Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கம்பம் கவுமாரியம்மன் கோயில் ...  திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு மகா அபிஷேகம் திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்திரை திருவோணம்; நடராஜப் பெருமானுக்கு 32 வகை மஹா அபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 சித்திரை திருவோணம்; நடராஜப் பெருமானுக்கு 32 வகை மஹா அபிஷேகம்

பதிவு செய்த நாள்

01 மே
2024
04:05

அவிநாசி; சித்திரை திருவோண நாளை முன்னிட்டு சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ நடராஜர் சிவகாமி அம்பாள் உற்சவருக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது.

அவிநாசி அடுத்த சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ நடராஜர் சிவகாமி அம்பாளுக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது. சித்திரையில் திருவோணம், ஆனியில் உத்திரம், மார்கழியில் திருவாதிரை ஆகிய நட்சத்திர நாட்களிலும், ஆவணி, புரட்டாசி, மாசி உள்ளிட்ட மாதங்களில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதிகளிலும் மஹா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், ஆண்டுக்கு ஆறு முறை மட்டுமே நடைபெறும் மஹா அபிஷேக நிகழ்ச்சி நேற்று சித்திரை திருவோண நாளை முன்னிட்டு சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் பால், தயிர், சந்தனம், இளநீர், தேன் உள்ளிட்ட 32 திரவியங்களில் ஸ்ரீ நடராஜர் சமேத சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் செண்பகப்பூ, தாமரை மாலை, வில்வமாலைகளால் அலங்கரிக்கப்பட்டு மஹாதீபாராதனை நடைபெற்றது. இதனையடுத்து தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பஞ்ச புராண கூட்டு வழிபாடு நடைபெற்றது. அதன் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் சேவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் .

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar