பதிவு செய்த நாள்
21
செப்
2012
11:09
ஸ்ரீவில்லிபுத்தூர் : திருப்பதி வெங்கடாசலபதிக்கு, புரட்டாசி விழாவில் சார்த்துவதற்காக, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு, சூடிய மாலை, நேற்று கொண்டு செல்லப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவிலில், தினமும் ஆண்டாள் சூடிய மாலை அணிவித்து, பூஜைகள் நடக்கின்றன. மதுரை சித்திரை விழாவில், வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகருக்கு, ஆண்டாளுக்கு சூடிய மாலை, பரிவட்டம் அணிவிப்பது வழக்கம். இது போல், திருப்பதி வெங்கடசாலபதி கோவில், புரட்டாசி விழாவின் ஐந்தாம் நாள் கருட சேவையன்று, பெருமாளுக்கு ஸ்ரீவி., ஆண்டாள் சூடிய மாலையை சார்த்தி, சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. இதற்காக, ஆண்டாள் சூடிய மாலை மற்றும் கிளி, திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையொட்டி, நேற்று காலை ஆண்டாளுக்கு, சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு, மாலை, கிளி சார்த்தி, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மாடவீதி, கந்தாடை வீதி வழியாக சுற்றி எடுத்துச் செல்லப்பட்டு, பின், திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது.