கொங்கலக்குறிச்சி செல்லாண்டியம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஏப் 2024 11:04
உடுமலை; கொங்கலக்குறிச்சி செல்லாண்டியம்மன் கோவிலில், தீர்த்த பெரும் திருவிழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது.
உடுமலை அருகே கொங்கலக்குறிச்சியில், பழமை வாய்ந்த செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. கோவிலில், தீர்த்த பெரும் திருவிழா கடந்த 22ம் தேதி துவங்கியது. கொடுமுடியில் இருந்து காவிரி தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள், கொங்கலக்குறிச்சி மாரியம்மன் கோவிலில் இருந்து, தீர்த்தம் மற்றும் பால் குடத்தை ஊர்வலமாக எடுத்துச்சென்றனர். தொடர்ந்து, தீர்த்தம் மற்றும் பால்குடம் அம்மனுக்கு செலுத்தினர். அபிஷேக, ஆராதனை, சிறப்பு அலங்காரம், 108 நெய் தீபம் ஏற்றுதல், சிறப்பு பூஜை, தொடர் தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.