Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) கேது தரும் சோதனை படைப்பீர்கள் சாதனை! (75/100) மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ... சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோமில்லே! (55/100) சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ...
முதல் பக்கம் » ராகு கேது பெயர்ச்சி பலன்கள் (27.7.2017 முதல் 13.2.2019 வரை)
கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) வேலையில் மிக கவனம் சாலையில் மெது பயணம்! (60/100)
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 டிச
2015
12:46

கண்ணியம் மிக்க கடக ராசி அன்பர்களே!

ராகு இதுவரை உங்கள் ராசிக்கு 3-ம் இடமான கன்னி ராசியில் இருந்து பல்வேறு நன்மைகளை தந்து கொண்டிருந்தார். நல்ல பொருளாதார வளம், பல்வேறு முன்னேற்றங்களை பெற்றிருக்கலாம். இப்போது 2-ம்இடமான சிம்மத்திற்கு வருகிறார். இது சிறப்பான இடம் இல்லை. குடும்பத்தில் சிற்சில பிரச்னைகளைத் தருவார். ஆனால், துõரதேச பயணத்தை ஏற்படுத்துவார். கேது இதுவரை 9-ம் இடமான மீனத்தில் இருந்தார். அவரால் பொருள் இழப்பையும், காரியத்தில் தோல்வியும் கண்டிருக்கலாம். ஆனால், இப்போது 8-ம் இடமானகும்பத்திற்கு மாறுவதன் மூலம் கெடுபலன் நடக்காது. அதேநேரம், அவர் கும்பத்திற்கு மாறுவதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. அவரால் உடல்உபாதைகள் வரலாம். குரு பகவானும் தற்போது 3-ம் இடத்தில் இருக்கிறார். ஆனால், அவரது அனைத்து பார்வைகளும் சாதகமாக உள்ளன. மேலும், அவர் 7-2-2016 முதல் 1-8-2016 வக்கிரம் அடைந்து சிம்ம ராசியில் இருப்பார். இந்த காலத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

2016 ஜனவரி முதல் டிசம்பர் வரை: ராகு, கேது எப்படி இருந்தாலும் குரு பார்வையால் நல்ல பணப்புழக்கம் காணலாம். அதே நேரம் செலவு அதிகரிக்கும். எடுத்த செயலை வெற்றிகரமாக முடிக்கலாம். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பு, மரியாதை முன்புபோல் இருக்காது என்றாலும் உங்கள் கவுரவத்திற்கு பங்கம் வராது. வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். சனிபகவான் பார்வையால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் உறுதுணையாக இருப்பர். வாகனங்கள் இயக்கும் போது மெதுவாகச்செல்வது தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்க்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் குருவின் பார்வையால் நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் வகையில்
அனுகூலம் இருக்கும். புதிய வீடு, மனை வாங்க நினைப்பவர்களின் எண்ணம் ஜூலை மாதத்திற்குள் நிறைவேறும்.

பணியாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். சிலருக்கு வேலையில் இடைஞ்சல் வரலாம். பொறுப்புகளை பிறர் தட்டிப் பறிக்கலாம். எனவே வேலையில் கவனமாக இருக்கவும்.. மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.

தொழில், வியாபாரம் தொடர்பான பணவிஷயத்தில் யாரையும் நம்பி விட வேண்டாம். கூட்டுத்தொழிலில் நல்ல வளத்தைக் காணலாம். வாடிக்கையாளர் மத்தியில் நன்மதிப்பை பெறுவர். அலைச்சலும், வெளியூர் வாசமும் இருக்கும்.

கலைஞர்கள் புதிய யுக்தி மூலம் பிரபலம் அடைவர். புதிய ஒப்பந்தத்திற்காக சற்று முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும். மாணவர்கள் சுமாரான பலனைக் காணலாம். ஆசிரியர்கள் சொல்படி நடப்பது நல்லது.

விவசாயத்தில் சிலர் முயற்சி எடுத்து புதிய சொத்து வாங்குவீர்கள். வழக்கு, விவகாரங்கள் சுமாராக இருக்கும். புதிய வழக்கில் சிக்க வேண்டாம்.

பெண்கள் புத்தாடை, நகை வாங்கலாம். பிள்ளைகளால் பெருமை உண்டு. அமைதியும், பொறுமையும் தேவை. மருத்துவச் செலவு வெகுவாக குறையும்.

2017 ஜனவரி முதல் ஜூலை வரை: இந்த காலத்தில், ராகு கேதுவின் சாதகமற்ற நிலையுடன், குருவும் 4-ம் இடத்திற்கு வருவார். இதனால், பொதுவாக எதையும் சற்று முயற்சி எடுத்தே முடிக்க வேண்டியிருக்கும். பணப்புழக்கம் இருந்தாலும், செலவும் துரத்தும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தடைபடலாம். புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் இல்லை. உறவினர்கள் வகையில் அனுகூலம் இருக்காது.

பணியாளர்களுக்கு சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. ஆனால், உங்களுக்கு வர வேண்டிய பொறுப்பு தட்டி பறிக்கப்படலாம். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். வியாபாரிகள் புதிய தொழிலை தொடங்க இது உகந்த காலம் அல்ல. சிலர் வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். அரசு வகையில் எந்த உதவியும் கிடைக்காது.

கலைஞர்கள் சுமாரான நிலையில் இருப்பர். அரசியல்வாதிகள் சுமாரான நிலையில் இருப்பர்.
மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டும். விவசாயிகள் சிரத்தை எடுத்து உழைக்க வேண்டும்.

பெண்கள் ஆடம்பரத்தை தவிர்க்கவும். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.

பரிகாரம்: குருவுக்கு மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை செய்யுங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வழிபடலாம். ராகு-கேதுவுக்கும் அர்ச்சனை செய்யுங்கள். விநாயகர் வழிபாடு மிகவும் உயர்வை தரும். 

செல்ல வேண்டிய தலம்:  திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலில் உள்ள ராகு சன்னிதி.

 
மேலும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் (27.7.2017 முதல் 13.2.2019 வரை) »
temple
பெரியோரை  மதிப்புடன் நடத்தும் மேஷ ராசி அன்பர்களே!

ராகு சிம்ம ராசியில் இருந்து 4-ம் இடமான ... மேலும்
 
temple
தன்னம்பிக்கையுடன் செயல்படும் ரிஷப ராசி அன்பர்களே!

ராகு, கேது பெயர்ச்சியால் வாழ்வில் நற்பலன் ... மேலும்
 
temple
அன்புக்கு அடிபணியும் மிதுன ராசி அன்பர்களே!

ராசிக்கு 3-ல் சிம்மத்தில் உள்ள ராகு  2-ம் இடமான ... மேலும்
 
temple
கடமையுணர்வுடன் பணிபுரியும் கடக ராசி அன்பர்களே!

ராசிக்கு 2-ம் இடமான சிம்மத்தில் உள்ள ராகு, உங்கள் ... மேலும்
 
temple
சிந்தனையில் வளம் மிக்க சிம்ம ராசி அன்பர்களே!

தற்போது கேது 6ம் இடமான மகரத்திற்கு வருவதால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.