|
திண்ணையில் கண்களை மூடி ஜபம் செய்து கொண்டிருந்தார் தியாகராஜர், அப்போது குரல் ஒன்றை கேட்டு கண் விழித்தார். தம்பதியுடன் ஒரு இளைஞன் அவர் முன் நின்றனர். அந்த முதியவர் பேச ஆரம்பித்தார் ஸ்வாமி... நாங்கள் ரொம்ப தூரத்தில் இருந்து வருகிறோம். ராமேஸ்வரம் போகணும். இன்று இரவு மட்டும் உங்கள் வீட்டில் தங்கி விட்டு, காலையில் கிளம்புகிறோம் என்றார் முதியவர். சரி என்றார் ஸ்வாமிகள். வீட்டிற்குள் அவர்களை அழைத்து வந்து மனைவி கமலாவிடம் இவர்கள் விருந்தாளிகள். இன்று நம் வீட்டில் தான் தங்க போகிறார்கள் உணவு தயார் செய் என்றார். முதியவர் கொண்டு வந்த தினை மாவினை அவளிடம் கொடுக்க உணவு தயாரானது. உணவு உண்ட பின்னர் நீண்ட நேரம் பேசி விட்டு உறங்கினர். மறுநாள் காலையில் ஸ்வாமிகள் அந்த மூவரும் ரொம்ப சந்தோஷம் ..... நாங்கள் கிளம்புகிறோம் என நன்றி சொன்னார்கள். அவர்களை வழியனுப்ப தெருவிற்கு வந்த தியாகராஜருக்கு ஒரு காட்சி தோன்றியது. அந்த முதியவர், ராமபிரானாகவும். அவரது மனைவி, சீதையாகவும், அந்த இளைஞன், அனுமனாகவும் காட்சி அளித்தனர். தெரு என்று கூட பாராமல் அந்த இடத்தில் விழுந்து வணங்க... அவர் வாக்கில் இருந்து சீதாம்மா மாயம்மா என்ற கீர்த்தனை பிறந்தது. |
|
|
|