Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
கிறிஸ்துமஸ் சிந்தனை- 5: அங்கே சேமித்து வையுங்கள்!
டிசம்பர் 19,2012
அ-
+
Temple images

மண்ணுலகில் உங்களுக்கென செல்வத்தை சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும், துருவும் அழித்து விடும். திருடரும் அதை கன்னமிட்டு திருடுவர். அதனால் விண்ணுலகில் உங்கள் செல்வத்தை சேமித்து வையுங்கள். அங்கே பூச்சியும், துருவும் அழிப்பதில்லை. திருடரும் கன்னமிட்டு திருடுவதில்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ, அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும் என மனித மனத்தின் பணத்தாசையை தோலுரித்துக் காட்டியவர் இயேசுநாதர்.பணம்தான் இன்றைய வாழ்க்கையின் நிலையை நிர்ணயிக்கிறது. எந்த அளவிற்கு செல்வம் இருக்கிறதோ, அந்த அளவிற்கு அவர் உயர்ந்தவராக கருதப்படுகிறார். இருப்பது போதும் என்ற மனநிறைவு எவருக்கும் ஏற்படுவதில்லை. இறுதிமூச்சு இருக்கும்வரை, உடல் உறுப்புகள் ஒத்துழைக்கும்வரை முடிந்த அளவு பணத்தை சேமித்து விடவேண்டுமென்று துடிக்கின்றனர்.

அவர்களின் எண்ணங்கள், ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள் எல்லாமே, தான் சேமித்து வைத்திருக்கும் செல்வத்தை சுற்றியே அமைந்திருக்கிறது. எனவேதான், இயேசுநாதர், ""உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ, அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும், என்றார். நிலையான செல்வத்தை எங்கே, எப்படி சேமித்து வைக்க வேண்டும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.இந்தச்சூழலில், நாம் சேமித்திருக்கும் செல்வம், நமக்கு பாதுகாப்பையும், நிம்மதியையும் தந்திருக்கிறதா என்பதை நமக்கு நாமே கேட்டுப் பார்ப்போம்.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.