விழுப்புரம் : விழுப்புரம் ரயிலடி ராஜகணபதி கோவிலில் சிறப்பு ஹோமங்கள் நடந்தது. விழுப்புரம் ரயிலடியில் அமைந்துள்ள ராஜகணபதி கோவிலில் குரு பெயர்ச்சியை யொட்டி நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு நவக்கிரக ஹோமங்கள் நடந்தது. இரவு 11:00 மணிக்கு கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு, குரு இடம் பெயர்ச்சியானதை யொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.நேற்று காலை 7:00 மணிக்கு ராஜகணபதி மற்றும் யோக தட்சணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின்னர் 9:00 மணிக்கு தீபாராதனை, 9:30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் ராஜகணபதி அருள்பாலித்தார்.