துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் டில்லி ஸ்ரீ ராம் மந்திரில் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09செப் 2025 11:09
புதுடில்லி துணை ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு துவங்கியது; முதல் நபராக பிரதமர் மோடி ஓட்டளித்தார்; பார்லி., வளாகத்தில் காலை 10:00 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக, இன்று காலை லோதி சாலை பகுதியில் உள்ள ஸ்ரீ ராம் மந்திரில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரும் மகாராஷ்டிரா ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணன் பிரார்த்தனை செய்து ஆசி பெற்றார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை செய்யப்பட்டது.
கோவிலில் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியதாவது; இது இந்திய தேசியத்திற்கு கிடைத்த ஒரு பெரிய வெற்றியாக இருக்கும். நாம் அனைவரும் ஒன்று, நாம் ஒன்றாக இருப்போம், இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவோம் என்றார்.