Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாசி மகப் பெருவிழாவின் சிறப்பு என்ன? மாசி மகப் பெருவிழாவின் சிறப்பு என்ன?
முதல் பக்கம் » மாசி மகம் - 2023
மாசி மக வழிபாடும்.. ஏழேழு பிறவிக்கும் ஏற்படும் பலனும்!
எழுத்தின் அளவு:
மாசி மக வழிபாடும்.. ஏழேழு பிறவிக்கும் ஏற்படும் பலனும்!

பதிவு செய்த நாள்

05 மார்
2023
11:03

மாசி மாதம் முழுவதுமே புண்ணிய நீராடிட ஏற்ற புனித மாதமாகும். இம்மாதம் தவிர வேறு எப்போதெல்லாம் புனித நீராடலாம் என புராணங்கள் சொல்கின்றன தெரியுமா? அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, இரண்டு அயன காலங்கள், வெள்ளிக்கிழமை, கார்த்திகை, சிவராத்திரி, மாசிமகம், மகாமகம் நாட்கள் தான் அவை. மகாமக திருவிழாவை முதலில் துவக்கி வைத்தவர், பிரம்மதேவன். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசி மகத்தன்று கும்பகோணம் மகாமகக் குளத்தில் புனித நதிகள் யாவும் வந்து கலப்பதாகவும், அன்று புனித நீராடினால் புண்ணியப்பேறுகள் பலவும் கிட்டும் என்றும் மகாபுராணம் சொல்கிறது. இக்குளத்தில் பிரம்மா, அஷ்டதிக்பாலகர்கள், நவகன்னியரான கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதா, சரஸ்வதி, காவிரி, குமரி, பயோடினி, சரயு நதிகள் நீராடி புண்ணியம் அடைந்தன. பவுர்ணமியன்று நீராடுவோருக்கு ஏழேழு பிறவிக்கும் நன்மை ஏற்படும்.

மாசி மகத்தன்று முருகப்பெருமானை வழிபடுவதால் ஆண் குழந்தை பிறக்கும், அறியாமல் செய்த பாவங்களுக்கு விமோசனம் கிடைக்கும். மாசிமக ஸ்நானம் செய்வோருக்கு சிவனும் விஷ்ணுவும் உரிய பலன்தரக் காத்திருப்பர். அன்று புண்ணியநதியில் ஒருமுறை மூழ்கி எழுவோருக்கு பாவங்கள் விலக்குவார்கள். இரண்டாம் முறை மூழ்கி எழும்போது சொர்க்கபேறு தருவார். மூன்றாம் முறை மூழ்கி எழும் போது அவர்கள் புண்ணியத்திற்கு ஈடான பலனாக எதைக் கொடுக்கலாம் என ஈசனே பிரமிப்பார். இந்நீராடல் செய்ய இயலாதோர் மாசிமக புராணம் படிக்கலாம் அல்லது கேட்கலாம் அதுவும் புண்ணியமே! மாசிமகத்தன்று கடல் நீராடலாம். அப்போது பூமியில் காந்தசக்தி உண்டாவதால், நீர் நிலைகளில் புதிய ஊற்றுகள் உண்டாகி அதில் காந்த சக்தி கரையும். அச்சமயத்தில் நீராடுவோர் மனமும், உடலும் ஆரோக்கியமாகும். இதை புராணமும், விஞ்ஞானமும் கூறுகிறது.

 
மேலும் மாசி மகம் - 2023 »
temple news
மாசி மாதத்தில் மாசி மகப் பெருவிழா பத்துத் தினங்கள் வரை நடைபெறும். அசுவினி நட்சத்திரம் கூடிய நன்நாளில் ... மேலும்
 
temple news
மாசி மகத்தன்று முருகப்பெருமானை வழிபடுவதால் ஆண் குழந்தை பிறக்கும், அறியாமல் செய்த பாவங்களுக்கு ... மேலும்
 
temple news
மாசிமகம் என்றதும் நினைவுக்கு வரும் கும்பகோணத்தில் புனிதமான மகாமகக்குளம் உள்ளது. குளத்தைச் சுற்றி 16 ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கத்திற்கு எவ்வளவு சிறப்புண்டோ அத்தனையும் கொண்ட சிறப்பான திவ்யதேசம்  திருக்கோஷ்டியூர். ... மேலும்
 
temple news
ஈரோட்டில் இருந்து 12கி.மீ.,தொலைவில் உள்ள தலம் பவானி. பவானி ஆறு காவிரியில் சங்கமிக்கும் இடம் என்பதால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar