முதல் பக்கம்> தேவாரம் பாடல்கள்
தேவாரம் பாடல்கள் - இசை வடிவில்
பாடியவர் : கலைமாமணி முனைவர் தி.சுரேஷ்சிவன், மதுரை
1 . தேவாரம் (இசை வடிவில்) இறைவணக்கம்
பாடல்
:
உமாபதி சிவம் பூழியர்கோன் வெப்பொழித்த, புகலியர் கோன் சுழல் போற்றி ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடி போற்றி வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி.கணபதி வணக்கம் - ஞானசம்பந்தர் திருவலிவலம் : திருவிராகம் : பண் - வியாழக்குறிஞ்சி பிடியதன் உரு உமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர் கடி கணபதி வர அருளினன், மிகுகொடை வடிவினர் பயில்வலி வலமுறை இறையே!
2 . திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய முதல் தேவாரப் பதிகம். தலம்: திருப்பிரமபுரம். பண் - நட்டபாடை
பாடல்
:
திருஞானசம்பந்தர் தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக் காடுடையசுட லைப்பொடிபூசியென் உள்ளங்கவர்கள்வன் ஏடுடையமல ரான்முனைநாட்பணிந்து ஏத்தஅருள்செய்த பீடுடையபி மாபுரமேவிய பெம்மான் இவனன்றே. அருநெறிய மறை வல்ல முனியகன் பொய்கை அலர்மேய பெருநெறிய பிரமாபுரமேவிய பெம்மானிவன் தன்னை ஒருநெறிய மனம் வைத்துணர் ஞானசம் பந்தன் உரைசெய்த திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே.திருச்சிற்றம்பலம்
3 . திருநீற்றுப் பதிகம்: தலம்; திருஆலவாய் - பண் : காந்தாரம்
பாடல்
:
திருஞானசம்பந்தர் மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவா வாயுமை பங்கன் திருஆலவாயான் திருநீறே. முத்தி தருவது நீறு முனிவா அணிவது நீறு சத்திய மாவது நீறு தக்கோட் புகழ்வது நீறு பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு சித்தி தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே. ஆற்றல் அடல்விடையேறும் ஆலவாயான் திருநீற்றைப் போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன் தேற்றித் தென்னன் உடலுற்ற தீப்பிணி யாயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே. திருச்சிற்றம்பலம் பதிக வரலாறு: மதுரையில் திருஞான சம்பந்தர் தங்கியிருந்த மடத்தில் சமணர்கள் வைத்த தீயானது பையவே சென்று கூன்பாண்டியனை வெப்பு நோயாகப் பற்றிக் கொள்ள அது தீருமாறு பாடியருளியதாகும்.
4 . நமசிவாயத் திருப்பதிகம்: பண் - காந்தார பஞ்சமம்
பாடல்
:
திருநாவுக்கரசர் சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோட; கடலில் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே. இலக்க விளக்கது இருள் கெடுப்பது சொல்லக விளக்கது சோதி உள்ளது பல்லக விளக்கது பலரும் காண்பது நல்லக விளக்கது நமச்சி வாயவே. மாப்பிணை தழுவிய மாதொட; பாகத்தான் பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்து ஏத்தவல்லார் தமக்கு இடுக்கண் இல்லையே. திருச்சிற்றம்பலம்
5 . திருவாலவாய் : பண் : புறநீர்மை
பாடல்
:
திருஞானசம்பந்தர் மங்கையர்க்கரசி வளவாகோன் பாவை வாவளைக் கைம்மட மானி பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாள்தொறும் பரவப் பொங்கழல் உருவன் பூதநா யகன்நால் வேதமும் பொருள்களும் அருளி அங்கயற் கண்ணி தன்னொடும் அமா;ந்த ஆலவா யாவதும் இதுவே. பன்னலம் புணரும் பாண்டிமா தேவி குலச்சிறை யெனும்இவா; பணியும் அந்நலம் பெறுசீ; ஆலவாய் ஈசன் திருவடி ஆங்கவை போற்றிக் கன்னலம் பொய காழியுள் ஞான சம்பந்தன் செந்தமிழ் இவைகொண்டு இன்னலம் பாட வல்லவர் இமையோ; ஏத்தவீற் றிருப்பவர் இனிதே. திருச்சிற்றம்பலம்
6 . திருஅதிகை வீரட்டானம் : பண் : கொல்லி
பாடல்
:
திருநாவுக்கரசர் கூற்றாயின வாறு விலக்ககிலீட; கொடுமை பல செய்தன நானறியேன் ஏற்றாய்! அடிக்கே இரவும் பகலும் பிடணீயாது வண்ங்குவன் எப்பொழுதும் தோற்றாது என் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேன் அடியேன் அதிகைக்கெடில வீரட்டானத்துறை அம்மானே. சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன் நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன் நாமம் என் நாவில் மறந்தறியேன் உலந்தாட; தலையில் பலி கொண்டு உழல்வாய் உடல் உள்ளுறு சூலை தவிட;த்தருளாய் அலந்தேன் அடியேன் அதிகைக்கெடில வீரட்டானத்துறை அம்மானே. திருச்சிற்றம்பலம் இறைவன் : வீரட்டேசுவரர் இறைவி : திரிபுரசுந்தரி இப்பதிகம் சூலை நோய் நீங்க ஓதியருளியது.
7 . திருஅங்கமாலை : பொது : பண் - சாதா
பாடல்
:
திருநாவுக்கரசர் தலையே நீ வணங்காய் - தலை மாலை தலைக்கணிந்து தலையாலே பலிதேருந் தலைவனைத் தலையேநீ வணங்காய் நெஞ்சே நீ நினையாய் - நிமிட;புன்சடை நின்மலனை மஞ்சாடும்மலை மங்கைம ணாளனைநெஞ்சே நீ நினையாய் இறுமாந் திருப்பன்கொலோ - ஈசன் பல்கணத் தெண்ணப்பட்டுச் சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச் சென்றங்கிறுமாந் திருப்பன்கொலோ. தேடிக் கண்டு கொண்டேன் - திருமாலொடு நான்முகனும் தேடித் தேடொணாத் தேவனை என்னுளேதேடிக் கண்டு கொண்டேன்.திருச்சிற்றம்பலம்
8 . நமசிவாயத் திருப்பதிகம் பொது : பண் - காந்தார பஞ்சமம்
பாடல்
:
திருநாவுக்கரசர் சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோட; கடலில் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே. இலக்க விளக்கது இருள் கெடுப்பது சொல்லக விளக்கது சோதி உள்ளது பல்லக விளக்கது பலரும் காண்பது நல்லக விளக்கது நமச்சி வாயவே. மாப்பிணை தழுவிய மாதொட; பாகத்தான் பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்து ஏத்தவல்லாட; தமக்கு இடுக்கண் இல்லையே.திருச்சிற்றம்பலம்
9 . திருவாவடுதுறை : பண் - காந்தாரபஞ்சமம் இறைவன்: மாசிலாமணியீசர். இறைவி : ஒப்பிலா முலையம்மை
பாடல்
:
திருஞானசம்பந்தர் இடரினும் தளரினும் எனதுறு நோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே. இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக் கில்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே. அலைபுனல் ஆவடு துறை அமா;ந்த இலைநுனை வேற்படை எம்மிறையை நலமிகு ஞானசம்பந்தன் சொன்ன விலையுடை அருந்தமிழ் மாலை வல்லாட; விலையாயின நீங்கிப்போய் விண்ணவா; வியனுலகம் நிலையாக முன்னேறுவா; நிலமிசை நிலையிலரே.திருச்சிற்றம்பலம்
10 . திருவாலவாய் : பண் : புறநீர்மை
பாடல்
:
திருஞானசம்பந்தர் மங்கையர்க்கரசி வளவர்;கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாள்தொறும் பரவப் பொங்கழல் உருவன் பூதநா யகன்நால் வேதமும் பொருள்களும் அருளி அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவா யாவதும் இதுவே. பன்னலம் புணரும் பாண்டிமா தேவி குலச்சிறை யெனும்இவர் பணியும் அந்நலம் பெறுசீட; ஆலவாய் ஈசன் திருவடி ஆங்கவை போற்றிக் கன்னலம் பெரிய காழியுள் ஞான சம்பந்தன் செந்தமிழ் இவைகொண்டு இன்னலம் பாட வல்லவா; இமையோட; ஏத்தவீற் றிருப்பவர்; இனிதே.திருச்சிற்றம்பலம்
11 . திரு ஆலவாய் திருவிருக்குறள் பண் : குறிஞ்சி சம்பந்தர்
பாடல்
:
நீல மாமிடற்றால வாயிலான் பாலதாயினார், ஞாலமாள்வரே ஞாலம் ஏழுமாம் ஆலவாயிலார் சீலமே சொலீர் காலன் வீடவே ஆல நீழலார், ஆல வாயிலார் கால காலனார், பால தாமினே அந்த மில்புகழ் எந்தை யாலவாய் பந்தி யார்கழல், சிந்தை செய்ம்மினே ஆட லேற்றினான், கூட லாலவாய் பாடி யேமனம், நாடி வாழ்மினே அண்ணல் ஆலவாய், நண்ணினான் தனை எண்ணி யேதொழத் திண்ண மின்பமே அம்பொ னாலவாய், நம்ப னார்கழல் நம்பி வாழ்பவர், துன்பம் வீடுமே அரக்க னார்வலி, நெருக்க னாலவாய் உரைக்கு முள்ளத்தார்க்கு, இரக்க முண்மையே அருவ னாலவாய், மருவி னான்றனை இருவ ரேத்தநின், றுருவ மோங்குமே ஆர நாகமாம், சீர னாலவாய்த் தேர மண்செற்ற, வீர னென்பரே ஆடிக ளாலவாய், படிகொள் சம்பந்தன் முடிவி வின்தமிழ் செடிகள் நீக்குமே
12 . திரு ஆலவாய் பண் : கொல்லி சம்பந்தர்
பாடல்
:
மானினேர் விழி மாதராய் வழுதிக்கு மாபெருந்தேவி கேள்! பானல்வாயொரு பாலன் ஈங்கிவன் என்று நீ பரிவெய் திடேல்! ஆனை மாமலை யாதியாய இடங்களிற் பல அல்லல் சேர் ஈனர்கட் கெளியேன் அலேன்திரு ஆலவாயரன் நிற்கவே!" எக்கராம் அமண் கையருக்கு எளியேன் அலேன் திருஆலவாய்ச் சொக்கன் என்னுள் இருக்கவே, துளங்கும்முடித்தென்னன் முன்னிவை தக்க சீர்ப்புகலிக்குமன் தமிழ்நாதன் ஞானசம்பந்தன்வாய் ஒக்கவேயுரை செய்த பத்தும் உரைப்பவர்க்கு இடர் இல்லையே.
13 . திரு ஆலவாய் பண் : கௌசிகம் சம்பந்தர்
பாடல்
:
செய்யனே திரு ஆலவாய் மேவிய ஐயனே அஞ்சல் என்றருள் செய்யெனைப் பொய்யராம் அமணா; கொளுவுஞ் சுடர்; பையவே சென்று பாண்டியற் காகவே
14 . திரு ஆலவாய் பண் - கௌசிகம் சம்பந்தர்
பாடல்
:
காட்டு மாவது உரித்துரி போர்த்துடல் நாட்ட மூன்றுடை யாயுரை செய்வனான் வேட்டு வேள்விசெய் யாவமண் கையரை ஒட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே.
15 . திரு ஆலவாய் பண்: பழம் பஞ்சுரம் சம்பந்தர்
பாடல்
:
வேதவேள்வியை நிந்தனை செய்துழல் ஆதமில்லி யமணொடு தேரரை வாதில் வென்றழிக்கத் திருவுள்ளமே பாதி மாதுடனாய பரமனே ஞாலம் நின்புகழேமிக வேண்டும்தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே கூடல் ஆலவாய்க் கோனை விடைகொண்டு வாடல் மேனி யமணரை வாட்டிட மாடக் காழிச் சம்பந்தன் மதித்த இப் பாடல் வல்லவர் பாக்கிய வாளரே
16 . திருநீற்றுப் பதிகம் பண் : காந்தாரம் சம்பந்தர்
பாடல்
:
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே. முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு பத்தி தருவது நீறு பரவ வினியது நீறு சித்தி தருவது நீறு திருவால வாயான் திருநீறே. ஆற்ற லடல்விடை யேறு மால வாயான்றிரு நீற்றைப் போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன் தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.
17 . திரு ஆலவாய் பண் : கௌசிகம் சம்பந்தர்
பாடல்
:
வீடலால வாயிலாய் விழுமியார்க ணின்கழல் பாடலால வாயிலாய் பரவநின்ற பண்பனே காடலால வாயிலாய் கபாலிநீள்க டிம்மதில் கூடலால வாயிலாய் குலாயதென்ன கொள்கையே. குற்றநீ குணங்கணீ கூடலால வாயிலாய் சுற்றநீ பிரானுநீ தொடர்ந்திலங்கு சோதிநீ கற்றநூற் கருத்துநீ யருத்தமின்ப மென்றிவை முற்றுநீ புகழ்ந்துமுன் னுரைப்பதென்மு கம்மனே. போயநீர் வளங்கொளும் பொருபுனற் புகலியான் பாயகேள்வி ஞானசம் பந்தன்நல்ல பண்பினால் ஆயசொல்லின் மாலைகொண்டு ஆலவாயிலண்ணலைத் தீயதீர எண்ணுவார்கள் சிந்தையாவர் தேவரே.
18 . திரு ஆலவாய் பண் : பழம்பஞ்சுரம் திருவியகம் சம்பந்தர்
பாடல்
:
ஆலநீழ லுகந்த திருக்கையே யானபாட லுகந்த திருக்கையே பாலினேர்மொழி யாளொரு பங்கனே பாதமோதலர் சேர்புர பங்கனே கோலநீறணி மேதகு பூதனே கோதிலார்மன மேவிய பூதனே ஆலநஞ்சமு துண்ட களத்தனே யாலவாயுறை யண்டர் களத்தனே. ஈனஞானிக டம்மொடு விரகனே யேறுபல்பொருண் முத்தமிழ் விரகனே ஆனகாழியுண் ஞானசம்பந்தனே யாலவாயினின் மேயசம் பந்தனே ஆனவானவர் வாயினு ளத்தனே யன்பரானவர் வாயினு ளத்தனே நானுரைத்தன செந்தமிழ் பத்துமே வல்லவர்க்கிவை நற்றமிழ் பத்துமே.
19 . ஆலவாய் நாவுக்கசரசர்
பாடல்
:
வேதியா வேத கீதா விண்ணவ ரண்ணா வென்றென் றோதியே மலர்கள் தூவி யொருங்கிநின் கழல்கள் காணப் பாதியோர் பெண்ணை வைத்தாய் படர்சடை மதியஞ் சூடும் ஆதியே யால வாயில் அப்பனே யருள்செ யாயே.
20 . திருவாலவாய் திருத்தாண்டகம் அப்பர்
பாடல்
:
முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி முதிருஞ் சடைமுடிமேல் முகிழ்வெண் டிங்கள் வளைத்தானை வல்லசுரர் புரங்கள் மூன்றும் வரைசிலையா வாசுகிமா நாணாக் கோத்துத் துளைத்தானைச் சுடுசரத்தாற் றுவள நீறாத் தூமுத்த வெண்முறுவல் உமையோ டாடித் திளைத்தானைத் தென்கூடற் றிருவா லவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
21 . திருவாலவாய் அப்பர்
பாடல்
:
வாயானை மனத்தானை மனத்துள் நின்ற கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் தன்னைத் தூயானைத் தூவெள்ளை ஏற்றான் தன்னைச் சுடர்திங்கட் சடையானைத் தொடர்ந்து நின்ற என் தாயானைத் தவமாய தன்மையானைத் தலையாய தேவாதி தேவர்க்கென்றும் சேயானைத் தென்கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
22 . கோளறு பதிகம் பண் : பியந்தைக் காந்தாரம் சம்பந்தர்
பாடல்
:
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம்பி ரண்டு முடனே ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
தேனமர் பொழில் கொளாலை விளைசெந்நெல்துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன் தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய் ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே
23 . திருப்புகழ் - அருணகிரி நாதர்
பாடல்
:
பரவு நெடுங்கதிருலகில் விரும்பிய பவனி வரும்படி யதனாலே பகர வளங்களு நிகர விளங்கிய இருளை விடிந்தது நிலவாலே வரையினி லெங்கணு முலவி நிறைந்தது வரிசைத ரும்பத மதுபாடி வளமொடு செந்தமி ழுரைசெய அன்பரு மகிழவ ரங்களும் அருள்வாயே அரஹர சுந்தர அறுமுக என்றுனி அடியார் ப ணிந்திட மகிழ்வோனே அசலநெடுங்கொடி அமையுமை தன்சுத குறமக ளிங்கித மணவாளா கருதரு திண்புய சரவண குங்கும களபம ணிந்திடு மணிமார்பா கனகமி கும்பதி மதுரைவ ளம்பதி யதனில்வ ளர்ந்தருள் பெருமாளே
24 . சொக்கநாத வெண்பா
பாடல்
:
உனக்கு பணி செய்ய உன்தனை எந்நாளும் நினைக்க வரம் எனக்கு நீதா - மனக்கவலை நீக்குகின்ற தென்மதுரை நின்மலனே எவ்வுலகும் ஆக்குகின்ற சொக்கநாதா திருச்சிற்றம்பலம்