Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆனி திருமஞ்சன உற்சவம் காசி விஸ்வநாதர் கோவில் கோபுரங்களுக்கு தங்க தகடு காசி விஸ்வநாதர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உருகியது அமர்நாத் பனி லிங்கம்: பக்தர்கள் கவலை
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2013
10:07

ஜம்மு :ஜம்மு - காஷ்மீரின் அமர்நாத் குகை கோவிலில் தோன்றிய பனி லிங்கம், பெருமளவு உருகி விட்டது. இதனால், பக்தர்கள் மிகுந்த மன வருத்தம் அடைந்துள்ளனர்.

28ல் துவங்கியது:  ஜம்மு - காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகை கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் இயற்கையாகவே, பனி லிங்கம் உருவாகும். இதைத் தரிசிக்க, நாடு முழுவதிலும் இருந்து, ஏராளமான பக்தர்கள், புனித யாத்திரை செல்வது வழக்கம். இந்த ஆண்டிற்கான, அமர்நாத் பனிலிங்க தரிசன யாத்திரை, கடந்த மாதம், 28ம் தேதி துவங்கியது. அடுத்த மாதம், 21ம் தேதி வரை, யாத்திரை நீடிக்கும்.யாத்திரை துவங்கியது முதல், இதுவரை, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட, பக்தர்கள் பனி லிங்க தரிசனம் செய்துள்ளனர். யாத்திரை முடிய, இன்னும் பல நாட்கள் உள்ள நிலையில், பனி லிங்கத்தின் பெரும்பகுதி உருகி விட்டது. இதனால், பக்தர்கள் மன வருத்தம் அடைந்துள்ளனர்.

உடல் உஷ்ணம்: இதுதொடர்பாக, ஸ்ரீநகர் வானிலை ஆய்வு மையத்தை சேர்ந்த, சோனம் லோட்டஸ் கூறியதாவது: ஜம்மு - காஷ்மீரில், எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு, அதிகபட்ச வெப்பநிலை பதிவானது. பனி லிங்கத்தை தரிசிக்க, இதுவரை, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வந்துள்ளதால், அவர்களின் உடம்பிலிருந்து வெளியாகும் வெப்பமும், குகை கோவில் பகுதியில் வெப்பநிலை அதிகரிக்க காரணம்.மேலும், மலை அடிவாரத்தில், தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்கள், காஸ் அடுப்புகளை பயன்படுத்தி, சமையல் செய்கின்றனர். இதுவும் வெப்பநிலை உயர்வுக்கு ஒரு முக்கிய காரணம். இந்தக் காரணங்களாலும், பருவநிலை மாறுபாடு காரணமாகவும், பனி லிங்கம் உருகி இருக்கலாம்.இவ்வாறு லோட்டஸ் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி இன்று நவதானிய அலங்காரத்தில் வராஹி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி இன்று மாலை தொடங்கும் ... மேலும்
 
temple news
விருத்தாசலம் ; சஷ்டியை ஒட்டி விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் முருகப்பெருமான் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 36 யானைகளுக்கு ஒரு மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar