பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் புரட்டாசி வியாழன் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09அக் 2025 03:10
சிவகங்கை : திருப்புத்துார் அருகே பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் இன்று புரட்டாசி வியாழனை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
குருத்தலங்களுல் கிழக்கு முகமாக தட்சிணாமூர்த்தி எழுந்தருளியுள்ள ஒரே தலம் பட்டமங்கலம். இங்குள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் தனி சன்னதியாக அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இதனால் பிரசித்திபெற்ற குருதலமாக விளங்குகிறது. கோயிலின் முன்புள்ள ஆலமரத்தின் அடியில் கார்த்திகைப் பெண்கள் 6 பேரும் சிலை வடிவில் அருள்கிறார்கள். இவர்களுக்கு கிழக்கு நோக்கி அமர்ந்து, அஷ்டமாசித்திகளை சிவபெருமான் போதித்ததாக சொல்கிறது கோயில் ஸ்தல வரலாறு. இந்தக் கோயிலில் பிரதான தெய்வமாக வீற்றிருப்பவர் தட்சிணாமூர்த்தி. இவரை வழிபட்டால் குருவின் அருள் எளிதில் கிட்டும். இக்கோயிலில் இன்று வியாழக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வழிபாட்டில் சந்தனக்காப்பு, வெள்ளி அங்கியில் தட்சிணாமூர்த்தி சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.