பதிவு செய்த நாள்
04
நவ
2020
02:11
சுபகிரகமான குருபகவான் ஒரு ராசியை கடக்க ஆகும் காலம் ஒரு ஆண்டு. பெரும்பாலும் நன்மையே செய்யும் குருபகவான், சில சமயத்தில் கெடுபலன் அளித்தாலும் மாணவனை கண்டிக்கும் ஆசிரியர் போல் அதுவும் நம் நன்மைக்கே. தற்போது தனுசு ராசியில் இருக்கும் குருபகவான் 2020 நவ.15 ஞாயிறு இரவு 9:49 மணிக்கு மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 2021 நவ.13 சனிக்கிழமை மாலை 6.21 மணி வரை மகர ராசியில் சஞ்சரிப்பார். இதற்கிடையில் 2021 ஏப்.5 – செப்.14 வரை கும்ப ராசியில் அதிசாரம் அடைகிறார்.
குரு பயோடேட்டா
திசை – வடக்கு
பிடித்த ராசி – தனுசு, மீனம்
அதிதேவதை – பிரம்மா
நிறம் – மஞ்சள்
தானியம் – கொண்டைக்கடலை
மலர் – வெண்முல்லை
உலோகம் – தங்கம்
நைவேத்யம் – கடலைப்பொடி சாதம்
வாகனம் – யானை
நட்பு கிரகம் – சூரியன், சந்திரன், செவ்வாய்
பகை கிரகம் – புதன், சுக்கிரன்
மனைவி – தாரை
குழந்தைகள் – பரத்வாஜர், யமகண்டன், கசன்
விசேஷ தலம் – ஆலங்குடி, திருச்செந்துார்
ஆங்கிலப்பெயர் – ஜூபிடர்
பிற பெயர்கள் – பிரகஸ்பதி, தேவகுரு, வியாழன்
வழிபாட்டு பலன் – திருமணம், குழந்தைப்பேறு, படிப்பு, பணம்