந்தைகளால் மதிக்கப்படுபவனாக இருந்தான். ‘‘ஒரே சூழலில் வளர்ந்த ஒருவன் நல்லவனாகவும், மற்றொருவன் கெட்டவனாகவும் இருக்க காரணம் என்ன’’ என ஊரார் வியந்தனர். ‘‘உங்களின் நடத்தைக்கு யார் காரணம்?’’ என பெரியவர் ஒருவர் கேட்ட போது மூத்தவன், ‘‘எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்தே அப்பா குடிப்பார். அம்மாவிடம் பணம் கேட்டு நச்சரிப்பார். அடி, உதைக்கும் பஞ்சமில்லை. அவரின் மகனாகிய நான் மட்டும் எப்படி இருப்பேன். மோசமான தகப்பனின் மகனான நானும் மோசமாகி விட்டேன்’’ என்றான். இளையவனோ, ‘‘எப்போதும் அப்பா குடிப்பார். கோபத்தில் என்னை அடிப்பார். திட்டுவார். வருத்தப்பட்ட நான் ஒழுக்கமுடன் வாழ முடிவெடுத்தேன். என் நடத்தைக்கு அப்பாதான் காரணம்’’ என்றான். எந்த ஒரு விஷயத்திற்கும் நேர், எதிர் துருவங்கள் உண்டு என்பது உண்மை தானோ...
|
|
|
|