Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரயிலடி ராஜகணபதிக்கு குரு பெயர்ச்சி ... பிரசன்ன வெங்கட்ரமண ஸ்வாமி கோவில் கும்பாபிஷேக விழா! பிரசன்ன வெங்கட்ரமண ஸ்வாமி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் கோவில்களில் குரு பெயர்ச்சிசிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
திருப்பூர் கோவில்களில் குரு பெயர்ச்சிசிறப்பு பூஜை!

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2015
10:07

திருப்பூர்: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, திருப்பூரில் உள்ள கோவில்களில் நேற்று சிறப்பு யாக பூஜைகள் நடந்தன.குரு பகவான் நேற்று முன்தினம் இரவு, கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பிரவேசித்தார். இதையொட்டி, திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், நல்லூர் விஸ்வேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் எழுந்தருளியுள்ள தட்சிணாமூர்த்திக்கு, நேற்று காலை, 6:15 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. திருப்பூர் எஸ்.வி., காலனி, மகா கணபதி யோகேஸ்வரர் கோவிலில், நேற்று காலை, 7:00 மணிக்கு, குரு தட்சிணாமூர்த்திக்கு, சிறப்பு யாக பூஜைகள் நடந்தன. 9:30 மணிக்கு, சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன.அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள சபா மண்டபத்தில், விக்னேஷ்வர பூஜை, சிறப்பு ஹோமம், குரு பகவானுக்கு மகாபிஷேகம், சிம்ம ராசி பிரவேசம், மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன. அதன்பின், உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பிரகார உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ரிஷபம், சிம்மம், மிதுனம், கன்னி, விருட்சிகம், மகரம், மீனம் ராசிக்காரர்கள், பரிகாரம் செய்து, சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். இதில், அவிநாசி வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar