Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
மதுரை மீனாட்சி கோயிலில் மொபைல் போனில் படம் எடுக்க ரூ.50!
செப்டம்பர் 21,2012
அ-
+
Temple images

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், மொபைல் போனில் படம் எடுக்க, 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இக்கோயிலில், கேமராவில் படம் எடுக்க, 50 ரூபாய், வீடியோவிற்கு 250 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கேமராவிற்கு பதில், அந்த வசதி உடைய மொபைல் போன் களை பயன்படுத்தி படங்கள் எடுப்பதாக,  கோயில் நிர்வாகத்திற்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து, மொபைல் போனில் படம் எடுக்க,
கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்தாமல், படம் எடுத்தால், ஊழியர்கள் தேடிவந்து வசூலிக்கின்றனர். நிர்வாகத்திடம் கேட்டபோது, மொபைல் போனில் தேவையற்ற படங்கள் எடுப்பதாக புகார் வந்தது. இதைத் தடுக்கவே, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, என்றனர்.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.