Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சீதா கல்யாணம் – 6
 
பக்தி கதைகள்
சீதா கல்யாணம் – 6


‘‘உலகங்களுக்கு தொல்லை தந்து கொண்டிருந்த அரக்கர் இனம் அழிவது இன்று உறுதியாயிற்று’’ என்று எண்ணி சீதையின் திருமணம் காண தேவர்கள் திரண்டனர்.  

ஆகாயத்தில் இந்திரன் இந்திராணியுடன் வந்தான். சிவபெருமான் உமையுடன் வந்தான். நான்முகன் கலைவாணியுடன் வந்து சேர்ந்தான்.

சகோதரர் நால்வரும் எல்லா அணிகலன்களையும் அணிந்தபடி மங்கலச் சரடு கட்டிக்கொண்டு தந்தையின் அருகில் வந்து நின்றார்கள்.  

அங்கே மணப்பந்தலில் வசிஷ்டன் ஜனகரிடம், ‘‘மன்னரே, எல்லா மங்கலச் சடங்குகளையும் முடித்து, தசரதன் கன்னிகாதானம் செய்யப் போகிறவரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். விவாகத்தை நடத்திக் கொடுத்து தங்கள் கடமையை நிறைவேற்றுங்கள்’’

“என்னுடைய கன்னிகைகளும் எல்லா சடங்குளையும் முடித்து வேள்விக் குண்டத்தின் அருகில் காத்திருக்கிறார்கள்” என்று சொல்லி, ‘‘தாங்கள் தயவு செய்து இந்த விவாகங்களை முன்னின்று நடத்தித் தர வேண்டி கேட்டுக்கொள்கிறேன்‘‘ என்றான்.

அவரும் சம்மதித்து, விஸ்வாமித்திரர், சதானந்தர் இருவரையும் உடன் வைத்துக்கொண்டு, வேள்வி வளர்த்து சடங்குகளைச் செய்தார்.  முகூர்த்த நேரம் வந்ததும், வசிஷ்டர் சொன்னபடி, ஜனகன் சிறந்த அணிகலன்களால் அலங்கரிப்பட்டிருந்த சீதையை ராமனுக்கு எதிரில் அக்னிக்கு முன்பாக நிற்கச் செய்து, ராமனை நோக்கி, ‘‘இந்த சீதை என்னுடைய மகள்.  அறவழியில் உனக்கு உடன்பட்டு இருக்கப் போகிறவள்.  இவளை ஏற்றுக்கொள். உனக்கு மங்களம் உண்டாகட்டும். இவளது திருக்கரத்தை உன் திருக்கரத்தால் பற்றுவாயாக.  இவள் பதிவிரதை. பெரும் பாக்கியசாலி. உன்னை எப்போதும் நிழல் போல் தொடர்வாள்’’ என்று கூறி மந்திரங்களால் புனிதமாக்கப்பட்ட நீரை வார்த்தார்.  

இதே விதமாக மற்ற கன்னியரையும் தசரத புதல்வர்களுக்குத்  தாரை வார்த்து கொடுத்தான். பிறகு, ‘‘நீங்கள் பண்பாளர்கள். எல்லா விரதங்களையும் குறைவில்லாமல் செய்து முடித்தவர்கள்.  இனி மனைவிகளுடன் இணைந்து அறம் செய்யுங்கள்’’ என்றார்.   

தேவ பேரிகைகள் முழங்கின. வானில் இருந்து பூமாரி பொழிந்தது. அனைவரும் ஆனந்தத்தில் திளைத்தனர்.  வானவர்கள் சொரிந்த கற்பக மலர்களும், அரசர்கள் சொரிந்த பொன் பூக்களும், மற்றவர் துாவிய முத்துக்களும், இயற்கையாக மலர்ந்த பூக்களும் இவற்றால் இந்த பூவுலகம் நட்சத்திரங்கள் சூழ்ந்த ஆகாயமாக விளங்கியது. பாட்டும் வாத்திய சங்கீதமும் ஒலித்தன.  அப்சரஸ்கள்  நடனமாடினர்.  கந்தர்வர்கள் இனிமையாக பாடினர். நாட்டியம், பாட்டு, தாளம் என அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்கும் போது, தம்பதிகள் நால்வரும் அக்னியை மூன்று முறை வலம் வந்து, வேள்வியில் பொரியிட்டனர். அம்மி மிதித்து, எதிரே நின்ற அருந்ததியைக் கண்டனர்.  பெண்ணின் சகோதரன் மூலம் பொரியிடுவது, அம்மி மிதிப்பது, அருந்ததியைக் (வானில் அருந்ததி நட்சத்திரத்தை) காண்பது திருமணங்களில் வழக்கம்.  ஆனால் இங்கே அருந்ததியை எதிரேயே கண்டனர்.  ஏனெனில், அருந்ததி வசிஷ்ட முனிவரின் பத்னி.  திருமணத்திற்கு அவளும் வந்திருந்தாள்.   

ராமனும் சீதையும் முதலில் கைகேயியை வணங்கினர். அதன் பின்புதான் தாய் கவுசல்யையும், சுமித்திரையையும் வணங்கினர். அளவில்லா மகிழ்ச்சியடைந்த தசரத மன்னன், ஏராளமான தானங்கள் செய்தான்.  

இப்படி ராமன், சீதை திருமணம் சுபமாக நடந்தது.  இதை படிப்பவர்கள் சகல சுகங்களையும் பெற்று மங்களகரமாக வாழ்வார்கள்.

இந்த திருமணங்கள் நடந்து முடிந்ததில் மற்றெல்லோரையும் விட விஸ்வாமித்திர முனிவருக்குத்தான் பரம திருப்தி.  அவரது மனத்தில் உறுத்திக் கொண்டிருந்த குற்ற உணர்வு குறைந்து அமைதி உண்டானது. பிறகு அவர் புதுமண தம்பதிகளை வாழ்த்தி விட்டு, அனைவரிடமும் சொல்லிக்கொண்டு இமயமலைக்கு தவம் செய்ய புறப்பட்டார்.  
பிறகு தசரதன் ஜனகனிடம் விடை பெற்றுக்கொண்டு அயோத்தி நோக்கி புறப்பட்டான். சிறிது துாரம் ஜனகனும் உடன்சென்று வழி அனுப்பினான்.  
ஜனக மன்னன் தன் புதல்விகளை கணவன்மார்களுடன் அனுப்பி வைக்கும் போது ஏராளமான சீதனம் கொடுத்தான்.
அயோத்தி மன்னன் தன் புதல்வர்கள், மருமகள்கள், பட்ட மகிஷிகள், முனிவர்கள், உறவினர்கள், சேனைகள் முதலியவற்றுடன் தன் பயணத்தைத் தொடர்ந்தான்.  
அயோத்தி செல்லும் வழியில் பரசுராமன் கர்வ பங்கம்.  
அதன்பின்,கொடி, தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட அயோத்தி நகரில் தசரதன் அனைவருடன் பிரவேசித்தான். அனைவரும் தங்கள் மாளிகைக்கு சென்றனர்.  
அயோத்தி வந்தடைந்து இரண்டு நாள் கழித்து மன்னன் பரதனை அழைத்து, ‘‘குழந்தாய்! கேகய மன்னனின் புதல்வனும், உன் மாமனுமான, யுதாஜித் உன்னை அழைத்துப் போவதற்காக இங்கு வந்திருப்பது உனக்குத் தெரியும். உன் பாட்டனிடம் கொஞ்ச நாள் இருந்துவிட்டு வா. அவர் மகிழ்ச்சி அடைவார்.  நான் தரும் பரிசுகளை கொடுத்து, அங்குள்ள அனைவரையும் நான் கேட்டதாகச் சொல்.   சென்று வா‘‘ என்றான். விடைபெற்ற பரதனும் சத்ருக்கனுடன் கேகயம் சென்றான்.
அயோத்தியில் ராமனும் லட்சுமணனும் பெற்றோரின் மனம் குளிர பணிவிடைகள் செய்து வந்தனர்.  பட்டத்தரசிகள் மருமகள்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar