Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news லிங்க பூஜை அலங்காரத்தில் ... காளஹஸ்தியில் ஸ்கந்த மாதா தேவி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பு காளஹஸ்தியில் ஸ்கந்த மாதா தேவி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி ஆறாம் நாள் : சகல பாவங்களும் விலக்கிட கவுமாரியை வழிபடுங்க.!
எழுத்தின் அளவு:
நவராத்திரி ஆறாம் நாள் : சகல பாவங்களும் விலக்கிட கவுமாரியை வழிபடுங்க.!

பதிவு செய்த நாள்

01 அக்
2022
07:10

இன்று அன்னையை கவுமாரி தேவியாக வழிபட வேண்டும். மயில் வாகனமும், சேவல் கொடியும், உடையவள், தேவ சேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள்: ஓங்கார சொரூபமானவள்: சகல பாவங்களையும் விலக்கிடுபவள்: வீரத்தை தருபவள்: கல் யானை வடிவத்தை எடுப்பவள்.

சிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் கல் யானை நான்கு கைகளையும் மூன்று கண்களையும் கொண்டிருக்கும் சர்ப்ப ராஜா ஆசனத்தில் சண்டிகாதேவியாக தும்ரலோசன வதத்திற்குரிய தோற்றத்தில் அலங்கரிக்கப்பட்டு, கையில் அக்கமாலை , கமலம், தாமரைப்பூ, பொற்கவசம், ஆகியவற்றை கொண்டவளாய் பிறையணிந்த தோற்றத்தில் அமர்ந்திருக்கும் கோலம் பூஜைக்குரியது.

ஆற்றங்கரை சொற்கிழத்தி: ஏழு வயது குழந்தையை சண்டிகா என்று அலங்கரித்து அவர்களை வணங்குவது பூஜையின் ஒரு வழிபாடாகும். லலிதாம்பிகையின் அவதார தினம் அன்று, ஒன்பது வெளி வீட்டு சிறுமிகளுக்கு உடை அளித்து அவர்களை வாழ்த்தி வணங்குவது சிறப்பு. நவராத்திரியின் ஆறாம் நாளான இன்று வணங்கப்படும் சரஸ்வதி வைரத்தின் அழகு: கல்வியின் தெய்வம், பிரம்ம பிரியை, ஞான சக்தி, ஆற்றங்கரைச் சொற்கிழத்தி என்று குறிப்பிடுகிறது.

விநாயருக்கும் நவராத்திரி உண்டு...: விநாயகர் சதூர்த்தியை தொடர்ந்து வரும் ஒன்பது நாடகளை விநாயகர் நவராத்திரி என்பர். நினைக்கும் நேரத்தில் நினைத்த இடத்தில் மஞ்சள் பொடி, , களிமண் என எதில் பிடித்து வைத்தாலும் அதில் ஆவாஹனம் ஆகி, நமக்கு அருள்பாலிக்கும் கடவுள் விநாயகர், இக்கட்டான சூழ்நிலையில், ஒரு செயலை வணங்கி அந்த காரியத்தை செய்தால், அதை நிச்சயம் செய்து முடிக்க அவர் உதவி புரிவார். தூர்வா என்ற அருகம்புல்லில் மேடையமைத்து அதில் விநாயகரை எழுந்தருள செய்து முக்கனிகள், மோதகம் மற்றும் பணியாரங்கள் படைத்து, ஒவ்வொரு நாளும் ஒரு விநாயகர் ரூபத்தை வழிபடுவது சிறப்பு.

முதல் நாள் பக்தி கணபதியாக இரண்டாவது நாளில் பாலகணபதியாக, மூன்றாவது நாளில் லஷ்மி கணபதியாக, நான்காவது நாளில் தருண கணபதியாக, அருள் தருகிறார். ஐந்தாம் நாளில் சந்தான கணபதியாக , ஆறாம் நாளில் நர்த்தன கணபதியாகவும், ஏழாம் நாளில் ருணமோட்சன கணபதியாகவும், எட்டாம் நாள் சங்கடஹர கணபதியாகவும் தோற்றமளிப்பவர். ஒன்பதாம் நாள் சொர்ண கணபதியாக ஆபரணங்களோடு காட்சியளிக்கிறார். விநாயக சதூர்த்தியாக கொண்டப்படும் பத்தாம் நாள் மஹா கணபதியாக வழிபட்டு, புனர் பூஜை செய்து, விநாயகர் சதூர்த்தி பூஜையை வீட்டில் வழக்கம் போல செய்து விநாயகரை வணங்க வேண்டும்.

சகல பாவங்களையும் விலக்கிட கவுமாரி தேவி வழிபாடு....

ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு உடல் வலிமையும், வாழ்க்கைக்கு தேவையான செல்வமும், இந்த இரண்டையும் கொண்டு வாழ்வை வளமாக்க அறிவு வளமும் மிகவும் அவசியம்.

அதை வெளிப்படுத்த உடல் வலிமையின் சக்தியாக துர்கா தேவியையும் வாழ்க்கைக்கு தேவையான செல்வத்தை நல்க வல்ல சக்தியாக மஹா லஷ்மியையும், அறிவையும் ஆற்றலையும் தரவல்ல கல்வியின் தேவதையாக சரஸ்வதி தேவியையும் வழிபட்டு அந்த தேவியின் அருள் பெற்று வலிமை செல்வம், கல்வி ஆகிய மூன்றினையும் பெறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட பண்டிகைய நவராத்திரி எனப்படும்.

வழிபாட்டு முறை:

குணம்: சவும்யம்
சிறப்பு: ஸ்ரீமுருகனின் அம்சம், தேங்காய்பால்
பூஜை நேரம்: காலை 9:00 -10:30
மணி: மால 6:00- 7:30 மணி
மலர்: செவ்வரளி பிச்சி.
கோலம்: பருப்பு கோலம் போட வேண்டும்.
கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள்:

பாடல்

பூத்தவளே புவனம்
பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் சுரந்தவளே!கறைக்கண்டனுக்கு
மூத்தவளே என்று மூவா
முகந்ததற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திருப்பதே.

7 எண்ணிக்கை இருத்தல் வேண்டும். பூச்செடிகள் , புத்தகங்களள என கொடுப்பதும் இப்போது பழக்கத்தில் வந்துள்ளது.
பாட வேண்டிய ராகம்: காவடி சிந்து வணங்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள்: அஸ்வினி, மகம், மூலம்
திசை புத்தி அல்லது அந்தரம்.

மூல மந்திரம்: ஓம் சிம் கவுமாரியை நம
காயத்திரி: ஓம் சிகித் வாஜாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி தந்தோகவுமாரி ப்ரசோதயாத்.

கற்கண்டு சாதம்: ஒரு கடாயில் கற்கண்டை போட்டு, நன்றாக கம்பி பாகு வரும் வரை காய்ச்சிக்கொள்ளுங்கள். அரிசியையும்,பயத்தம்பருப்பையும் சேர்த்து, ஒரு ஸ்பூன் நெய்யில் வறுத்துக்கொள்ளவும், பின்னர் அதை வேக வைக்க வேண்டும். இதில் ஒரு டம்ள் பால் சேர்க்க வேண்டும். நன்றாக வெந்ததுமு் அதில் காய்ச்சிய பாகு ஊற்றி, அடிப்பிடிக்காமல் நன்றாக கிளற வேண்டும். ஏலக்காய் தூள், குங்குமப்பூ, சேர்க்கலாம். பின் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்த இறக்கிவிடவும். மாலையில் ராஜ்மா சுண்டல் செய்யலாம்.

நவராத்திரியில் அம்பாளுக்கு இப்படி விதவிதமான சுண்டல், பாயாச வகை நிவேதனம் செய்யப்பபடுகிறது. நம் பெரியோர் எந்த சடங்கு செய்தாலும் சாஸ்திர சம்பிரதாயங்களை வழிப்பட்டாலும் அதற்கு பின்னே அறிவியல் காரணங்கள் மறைந்திருக்கும். இங்கும் அப்படியே. தேவர்களுக்கு சிவன், விஷ்ணு அமிர்தம் தந்து அவ்ரகளை காத்தது போல பூமி உயிர் வாழ மழை என்னும் அமிர்தத்தை தருகிறது. இதனால் பூமி சக்தி பெறுகிறது. அந்த சக்தி எனும் பெண்ணுக்கு பூமியில் விளைந்த விதவிதமான தானியங்கள் பக்குவப்படுத்தப்பட்டு, நிவேதனம் செய்யப்பட்டது. அதில் சுண்டல் பிரதான இடம் பெற்றது. நவராத்திரி காலமான புரட்டாசி, ஐப்பசியில் அடைமழை ஏற்படும். இதனால் தோல் நோய் போன்ற சமரு பாதிப்புகள் ஏற்படலாம். இதை போக்கும் சக்தி, பயறு வகை சுண்டல்களுக்கு உண்டு. இதன் காரணமாய் பூஜைக் காலங்களில் சுண்டல் தரும் வழக்கம் ஏற்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 
temple news
திருக்கனுார்: கூனிச்சம்பட்டு திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி உற்சவத்தை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
தேவகோட்டை; தேவகோட்டை கோதண்டராமர் ஸ்வாமி கோயில் ராமநவமி பிரமோற்சவ விழா கடந்த 17 ந்தேதி காலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar