|
ஒரு துறவியிடம் சிலர், ‛‛நாங்கள் புனித நதிகளில் நீராடி புண்ணியம் சேர்க்க விரும்புகிறோம். நீங்களும் எங்களுடன் வந்தால் நன்றாக இருக்கும்’’ என அழைத்தனர். ‛‛இப்போது யாத்திரை வரும் எண்ணம் இல்லை’’ எனத் தெரிவித்த அவர், ஒரு பாகற்காயைக் கொடுத்தார். ‛‛ நதிகளில் முழுகும் போதெல்லாம் இந்த பாகற்காயையும் நனைத்து என்னிடம் கொண்டு வந்து கொடுங்கள்’’ என்றார். அப்படியே செய்து விட்டு அவர்களும் ஊர் திரும்பினர். அந்த பாகற்காயை நறுக்கி ஆளுக்கு ஒரு துண்டாகக் கொடுத்தார் துறவி. ‛‛புனித நதியில் முழுகி வந்த பாகற்காய் அல்லவா இது...சாப்பிட்டுப் பாருங்கள் இனிக்கும்’’ என்றார் ஆர்வமுடன் வாங்கிய அவர்களும் வாயில் இட்டு மென்றனர். பாகற்காய் குணத்தைக் காட்டியது. ‘‘பார்த்தீர்களா? புனித நதிகளில் முழுகினாலும் பாகற்காயின் கசப்பு மாறவில்லை. தீய சிந்தனையை மாற்றாத வரை எத்தனை நதிகளில் முழுகினாலும் பலன் கிடைக்காது. மாற்றம் என்பது நம் மனசைப் பொறுத்தது’’ என்றார் துறவி.
|
|
|
|