சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதம்.இந்த மாதத்தில், அம்பாளை வணங்கும்போது, பாடுவதற்கான லலிதா நவரத்தினமாலையைத் தந்துள்ளோம். இதைப்படிப்பவர்களுக்கு உழைக்கும் சக்திஅதிகமாகி தங்கம், வைரம்,வைடூரியங்களுடன்செழிப்பாக வாழலாம்.ஞான கணேசா சரணம் சரணம்ஞான ஸ்கந்தா சரணம் சரணம்ஞான ஸத்குரோ சரணம் சரணம்ஞானா னந்தா சரணம் சரணம்ஆக்கும் தொழில் ஐந்தரன் ஆற்றநலம்பூக்கும் நகையாள் புவனேஸ்வரிபால்சேர்க்கும் நவரத்தின மாலையினைக்காக்கும் கணநாயக வாரணமே.மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையேமாதா ஜெய ஓம் லலிதாம்பிகையேமாதா ஜெய ஓம் லலிதாம்பிகையேமாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே1. வைரம்கற்றும் தெளியார் காடே கதியாய்க்கண்மூடி நெடுங்கன வான தவம்பெற்றும் தெளியார்நிலையென்னில் அவள்பெருகும் பிழையேன் பேசத் தகுமோபற்றும் வயிரப் படைவாள் வயிரப்பகைவர்க்கு எமனாக எடுத்தவளேவற்றாத அருள்சுனையே வருவாய்மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!2. நீலம்மூலக்கனலே சரணம் சரணம்முடியா முதலே சரணம் சரணம்கோலக்கிளியே சரணம் சரணம்குன்றாத ஒளிக்குவையே சரணம்நீலத் திருமேனியிலே நினைவாய்நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய்வாலைக் குமரீ வருவாய் வருவாய்மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!3. முத்துமுத்தேவரும் முத்தொழிலாற்றிடவேமுன்னின் றருளும் முதல்வி சரணம்வித்தே விளைவே சரணம் சரணம்வேதாந்த நிவாசினியே சரணம்தத்தேறிய நான் தனயன் தாய் நீசாகாத வரம் தரவே வருவாய்மத்தேறு ததிக்கிணை வாழ்வடையேன்மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!4. பவளம்அந்தி மயங்கிய வானவி தானம்அன்னை நடம் செய்யும் ஆனந்த மேடைசிந்தை நிறம் பவளம் பொழிபாரோதேன்பொழிலாமீது செய்தவள் யாரோஎந்தயிடத்தும் மனத்தும் இருப்பாள்எண்ணுபவர்க்குள் எண்ணமிகுந்தாள்மந்திரவேத மயாப் பொருளானாள்மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!5. மாணிக்கம்காணக் கிடையாக் கதியானவளேகருதக் கிடையாக் கலையானவளேபூணக் கிடையாப் பொலிவானவளேபுனையக் கிடையாப் புதுமைத்தவளேநாணித் திருநாமமும் நின்துதியும்நவிலாதவரை நாடாதவளேமாணிக்க ஒளிக்கதிரே வருவாய்மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!6. மரகதம்மரகத வடிவே சரணம் சரணம்மதுரிதபதமே சரணம் சரணம்சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்சுதிஜதி லயமே இசையே சரணம்அர ஹர சிவ என்றடியவர் குழுமஅவரருள் பெற அருளமுதே சரணம்வர நவநிதியே சரணம் சரணம்மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!7. கோமேதகம்பூமேவிய நான் புரியும் செயல்கள்பொன்றாது பயன் குன்றா வரமும்தீ மேல் இடினும் ஜெயசக்தி எனத்திடமாய் அடியேன் மொழியும் திறமும்கோமேதகமே குளிர்வான் நிலவேகுழல் வாய் மொழியே வருவாய் தருவாய்மாமேருவிலே வளர் கோகிலமேமாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!8. புஷ்பராகம்ரஞ்சனி நந்தினி அங்கணி பதுமராக விகாஸ வியாபினி அம்பாசஞ்சல ரோக நிவாரணி வாணீசாம்பவி சந்த்ர கலாதரி ராணிஅஞ்சல மேனி அலங்க்ருத பூரணிஅம்ருத ஸொரூபிணி நித்ய கல்யாணிமஞ்சுள மேரு சிருங்க நிவாஸினிமாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!9. வைடூர்யம்வலையொத்த வினை கலையொத்த மனம்மருளப் பறையாறொலி ஒத்த விதால்நிலையற்று எளியேன் முடியத் தகுமோநிகளம் துகளாக வரம் தருவாய்அளவற்று அசைவற்று அநுபூதி பெறும்அடியார் முடிவாழ் வைடூர்யமே மலையத் துவசன் மகளே வருவாய்மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!எவர் எத்தினமும் இசையாய் லலிதாநவரத்தின மாலை நவின்றிடுவார் அவர் அற்புத சக்தி எல்லாம் அடைவார்சிவரத்தினமாய் திகழ்வார் அவரே.