Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
சிவாலயங்களில் இன்று ஆருத்ரா அபிஷேகம்!
டிசம்பர் 27,2012
அ-
+
Temple images

மார்கழி மாதம் புனிதமானது. மாதங்களுள் நான் மார்கழியாக இருக்கிறேன் என்கிறார் பகவான் கிருஷ்ணன். மார்கழிச் சிறப்பை உணர்த்தவே ஆண்டாள் திருப்பாவை பாடியருளினாள். அதுவும் மார்கழி பெண்களுக்கே உரிய விஷேமான மாதம் மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளில் நீராடப் போகுவீர் செல்வச் சிறுமியர்காள்! என்று சிறுமிகளைத்தான் ஏவினாள் ஆண்டாள். காசும் பிறப்பும் கலகலப்ப கை பேர்த்து-வாச நறுங்குழல் ஆய்ச்சியர் தம் மத்தினால்-ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ என்று மார்கழி விடியற்பொழுதே அறிவித்து சக பெண்களை நீராடச் செல்ல எழுப்புகிறாள் ஆண்டாள்.

மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திர நாள் ஒரு புண்ணிய தினம் அதை ஆருத்ரா என்பர் நடராஜப் பெருமானுக்கு இன்னாளில் நடைபெறும் அபிஷேக ஆராதனையைக் கண்டு ஆனந்திக்க ஆயிரமாயிரமாய் பக்தர்கள் கூடுவர். கேரளத்திலும் மார்கழித் திருவாதரை நாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் அங்கு இது முழுமையாக ஒரு பெண்கள் பண்டிகையாகவே உள்ளது. தவக்கோலம் பூண்டு கன்னியாக இருந்த பார்வதி (மன்மதனை) எரித்த சிவபெருமானைத் தன் கணவராக வரிக்கிறாள். உமையின் அழகில் மயங்கிய பெருமான், தாம் எரித்த காமனை உயிர்பெற்று எழச் செய்வதாக அவளுக்கு வரமளிக்கிறார். இந்த வரம் அருளியதை எண்ணி, சிவபெருமான் தனது அழிக்கும் தன்மையை விலக்கி, சிருங்கார உருவம் எடுத்து, நாங்கள் வேண்டும் வரத்தையும் அருளவேண்டும் என்பதற்காகவே பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து  வருகிறார்கள்.  பகவானை மகிழ்விக்கச் செய்து உவமையவளைப் போல் கன்னிகளும், சுமங்கலிகளும் அதிகாலையில் குளித்து தூய ஆடைகளை அணிந்து உண்ணா நோன்பிருந்து வழிபடுகிறார்கள். நிலைத்த மாங்கல்யத்துக்காகவும், ஐஸ்வர்யத்துக்காகவும் இந்த விரதத்தை மேற்கொள்கிறார்கள். ஆனாலும் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தினூடே இந்த விரதம் இருப்பதால் அவர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம்.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.