Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சகோதரர்களின் நலத்தையும் வளத்தையும் ... ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் ஆடித்தபசு கோலாகலம்! ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எலியும் பூனையும் பகையான கதை தெரியுமா?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2012
12:07

வெகு காலத்திற்கு முன் ஒரு பூனையும் எலியும் மிகவும் நட்பாகப் பழகி வந்தன. ஒரே வீட்டில் இரண்டும் சேர்ந்து வாழ்ந்தன. ஒரு நாள் எலி, பூனையிடம், நண்பரே! விரைவில் மழைக் காலம் வந்துவிடும். ஆகையால் நமக்குத் தேவையான உணவுப் பொருட்களை முன்கூட்டியே சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியது. பூனையும் அதற்கு ஒப்புக்கொண்டது. இரண்டும் உணவுப்பொருட்களைத் தேடிப் புறப்பட்டன. போகும் வழியில் அடர்ந்த செடிகளுக்கு மத்தியில் ஒரு பானை இருப்பதைக் கண்டன. அதை நெருங்கிச் சென்று மூடியைத் திறந்து பார்த்தன. பானை முழுதும் நெய் நிரம்பியிருப்பதைக் கண்டன. அவற்றிற்கு மகிழ்ச்சியோ தாங்க முடியவில்லை. அதனை சிறிது எடுத்து ருசி பார்த்துவிட்டு, ஆகா! என்ன சுவை? எவ்வளவு மணம்! என்று துள்ளிக் குதித்தன. அந்த நெய் நீண்ட நாட்களுக்குப் பயன்படும் என்று கருதி,  அதனை ஒரு இடத்தில் பாதுகாப்பாக வைக்க வேண்டுமே என்று ஆலோசித்தன. சுற்றுமுற்றும் இடம் தேடின. ஒரு மரத்தில் ஒரு பெரிய பொந்து இருந்தது. அதில் பதுக்கி வைத்துவிட்டால் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்று எண்ணின. அதன்படி நெய்க் குடத்தை பாதுகாப்பாக மறைத்து வைத்துவிட்டு மழைக்காலத்தில் கவலையே இல்லை என்று மகிழ்ச்சியுடன் தங்கள் இருப்பிடத்திற்கு எலியும் பூனையும் திரும்பின. பூனை மட்டும் அந்த நெய்க் குடத்தைப் பற்றி எண்ணிக் கொண்டே இருந்தது. அதனால் கட்டுப்பட்டு இருக்க முடியவில்லை. தானே அதைப் பருகவேண்டும் என்று எண்ணியது. எலியை எப்படி ஏமாற்றுவது என்று எண்ணிப் பார்த்தது. தனக்குள் ஒரு திட்டம் போட்டுக் கொண்டது.

பூனை, எலியிடம் அன்பான நண்பரே! சற்றுத் தொலைவில் என் சகோதரிகள் உள்ளனர். என் தங்கையொருத்திக்கு நாளை திருமணம் நடக்கிறது. காலையில் அங்கு சென்று மதியம் திரும்பி விடுகிறேன் என்றது. எலியும் ஏற்றுக்கொண்டது. மறுநாள் பூனை எலியிடம் கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றது. பானையை மறைத்து வைத்திருந்த இடத்திற்குச் சென்றது. பொந்தில் இருந்த பானை மூடியைத் திறந்தது. கம கமக்கும் வாசனை நாசியைத் துளைத்தது. ஆசை தீர வயிறு நிரம்பக் குடித்தது. கால் குடம் நெய் காலியானது. மீதி முக்கால் குடம் நெய் இருந்தது. இன்றைக்கு இவ்வளவு போதும் என்ற திருப்தியுடன் பூனை தனது இடத்திற்கு வந்தது. மிக விரைவாக வந்துவிட்ட பூனையைப் பார்த்த எலி, நண்பரே! அதற்குள்ளாகவா திருமணம் முடிந்துவிட்டது. மிகவும் விரைவாகத் திரும்பி விட்டீரே? என்று வியப்புடன் கேட்டது. திருமணம் முடியும் வேளையில் சென்றேன். முடிந்ததும் விருந்து. ஆகாகா... என்ன சுவை! வயிறு நிரம்பச் சாப்பிட்டேன். உடனே திரும்பி விட்டேன் என்று ஏப்பம் விட்டது. அது சரி .... உமது தங்கையின் பெயரைச் சொல்லவே இல்லையே? என்று எலி கேட்டது. அதுவா....! முக்கால் குடத்தாள் என்றது பூனை. இதனைக் கேட்டதும் எலிக்குச் சிரிப்பு வந்துவிட்டது. என்ன நண்பரே! பெயர் மிகவும் விநோதமாக இருக்கிறதே ! இதுவரை இப்படிப்பட்ட பெயரைக் கேள்விப்பட்டதே இல்லையே! என்று கூறியது. பூனையோ, எங்கள் வீட்டில் இப்படித்தான் வித்தியாசமாகப் பெயர் வைப்பார்கள் என்று கூறிவிட்டது. அதன் பிறகு பூனையும் எலியும் வழக்கம்போலவே இருந்து வந்தன. ஒரு நாள் கழிந்தது. மீண்டும் நெய் குடிக்க வேண்டுமென்ற ஆசை பூனைக்கு வந்துவிட்டது. எலியிடம் என்ன காரணம் சொல்லி ஏமாற்றலாம் என்று பூனை யோசனை செய்தது.

மறுநாள் காலையில் பூனை வெளியில் சென்றுவிட்டு வந்து, நண்பரே! இப்போதும் ஒரு அவசரச் செய்தி வந்துவிட்டது. எனது சகோதரனுக்கு திடீரென்று இன்று திருமணம் செய்ய முடிவு செய்துவிட்டார்களாம். நான் போய்விட்டு மிக விரைவாக வந்து விடுகிறேன் என்று எலியிடம் கூறியது. சகோதரி கல்யாணத்திற்குத்தான் தாங்கள் என்னை அழைக்கவில்லை. இந்தத் திருமணத்திற்கும் என்னை தாங்கள் அழைக்கவில்லையே! என்று ஆதங்கப்பட்டது எலி. நண்பரே! என்னைக் கூட கலந்து பேசாமல் அவசரமாகச் செய்கிறார்கள். ஏதோ கடமைக்காகத்தான் நானே செல்கிறேன். அப்படியிருக்கும்போது தங்களை அழைத்துச் செல்வது எனக்கு சரியாகப்படவில்லை. அதனால் நானே சென்று வருகிறேன் என்று கூறிவிட்டுப் புறப்பட்டது. வழக்கம் போல் நெய்க்குடம் இருக்கும் மரத்திற்குச் சென்றது. அரைக்குடம் அளவிற்கு நெய்யை வைத்துவிட்டு மீதியை நன்கு ருசித்து சாப்பிட்டுவிட்டு மிகுந்த திருப்தியுடன் சற்று நேரம் குளு குளு நிழலில் ஓய்வு எடுத்தது. பின்னர் தன் இருப்பிடத்திற்கு வந்து பலமாக ஏப்பம் விட்டது. என்ன நண்பரே! விருந்து ரொம்ப பலமோ? என்று எலி கேட்டது. அதை ஏன் கேட்கிறீர்? அவசரக் கல்யாணமாயிற்றே. எப்படி இருக்குமோ என்று நினைத்தேன். பிரமாதமாக விருந்து வைத்து அசத்திவிட்டார்கள் என்று கூறிவிட்டு, பூனை மீண்டும் ஒரு ஏப்பம் விட்டது. சரி... சகோதரர் பெயர் என்ன? என்று கேட்டது எலி. அதுவா! அரைக்குடத்தான் என்றது பூனை. மறுநாள் காலையில் மீண்டும் நெய் குடிக்கும் ஆசை பூனைக்கு வந்துவிட்டது. தனது அடுத்த சகோதரிக்குத் திருமணம் என்று கூறிவிட்டுப் புறப்பட்டுச் சென்று அரைக்குட நெய்யில் பாதியைக் குடித்துவிட்டுத் திரும்பியது. வழக்கம்போல் விருந்தைப் பாராட்டிய பூனையிடம், எலி மணப்பெண்ணின் பெயரைக் கேட்டதற்கு கால் குடத்தாள் என்று கூறிவிட்டது. மறுநாளும் நெய்யுண்ணும் ஆசை பூனைக்கு வந்துவிட்டது.

எலியிடம் தனது கடைசி தம்பிக்குக் கல்யாணம் என்று கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றது. மீதமிருந்த கால் குடம் நெய்யையும் காலியாக்கியபின் வெறுங்குடத்தை வைத்து விட்டுத் திரும்பியது. எலி, பூனையிடம் தம்பியின் பெயரென்ன என்று கேட்டதற்கு, வெறுங்குடத்தான் என்று பூனை பதில் கூறியது. சில நாட்கள் கழிந்தன. மழைக்காலம் ஆரம்பித்துவிட்டது. வீட்டில் இருந்த உணவுப் பொருட்களெல்லாம் காலியாகி விட்டன. தாங்கள் சேமித்து வைத்திருந்த நெய்குடத்தின் நினைவு வந்ததும் எலி மிகுந்த உற்சாகமடைந்தது. உடனே எலி, பூனையிடம், நண்பரே! மழைக்காலம் வந்துவிட்டது என்று கவலை வேண்டாம். நாம் மறைத்து பாதுகாத்து வைத்ததுள்ள நெய்யைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மிகுந்த ஆர்வமுடன் கூறியது. ஆம், எலியாரே! அதனைப் பாதுகாத்து வைத்தது நல்லதாகப் போய்விட்டது. அது மிகவும் பத்திரமாக உள்ளதே! என்றது பூனை. நண்பரே! அங்கே செல்வோம் என்றது எலி. இரண்டும் நெய்க்குடம் இருக்குமிடத்திற்குச் சென்றன. பொந்தை எட்டிப் பார்த்தன.

பானை இருந்த இடத்தில் அப்படியே இருக்கிறது என்று மகிழ்ச்சியடைந்த எலி, ஆர்வமுடன் குடத்தைத் திறந்து எட்டிப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தது. குடத்தில் ஒரு துளி நெய்யும் இல்லை. உடனே எலிக்கு எல்லாம் புரிந்துவிட்டது. பூனையின் நயவஞ்சகத்தை எண்ணி மனம் குமுறியது. உன்னைப் போன்ற நட்புக்குத் துரோகம் செய்தவர்களை எங்குமே பார்க்க முடியாது. நம்பிக்கைத்துரோகி நீ. முக்கால் குடத்தாள், அரைக்குடத்தான் என்றெல்லாம் நீ கதையளந்ததை நம்பி மோசம் போனேன்... என்று எலி கூறும்போதே இடைமறித்து இதற்கு மேல் நீ ஏதாவது பேசினால் உன்னையும் ஒழித்துவிடுவேன் என்று பூனை மிரட்டியது. நீ ஒரு நம்பிக்கைத்துரோகி என்று எலி கத்தியதும் கோபம் கொண்ட பூனை அதன் மேல் பாய்ந்தது. அதனை எதிர்பார்த்திருந்த எலி, பூனையிடம் அகப்படாமல் மரத்தில் தாவி ஏறி ஓடி தப்பித்துக் கொண்டது. அன்று முதல் எந்தப் பூனையும் எலியோடு நட்பு செய்வதே இல்லை. எலிகளும் பூனைகளும் நிரந்தரப் பகையாகின.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar