திருச்சுழி : திருச்சுழி துணை மாலையம்மன் சமேத திருமேனிநாதர் கோயிலில் ஆடி தபசு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியில், தினமும் ஒவ்வொரு மண்டகப்படியார் சார்பில் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பத்தாம் நாளாள ஆக.,9ல் திருச்சுழி ஆற்றங்கரையில் சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி காட்சி கொடுப்பார். ஏற்பாடுகளை நிர்வாக செயலர் மகேந்திரன் , செயல் அலுவலர் கணேசன் செய்துள்ளனர்.