|
சிறுவன் ஒருவன் முடிதிருத்தும் கடைக்கு வந்தான். அந்த கடைக்காரர் அங்கிருந்த வாடிக்கையாளர் ஒருவரிடம், “உலகிலேயே இவன்தான் முட்டாள் என்பதை இப்போது நான் நிரூபிக்கிறேன்’’ என்றார். அந்த கடைக்காரர் ஒரு கையில் ஐந்து ரூபாய், மறுகையில் இரண்டு ரூபாய் நாணயத்தை வைத்துக் கொண்டார். சிறுவனை அழைத்து, ‘‘தம்பி... இதில் உனக்கு எது வேண்டும்’’ எனக் கேட்டார். சிறுவன் இரண்டு ரூபாயை எடுத்துக் கொண்டு நடந்தான். அந்த கடைக்காரர், ‘‘பார்த்தீர்களா... இவன் எப்படி முன்னேறுவான்’’ என்று சொல்லி சிரித்தார். அங்கிருந்து கிளம்பிய வாடிக்கையாளர், பெட்டிக்கடை ஒன்றில் சிறுவன் மிட்டாய் வாங்குவதைக் கண்டார். ‘‘உன்னிடம் ஒரு கேள்வி கேட்கலாமா தம்பி?’’ எனக் கேட்டார். அவனும் தலையசைத்தான். ‘‘ஐந்து ரூபாய் இருக்க ஏன் இரண்டு ரூபாயை எடுத்தாய்?’’ மிட்டாயை சுவைத்தபடி அவனும், “எப்போது ஐந்து ரூபாயை எடுக்கிறேனோ அன்றோடு இந்த இரண்டு ரூபாய் கிடைப்பது நின்று விடும்’’ என்றான். மற்றவரை முட்டாள் என கருதுபவர் தன்னையே முட்டாளாக்கி கொள்கிறார் என்பது நிஜம்தானே!
|
|
|
|