தமிழ் புத்தாண்டைமுன்னிட்டு திருச்செந்தூர் கோயில் நடை திறக்கும் நேரம் மாற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2014 05:04
தூத்துக்குடி:திருச்செந்தூர் முருகன் கோயிலில் தமிழ் புத்தாண்டு தினத்தன்று ( ஏப்., 14-ம் தேதி திங்கள் ) கோயில் நடை திறக்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆறுமுக நயினாருக்கு அன்னாபிஷேகம் நடக்கவுள்ளது. ஆறு படை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் தமிழ் புத்தாண்டு தினமான (ஏப்., 14 )அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். எப்போதும் காலை ஐந்து மணிக்கு நடை திறப்பது வழக்கம். தமிழ் புத்தாண்டு அன்று, ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக திறக்கப்படவுள்ளது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதணை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 8 மணிக்கு தீர்த்தவாரி, 10 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் நடக்கவுள்ளது. அதன் பின்பு ஆறுமுகநயினாருக்கு அன்னாபிஷேகம் நடக்கவுள்ளது. பின் பகல் 12மணிக்கு அன்னதானம் நடக்கும். தொடர்ந்து மற்ற கால வேளை பூஜைகள் நடக்கும். மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கும். காலை 9 மணிக்கு கலையரங்கில் நாதஸ்வர மங்கள இசை நிகழச்சியும், காலை 10 மணிக்கு கோயில் நாட்குறிப்பு புத்தகம் வெளியிடும் நிகழ்ச்சி நடக்கவுள்ளது. அதனை தொடர்ந்து ஆன்மிக சொற்பொழிவு, இன்னிசை நிகழச்சியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இணை கமிஷனர் பொறுப்பு ஞானசேகரனும், தக்கார் கோட்டைமணிகண்டன் செய்து வருகின்றனர்.