Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஆண்டாள் கிளி
 
பக்தி கதைகள்
ஆண்டாள் கிளி

நாம் பேசுவதை கேட்டு திரும்பச் சொல்லும் தன்மை கொண்டது கிளி. இதை வளர்ப்பதில் இடையூறு பெரிதாக இருப்பதில்லை. நன்றாக பழகி விட்டால் வீடு முழுவதும் அது சுற்றி வரும். பச்சைக்கிளியை விரும்பாதவர் யாரும் இருக்க முடியாது. ‘கீக்கீ’  என சத்தமாகக் குரல் எழுப்பியபடி வலம் வரும் கிளிகளை யார் தான் வெறுப்பர்?
‘உலகளந்தான் வரக் கூவாய்’ என்று குயிலைப் பார்த்து பாடிய ஆண்டாளின் இடது கையை கிளி தான் அலங்கரிக்கிறது. எப்படி இது அவளின் அடையாளமானது? அது  சுவாரஸ்யமான கதை.
                   வியாசரின் மகனான சுகப்பிரம்மம் என்னும் ரிஷியை கிளிவடிவில் ரங்கநாதரிடம் துாது அனுப்பியவள் ஆண்டாள். “துாது சென்று வந்த கிளியிடம் என்ன வரம் வேண்டும்?’’ என கேட்க சுகப்பிரம்மம், ‘‘ கிளி ரூபத்தில் உங்கள் கையில் தினமும் இருக்க அருள்புரிய வேண்டும்’’ என வேண்டினார். அதனாலேயே ஆண்டாள் கையில் கிளி உள்ளது.
 
                         
                     பக்தர்கள் தங்களின் விருப்பதைக் கூறும் போது அதைக் கேட்கும் கிளி அடிக்கடி ஞாபகப்படுத்தி ஆண்டாளிடம் பிரார்த்தனையை நினைவுபடுத்தும். நமக்கான கடினமான விஷயத்தை அல்லது பணியை முடிப்பதற்கு நம் சார்பில் யாராவது இருந்து பேசி முடித்தால் நன்றாக இருக்கும் தானே. அதைத் தான் ஆண்டாளின் கிளியும் செய்கிறது. குழந்தைகள் ஒரு கோரிக்கை வைத்தால் அதை அம்மாதான் அப்பாவிடம் அவ்வப்போது நினைவுபடுத்துவாள். முக்கிய பதவி, பொறுப்பில் இருப்பவர்கள் ‘பர்சனல் அசிஸ்டன்ட்’ வைப்பது போலத்தான் இதுவும்.
இத்தனை சிறப்பு பெற்ற கிளியை பெறுவது பாக்கியம் அல்லவா! நம் வீட்டு பூஜையறையில் கிளி இருந்தால் நல்வாழ்வு அமையும். பூஜையில் வைத்த கிளியைப் பெற விரும்புவோர் கோயிலில் பணம் செலுத்தி பதிவு செய்து வாங்கலாம். ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்தக் கிளியை ‘தத்தை’ என அழைப்பார்கள்.




                  ஆண்டாளின் கிளியை உருவாகும் விதம் சிறப்பானது. வாழைநார், மரவள்ளிக்கிழங்கின் இலைகளால் கிளியின் உடல், முகத்தை வடிவமைப்பர். சிறகுகளுக்கு நந்தியாவட்டை இலைகள் பயன்படுத்தப்படுகின்றன. கிளி உருவாக நடுவில் வைக்கப்படும் மூங்கில் குச்சிகளை இந்த இலைகள் மறைக்கின்றன. கிளி உட்கார்ந்திருப்பது போல் காட்டுவதற்கு நந்தியாவட்டைப்பூக்கள் பயன்படுகின்றன. கழுத்துக்கு ஆபரணமாக பனைஓலையும், பச்சிலைகளும் சாத்தப்படுகின்றன. வாலுக்கு வெள்ளை அரளி, செவ்வரளி மொட்டுகள் உதவுகின்றன. ‘காக்காப்பொன்’ கண்களாக பொருத்தப்படுகின்றன. இறுதியாக இரண்டு மூங்கில் குச்சிகளை பென்சில் போல சீவி, காலில் வைத்து கட்டிவிட்டால் கிளி தயாராகி விடும். இதை தயாரிக்க நான்கு மணி நேரம் பிடிக்கும்.

தினமும் ஆண்டாளுக்கு மாலை நேர பூஜையின் போது கிளி சாத்தப்படுகிறது. மறுநாள் காலை விஸ்வரூப தரிசனத்தின் போது கிளியை எடுப்பர்.  இக்கிளியை  ‘தடை நீக்கும் கல்யாண கிளி’ என்பார்கள்.
     வெளியூர் பக்தர்கள் தேங்காய், பழத்துடன் கிளியும் வாங்கி கொடுத்தாலும் அர்ச்சகர் ஆண்டாளின் திருவடிகளில் சமர்ப்பித்து உடனடியாக பிரசாதமாக வழங்குவர். இதை பூஜையறையில் வைத்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கும். சுபிட்சம் நிலவும். தம்பதியர் ஒற்றுமை நிலைக்கும்.  
      தாய் தனக்கு இடது பக்கத்தில் குழந்தையை வைத்து உணவூட்டுவது போல  வாஞ்சையுடன் தன் இடது பக்கத்தில் தாங்கியபடி கிளியை பார்த்துக் கொள்கிறாள். ‘ஆண்டாளே… நீயே துணை’ எனச் சரணடைந்தால் கிளியைப் போல நம்மையும் தனக்கு நெருக்கமாக்கிக் கொள்வாள்.
                        அது சரி, இந்தக் கிளி பெருமாளுக்கும் நெருக்கமான கதை தெரியுமா? திருச்சி ஸ்ரீரங்கம் பெருமாள் எல்லா அலங்காரத்திலும் அழகாக இருப்பார் என்றாலும் கிளிமாலையுடன் காண்பது கூடுதல் அழகு. அதுமட்டுமல்ல ஸ்ரீரங்கத்தில்  மண்டபங்களை கிளிமண்டபம் என அழைக்கும் வழக்கம் முன்பிருந்தது.  வைணவ ஆச்சாரியர்கள் பலர் திவ்ய பிரபந்த பாசுரங்களை அனுபவித்து சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி ரசித்த இடங்கள் இவை. இன்றும் அ்ங்கு ஆச்சாரியர்கள் திரும்பத் திரும்பச் சொல்ல பெருமாள் கேட்டுக் கொண்டே இருப்பதாக ஐதீகம்.  
‘சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை’ என்பார்களே! அதன் மற்றொரு பொருள் இதுதான் போலிருக்கிறது.  

ஆனைச்சாத்தன்,  கருடன்,  அன்னம்,  கோழி,  குயில் என பலவித பறவைகளை பாசுரங்களில் குறிப்பிடும் ஆண்டாள் கிளியை மட்டும் தனதாக்கிக் கொண்டாள். அதுமட்டுமல்ல, திருப்பாவை பாடலில் தோழி ஒருத்தியை ‘எல்லே! இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ?’ என அழைக்கிறாள். தோழியே! இளங்கிளியைப் போன்ற இனிமையாக பேசுபவளே, இன்னமும் துாங்குகிறாயே என்கிறாள். இந்த பாசுரத்தில் தோழிகளுக்கு இடையே நடக்கும் வாக்குவாதம் சுவாரஸ்யமானது.

    ‘என்னை இப்படி அற்பமாக அழைக்காதீர்கள். போதும் புகழ்பாட்டு. இதோ வருகிறேன்’ என்கிறாள் கிளி என அழைக்கப்பட்டவள்.  ‘நீ பொய் கூறுவதில் வல்லவள் என்பது இப்போதுதானா தெரியும். உன் பேச்சின் மூலம் நாங்கள் முன்னமே அறிவோம்” என்றார்கள் மற்ற பெண்கள்.
                “நீங்களே வல்லவர்களாக இருந்து விட்டு போங்கள், நான் நானாகவே இருந்து விட்டு போகிறேன்” என்றாள் கிளிமொழியாள். ‘‘சரி, விரைவாக வா. உனக்கென்ன தனித்துவம்” என்கிறார்கள் மற்றவர்கள்.  இப்படி வாக்குவாதம் நடந்த பின் அனைவரும் கோயிலுக்கு புறப்படுகிறார்கள்.

                      ஆனால் வேடிக்கை பாருங்கள்! பாசுரத்தை பாடிய ஆண்டாள் ‘இளங்கிளி’ எனக் குறிப்பிடுவது உண்மையான ஒரு கிளியைத்தான். ரங்கனின் கையில் இருக்கும் இந்த கிளி, ‘ ரங்கா, ரங்கா’  என
சொல்வது போல பாசுரத்தை அமைத்திருக்கிறாள். ரங்கா, ரங்கா என அழைக்கும் கிளிக்காகக் கூட அரங்கன் ஓடி வருவான். ஆக, பாசுரத்தின் சாயல்படி அரங்கனின் கையிலே இருக்கும் கிளியைப் போல இனிய சொற்களை உடைய பெண்ணே என்று தான் ஆண்டாள் அழைக்கிறாள் என்றும் பொருள் உண்டு. ஆனால் அந்தப் பெண் புரிந்து கொண்ட விதம் வேறாகிப் போனதால் வேடிக்கையான வாக்குவாதம் தோன்றி மறைகிறது. இப்படி ஆண்டாள் நினைவுகளில் நீக்கமற நிறைந்திருக்கிறது கிளி!

                        கிளியின் பேச்சு அழகும் இனிமையும் நிறைந்தது. அட பேச்சு எம்மாத்திரம்? நான்கு வேதங்களைக் கூடக் கிளி சொல்லுமாம். ஆச்சர்யம் தானே. நர்மதை ஆற்றின் கரையில் நின்றிருந்த பெண்களிடம் ஆதிசங்கரர், தான் தேடி வந்த அறிஞரின் வீட்டுக்கு வழி கேட்டபோது அவர்கள் கவிதை வடிவில் பதிலளித்தார்களாம்.  ‘‘எந்த வீட்டில் கிளிகள் வேதம் சொல்லுகிறதோ அந்த வீட்டுக்கு போங்கள். அதுவே அந்த அறிஞரின் வீடு” என்றனர்.

வேதம் சொல்லும் கிளி திருடனைப் பிடிக்காதா என்ன? கோயில்களில் நடந்த பல விசித்திரக் கொள்ளைகளை எல்லாம் கோயில்களில் வளர்க்கப்பட்ட பஞ்சவர்ண கிளிகள் கண்டுபிடித்து தந்ததாக சனாதன தர்மத்தை பாதுகாத்த விஜயநகர மன்னர்களின் வரலாறு கூறுகிறது.  500 ஆண்டுகளுக்கு முன்பு மன்னர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் நடந்த சம்பவம் இது. நாட்டில் நடந்த பெரிய திருட்டு ஒன்றைப் பற்றி மன்னரிடம் எப்படி சொல்வது என மந்திரி தயங்கினார். அப்போது அதைக் கிளி மூலம் தெரிவித்து மன்னரின் தலைமையில் புறப்பட்டு திருடனைக் கண்டுபிடித்தனர். கிளிப்பேச்சால் எத்தனை நன்மை பாருங்கள்!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar