|
ஸ்ரீரங்கம் அரங்கநாதனை காக்க அந்நியப்படையுடன் மக்கள் ஓயாமல் போரிட்ட காலம் அது. கோயிலில் இருக்கும் செல்வங்களை எல்லாம் கொள்ளையடித்த அவர்கள் இன்னும் விலையுயர்ந்த செல்வங்களுக்காக அங்கேயே கூடாரமிட்டு தங்கி இருந்தனர். அரங்கனின் சேவைக்காகவே கோயிலில் தொண்டு செய்து வாழ்ந்த வெள்ளையம்மாள் அந்நியப்படை தளபதிக்கு ஆசைநாயகியாக இருக்க சம்மதம் தெரிவித்தாள்.
அரங்கனின் பக்தையான அவளின் செயலால் அதிர்ச்சியாயினர் மக்கள். அவர்களுக்கு அதை விட பலத்த அதிர்ச்சி அவள் மூலம் இருக்கிறது என்பது அரங்கனுக்கு கூட தெரியாமல் போனது வியப்பு தான். ஸ்ரீரங்கத்தை கைப்பற்றிய மகிழ்ச்சியில் வீரர்கள் அனைவரும் மதுவுண்ட களிப்பில் மயங்கி இருந்தனர். அன்று நள்ளிரவில் அந்நியப்படைத்தளபதியை சந்திக்க ஆசைப்பட்டாள். அவரிடம் சென்று தாங்கள் வந்த நோக்கம் தான் நிறைவேறி விட்டதே பின்னர் ஏன் உங்கள் நாட்டிற்கு இன்னும் செல்ல வில்லையா எனக்கேட்டாள். அதற்கு இங்கு தான் விலையுயர்ந்த பொக்கிஷங்கள் உள்ளனவாம். அது எங்கிருக்கிறது என தெரிந்தால் அதையும் எடுத்துச் செல்வோம் என சொன்னார் தளபதி. இவ்வளவு தானா.. எனக்கு தெரியும் என கூறிய வெள்ளையம்மாள், கிழக்கு கோபுரத்தை காட்டி அதன் உச்சியில் உள்ளது என்றாள். பேராசை பிடித்த படைத்தளபதி அவளுடன் பின் செல்ல, கோபுர உச்சிக்கு சென்றதும் அவனை பிடித்து கீழே தள்ளிக் கொன்று, தன்னுயிரையும் நீத்தாள். தலைமை இல்லாத வீரர்களை மக்கள் அடித்து துவைத்து விரட்டினர். இன்றும் பக்தர்கள் மனதில் வெள்ளையுள்ளமுடைய வெண்ணிலாவாக ஜொலிக்கிறாள் வெள்ளையம்மா. அதனால் அவள் பெயரால் அக்கோபுரம் இன்றும் ‘வெள்ளை கோபுரம்’ என அழைக்கப்படுகிறது.
|
|
|
|