வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மே 2023 10:05
தேனி: தேனி மாவட்டம் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுந்தனர்.
இக்கோயிலின் சித்திரை திருவிழா மே 9ல் துவங்கியது. மே 16ல் நிறைவு பெறுகிறது. தினமும் பக்தர்கள் அக்னிசட்டி, பால்குடம், காவடி, ஆயிரம் கண் பானை, சேறு பூசுதல், மாவிளக்கு எடுத்தல் நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. முன்னதாக யாழி, யாக சாலை பூஜைகள் நடந்தன. பின் கவுமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுத்தருளினார். மாலை 5:43 மணிக்கு தேனி கலெக்டர் ஷஜீவனா, எஸ்.பி., பிரவீன்உமேஷ்டோங்கரே, ஹிந்து அறநிலைய துறை இணை ஆணையர் பாரதி, உதவி ஆணையர் கலைவாணன் வடம் பிடித்து துவக்கி வைக்க ஏராளமான பக்தர்கள் தேர்வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த தேர், மூலவர் சன்னதிக்கு எதிராக நிலை நிறுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தினமும் மாலை குறிப்பிட்ட துாரம் தேர் இழுக்கப்பட்டு மே 15 ல் நிலைக்கு வரும்.