Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மிதுனம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2023 – ... சிம்மம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2023 – 2025 சிம்மம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2023 – ...
முதல் பக்கம் » ராகு கேது பெயர்ச்சி பலன் (8.10.2023 முதல் 26.4.2025 வரை)
கடகம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2023 – 2025
எழுத்தின் அளவு:
கடகம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2023 – 2025

பதிவு செய்த நாள்

03 அக்
2023
03:10

புனர்பூசம்: புதிய தொழில் தொடங்குவீர்கள்

குருபகவானின் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்த உங்களில் 1,2,3 ம் பாதத்தினருக்கு புதன் ராசி நாதனாகவும், 4 ம் பாதத்தினருக்கு சந்திரன் ராசி நாதனும் உள்ளனர். முதல் மூன்று பாதத்தினருக்கு இதுவரை ராகு, லாப ஸ்தானத்திலும், கேது 5ம் இடத்தில் சஞ்சரித்து எதிர்மறை பலன்களையும் வழங்கி வந்தனர். 4 ம் பாதத்தினருக்கு ராகு ஜீவன ஸ்தானத்திலும், கேது சுக ஸ்தானத்திலும் சஞ்சரித்து பல வகையில் நெருக்கடிகளை ஏற்படுத்தினர்.

இந்நிலையில் அக்.8, 2023 முதல் மூன்று பாதத்தினருக்கு ராகு 10 ம் இடத்திலும், கேது  4 ம் இடத்திலும் சஞ்சரிக்க உள்ளனர். 4 ம் பாதத்தினருக்கு ராகு 9 ம் இடத்திலும், கேது  3 ம் இடத்திலும் சஞ்சரிக்க உள்ளனர். இதன்  காரணமாக முதல் மூன்று பாதத்தினருக்கு நெருக்கடி, அலைக்கழிப்பு அதிகரிக்கும். உடல், மனதளவில் சோர்வு உண்டாகும். 4 ம் பாதத்தினருக்கு பாக்கிய ஸ்தான ராகுவால் நெருக்கடி நீங்குவதுடன் அவரது பின்னோக்கிய 3ம் பார்வை ராசிக்கு 11ல் பதிவதால் நன்மை அதிகரிக்கும், 3 மிட கேதுவால் தைரியம், துணிச்சல் ஏற்படும்.

பொதுவாக பாப கிரகங்கள் கேந்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது யோகப் பலன்களாக வழங்குவர் என்கிறது ஜோதிட சாஸ்திரம். எனவே 10ம் இட ராகு புதிய தொழில் முயற்சிகளுக்கு கை கொடுப்பார்,  மருத்துவர்களின் முயற்சிகளை வெற்றியாக்குவார். மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்லும் முயற்சி நிறைவேறும். 4ம் இட கேது சொந்த இடம், வீடு, வாகன யோகத்தை உண்டாக்குவார்.

சனி சஞ்சாரம்: மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிக்கும் நாளில் இருந்து முதல் மூன்று பாதத்தினருக்கு அக்.23, 2023 வரை அஷ்டம ஸ்தானத்தில் வக்கிர கதியிலும் அதன் பின் வக்கிர நிவர்த்தியாகி அங்கே ஆட்சியாக சஞ்சரிக்கிறார். டிச.20,
2023 முதல் 9 ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கிறார். செயல்களில் முன்னேற்றம் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். 4ம் பாதத்தினருக்கு தடை, முயற்சியில் பின்னடைவு, எதிர்பாராத சங்கடம் ஏற்படும். புதிய முயற்சியில் எதிர்பார்த்த நன்மை ஏற்படாமல் போகும். உடல்நலக்குறைவு, வாகனப் பயணத்தால் பாதிப்பும் ஏற்படும்.

குரு சஞ்சாரம்: மேஷ ராசியில் ஏப்.30. 2024 வரை சஞ்சரிக்கும் குரு முதல் மூன்று பாதத்தினருக்கு லாப குருவாக அதிக நன்மைகளையும்,  4ம் பாதத்தினருக்கு ஜீவன குருவாகவும் தொழில், பணியில் வருமானத்தில் தடைகளை உண்டாக்கும். அக்.8, 2023 முதல் டிச.20, 2023 வரை அவர் வக்கிரம் அடைவதால் இப்பலன்களில் மாற்றம் உண்டாகும். மே1, 2024 முதல் குரு ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாவதால் 1,2,3 ம் பாதத்தினருக்கு விரய குருவாகி செலவுகளை ஏற்படுத்துவார். அலைச்சல் அதிகரிக்கும். 4 ம் பாதத்தினருக்கு தொழில், பணியில் இருந்த சங்கடங்கள் விலகும். லாபம் கூடும்.  முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்கை உயரும்.

பொதுப்பலன்: கவனமாக செயல்பட்டு முயற்சிகளில் வெற்றி அடையக்கூடிய உங்களுக்கு இக்காலத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறும். நன்மை உண்டாகும். முயற்சிக்கேற்ப முன்னேற்றம் ஏற்படும். உழைப்புக்கேற்ப லாபம் வந்து சேரும். நெருக்கடி விலகும்.  திசா புத்திக்கு தகுந்தாற்போல சிலருக்கு கூடுதல் நன்மை உண்டாகும்.

தொழில்: வெளிநாட்டுத் தொடர்பு, ஏற்றுமதி இறக்குமதி, டிராவல்ஸ், டிரான்ஸ்போர்ட், மருத்துவம், கல்வி, பேக்டரி, கம்பெனி, ஹார்ட்வேர்ஸ், மெஷினரி தொழில்களில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும்.

பணியாளர்கள்: பணிபுரியும் இடத்தில் கூடுதல் கவனம் தேவைப்படும். பணிச்சுமை அதிகரிக்கும். சிலர் மேலதிகாரியின் கண்டிப்பிற்கு ஆளாகலாம். சிலர் பார்க்கும் வேலையை விட்டு  வேறு வேலைக்கு முயற்சிக்க வேண்டியிருக்கும்.

பெண்கள்: பொன் பொருள் சேர்க்கை உண்டாகும், திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்களுக்கு திருமணம் நடந்தேறும். பணிபுரியும் இடத்தில் உற்சாகமாக செயல்படுவர். சுய தொழில் செய்யும் பெண்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

கல்வி: இயல்பாகவே கல்வியில் திறமை கொண்டவர்களாக  இருந்தாலும் இக்காலத்தில் கூடுதல் கவனம் தேவை. சிலருக்கு விரும்பிய பாடப்பிரிவிலும், கல்லுாரியிலும் இடம் கிடைக்கும். மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்ல நினைத்தவர்களின் எண்ணம் நிறைவேறும்.

உடல்நிலை:  ஒன்று போய் ஒன்று என்று உங்கள் உடல் நிலையில் சங்கடம் உண்டாகும், மருத்துவச் செலவு அதிகரிக்கும் என்றாலும் டிச.20, 2023 க்கு பிறகு பாதிப்பில் இருந்து விடுபடுவீர்கள்,  மருத்துவச்செலவு குறையும். உடல்நிலை சீராகும்.  உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.

குடும்பம்: திட்டமிட்டு செயல்பட்டு ஆதாயம் காண்பீர்கள், புதிய வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தில் தடைபட்ட சுபவிஷயங்கள் சிறப்பாக நடந்தேறும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். கடந்த கால சங்கடம் காணாமல் போகும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

பரிகாரம்:  துர்கை, விநாயகரை வழிபட சங்கடம் நீங்கும். ஆலங்குடி குருபகவானை வழிபட்டு வர நன்மை கூடும்.


பூசம்: நெருக்கடி விலகும்

சனி பகவானை நட்சத்திர நாதனாகவும், சந்திரனை ராசி நாதனாகவும் கொண்ட உங்களுக்கு இதுவரை 10ம் இடமான மேஷத்தில் சஞ்சரித்த ராகு, 4ம் இடமான சுக ஸ்தானத்தில் சஞ்சரித்த கேது உங்கள் வாழ்வில் பல திருப்பங்களையும் மாற்றங்களையும் சில சங்கடங்களையும் ஏற்படுத்தினர். உடல், மனதளவில் உற்சாகம் உண்டாகி இருக்கும் என்றாலும் பல சமயங்களில் சோர்வும் ஏற்பட்டிருக்கும். நினைத்த செயல்களை நினைத்தவுடன் நிறைவேற்ற முடியாத அளவிற்கு சங்கடம் வந்திருக்கும். சில முயற்சிகள் வெற்றிகரமாக மாறியிருக்கும். 10ம் இடமான கேந்திர ஸ்தானத்தில் அமர்ந்த ராகுவால் பதவி, மதிப்பு, அந்தஸ்து, கவுரவம் உண்டாகி இருக்கும். சர்ப்ப கிரகங்களான ராகுவும் கேதுவும் கடந்த ஒன்றரை ஆண்டில் உங்களை ஒருபக்கம் சங்கடத்திற்கு ஆளாக்கினாலும் மறுபக்கம் முன்னேற்றம், அந்தஸ்து என்ற நிலையையும் வழங்கி இருப்பர்.

இந்நிலையில் அக்.8, 2023 அன்று ராகு உங்கள் ராசிக்கு 9ம் இடத்திலும், கேது 3ம் வீட்டிலும் சஞ்சரிக்க உள்ளனர். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு உங்கள் உடல்நிலையில் இருந்த சங்கடங்களை அகற்றுவார். சோர்வை போக்குவார்.  ஆரோக்கியம் மேம்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும், கேட்ட இடத்திலிருந்து உதவிகள் தேடி வரும். தொழிலில் முயற்சியும் ஆர்வமும் அதிகரிக்கும். 3ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேது இதுநாள் வரை நீங்கள் பட்ட துன்பம், வறுமை, நோய், தொல்லை அனைத்தையும் அகற்றுவார். குடும்பத்தினரும் நோயின்றி நலம் பெறுவர். தொழிலில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்குதலும் அல்லது வேலை இல்லாதவர்களுக்கு தகுந்த வேலை கிடைப்பதும் நிகழும்.

சனி சஞ்சாரம்: உங்கள் ராசிக்கு 9ம் இடத்தில் ராகுவும், 3ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் இக்காலத்தில் 7ம் இடமான களத்திர ஸ்தானத்தில் அக்.23, 2023 வரை வக்ர நிலையில் சஞ்சரிக்கிறார். அதன்பின் வக்ர நிவர்த்தியாகி அங்கே ஆட்சியாக சஞ்சரிப்பவர் டிச.20, 2023 முதல் 8ம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கிறார். அதன் பிறகு நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. 8ம் இடத்து சனி பல இடர்களையும், குடும்பத்தில் சங்கடம், தம்பதியரிடையே கருத்து வேறுபாடு, மனக்கசப்பு, பிரிவு வரை கொண்டு சென்று விடும், முயற்சியில் தடையும் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலையும், உடல் நிலையில் பாதிப்பும், விபத்தும், எதிர்பாலினருடன் நட்பையும் உண்டாக்கும்.

குரு சஞ்சாரம்: ஏப்.30, 2024 வரை ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சங்கடங்களுக்கு மேல் சங்கடம், தொழில் முடக்கம், பண நெருக்கடி, பணியில் சிரமம் என்ற நிலை உண்டாகும். அக்.10, 2023 முதல் டிச.20, 2003 வரை வக்கிரம் அடையும் காலத்தில் இப்பலன்கள் மாறுபடும். மே1, 2024 முதல் 11ம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிர்பார்க்கும் நன்மையெல்லாம் உண்டாகும், தொழில், வியாபாரம் லாபம் உயரும். மகிழ்ச்சி அதிகரிக்கும், பொதுவாக லாப குருவின் காலம் உங்களுக்கு  பொற்காலமாகும்.

பொதுப்பலன்: நீங்கள் எதிர்பார்த்த நல்ல மாற்றம் உண்டாகும், குடும்பத்தில் சங்கடம் விலகி நிம்மதி ஏற்படும், வருமானம் அதிகரிக்கும்.சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும். தைரியமுடன் செயல்படுவீர்கள். மே1,2024 க்கு பிறகு குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். விருப்பம் நிறைவேறும்.

தொழில்: தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும், போட்டியாளர்கள் விலகிச் செல்வர். ஆசிரியர்கள், நீதித்துறையினர், தங்கநகை உற்பத்தி, விற்பனை, நிதி நிறுவனம், தரகு, ஏற்றுமதி, இறக்குமதி போன்றவற்றில் லாபம் அதிகரிக்கும்.

பணியாளர்கள்: வேலையில் இருந்த நெருக்கடி விலகும், அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும், விரும்பிய இடத்திற்கு மாறிச் செல்வீர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் நிர்வாகத்தின் பாராட்டை பெறுவர். திறமைக்கு மதிப்புண்டாகும், ஊதியம் அதிகரிக்கும். வாழ்வு வளமாகும்.

பெண்கள்: உடல் உபாதை மறையும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும், எதிர்பார்த்த பணம் வந்து சேரும், குடும்பத்தில் இருந்த சங்கடம் தீரும். கணவரை விட்டுப் பிரிந்தவர்களுக்கு மறுமணம் நடக்கும். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும்.

கல்வி: ஆசிரியர்களின் அறிவுரைகளை ஏற்பீர்கள். கல்வியின் மீது அக்கறை அதிகரிக்கும்,
மே1, 2024  முதல் குருவின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் மேற்கல்விக்கான முயற்சி வெற்றி பெறும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும்.

உடல்நிலை: ஆயுள் ஸ்தானத்தில் சனி சஞ்சரித்தாலும் 3ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் உடல்நலக்குறைவு மறையும். ஆரோக்கியம் மேம்படும். பயமுறுத்திய நோய்கள் சிகிச்சைக்கு கட்டுப்படும்.

குடும்பம்: உறவினர்களுடன் ஏற்பட்ட பகை நீங்கும். வழிபாடு, புண்ணியதல தரிசனங்கள் மீது ஈடுபாடு அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். இடம் வாங்கி வீடு கட்டி குடி போகும் பாக்கியம் சிலருக்கு உண்டாகும். தந்தையின் உடல்நிலை அச்சுறுத்தலை உண்டாக்கும். பெண்களுக்கு மாங்கல்ய ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் கணவர் மீது அக்கறை தேவை.

பரிகாரம்: திருநள்ளாறு கோயிலை தரிசித்து நல்லெண்ணெய் தானம் அளியுங்கள்.  சனிதோறும் நவக்கிரகத்தை வழிபட சங்கடம் விலகும்.


ஆயில்யம்: மகிழ்ச்சி அதிகரிக்கும்

புதனை நட்சத்திர நாதனாகவும், சந்திரனை ராசி நாதனாகவும்  கொண்ட உங்களுக்கு இதுவரை 10ம் இடமான மேஷத்தில் ராகுவும், 4ம் இடமான துலாமில் கேதுவும் சஞ்சரித்து வந்தனர். இரண்டு இடங்களுமே கேந்திர ஸ்தானம் என்பதால் பலன்களில் ஏற்றம் இறக்கமான நிலை உண்டாகி இருக்கும்.

10ம் இடம் என்பது தொழில், ஜீவன ஸ்தானம். 4ம் இடம் என்பது பூமி, வாகனம், வீடு, கல்வி, தாயாருக்குரிய இடம். பாப கிரகங்கள் கேந்திர ஸ்தானங்களில் அமரும் போது நற்பலன்கள் வழங்குவர் என்பது விதி. ராகுவிற்கு செவ்வாய் பகை என்பதால் மேஷத்தில் அமர்ந்த ராகுவால் நற்பலன் தர முடியாமல் போயிருக்கும், தொழில் விவகாரத்தில் மந்த நிலை உண்டாகி இருக்கும். வருமானத்தில் இழுபறி ஏற்பட்டிருக்கும். வருமான நெருக்கடியால் குடும்பத்தில் குழப்பம், போராட்டம் உண்டாகி  இருக்கும். இந்நிலையில் அக்.8, 2023 முதல் ராகு 9ம் வீட்டிலும், கேது 3ம் வீட்டிலும் சஞ்சரிக்கப் போகும் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுமா என நீங்கள் கேட்பது புரிகிறது.

பாக்கிய ஸ்தானமான 9ம் இடத்தில் ராகு சஞ்சரிக்கும் போது நல்ல மாற்றம் ஏற்படும். ஆதாயம் அதிகரிக்கும். கூட்டு முயற்சிகள் பலனளிக்கும். சொத்து விவகாரங்களில் நல்ல பலன் ஏற்படும், பெற்றோர் உடல்நிலையில் எச்சரிக்கை தேவை. குறிப்பாக தந்தையின் உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும், ஆன்மிக யாத்திரை செல்வீர்கள். இழந்த பொருட்களை மீட்கும் வழிவகை உண்டாகும். வீட்டில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்.

கேதுவின் 3ம் இட சஞ்சாரம் நன்மையை உண்டாக்கும். பணியாளர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு அதிகளவில் கிடைக்கும். வருமானத்தை விட உபரி வருமானம் வரும். நண்பர், உறவினர்களின் ஆலோசனையால் முன்னேற்றம் காண்பீர்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். விவசாயம், கால்நடை வளர்ப்பில் ஆதாயம் உண்டாகும். தொட்டது பொன்னாகும். அனைத்திலும் வெற்றி ஏற்படும், குடும்பத்தில் சந்தோஷம் நிலவும், நவீன பொருள் சேர்க்கை உண்டாகும், வாகனம், ஆடை ஆபரணம் சேரும். இக்காலம் யோகமான காலகட்டம்.

சனி சஞ்சாரம்: உங்கள் ராசிக்கு 9ம் இடத்தில் ராகு, 3ம் இடத்தில் கேது சஞ்சரிக்கும் இக்காலத்தில் 7ம் இடமான களத்திர ஸ்தானத்தில் அக்.23, 2023 வரை வக்ர நிலையில் சஞ்சரிக்கிறார் அதன்பின் வக்ர நிவர்த்தியாகி அங்கே ஆட்சியாக சஞ்சரிப்பவர் டிச.20, 2023 முதல் 8ம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கிறார். அதன்பின் நீங்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். 8ம் இடத்து சனி இடர்களை ஏற்படுத்துவார். குடும்பத்தில் நெருக்கடியை உண்டாக்குவார். தொழிலில் போட்டியும், உறவினருடன் மனக்கசப்பு, முயற்சியில் தடை, உடல்நிலை பாதிப்பு, ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை, சிறுசிறு விபத்துகளை ஏற்படுத்தி சோதனைக்கு ஆளாக்குவார்.

குரு சஞ்சாரம்: ஏப்.30, 2024 வரை ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் நிலையில் தொழிலில் போட்டி, நெருக்கடி, பண வருவாயில் சங்கடம், பணியில் பிரச்னை, குடும்பத்தில் போராட்டமான நிலை ஆகிய பலன்களை வழங்குவார். அக்.8, 2023 முதல் டிச.20, 2023 வரை அவர் வக்ரமடையும் காலத்தில் இப்பலன்கள் மாறுபடும். மே 1, 2023 முதல் 11ம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து சங்கடங்களை எல்லாம் நீக்குவார். முயற்சிகளில் லாபம் உண்டாகும். எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வார்.

பொதுப்பலன்: கடவுளின் அருள் பூரணமாக கிடைக்கும். முன்பிருந்த சங்கடம் யாவும் மறையும். உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும், நீண்ட நாள் கனவுகள் மே 1, 2024க்கு பிறகு நிறைவேறும்.

தொழில்: போட்டியாளர்கள் விலகுவர். வியாபாரம் லாபத்தை நோக்கி செல்லும்,  வருமானம் அதிகரிக்கும், கல்வி, பதிப்பகம், தொழிற்சாலைகள், ரியல் எஸ்டேட், பங்குச் சந்தை, ஸ்பேர் பார்ட்ஸ் தொழில்கள் முன்னேற்றமடையும். மே1, 2024 க்கு பிறகு தங்கம், வெள்ளி வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். திரைப்படம், தொலைக்காட்சி கலைஞர்கள் முன்னேற்றம் அடைவர்.

பணியாளர்கள்: புதிய பொறுப்புகள் வந்து சேரும், வாழ்க்கைத்தரம் உயரும். பணிபுரியும் இடத்தில் இருந்த நெருக்கடி நீங்கும், எதிர்பார்த்த பதவி உயர்வு ஏற்படும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு அதிகரிக்கும். எதிர்பார்த்த நன்மை கிடைக்கும்,

பெண்கள்: வாழ்வில் இருந்த நெருக்கடி விலகும், குடும்பத்தில் செல்வாக்கு அதிகரிக்கும், பணியாளர்கள் முன்னேற்றம் அடைவர். கூட்டுத்தொழில் லாபமாக அமையும்.  தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும்.

கல்வி: வித்யா காரகனின் ராசியில் சஞ்சரிக்கும் கேது கல்வி வளத்தை உண்டாக்குவார், ஆசிரியர்களின் அறிவுரைகளை கேட்கும்படி செய்வார், உங்கள் தனித்திறமையை வெளிப்படுத்துவார். மே 1,2024 முதல் குருவின் சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கும். விரும்பிய கல்லுாரியில், விரும்பிய பாடப்பிரிவில் சேர்வீர்கள்.

உடல்நிலை: சனியின் ஆயுள் ஸ்தான சஞ்சாரம் பலமாக இருப்பதால் செயல்களில் கவனம் தேவை, பயணத்தில் விழிப்புணர்வு அவசியம். 3ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் ஆபத்தில் இருந்து தப்பிப்பீர்கள். அச்சுறுத்திய நோய்களும் உங்களை விட்டு விலகும். சிகிச்சையால் உடல் நிலை நலம் பெறும்.

குடும்பம்: தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் இனிதே நடந்தேறும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் தெய்வீக வழிபாடும், ஒற்றுமையும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும், வருமானத்தில் இருந்த நெருக்கடி விலகும். புதிய நிலம், மனை வாங்குதல் வாகனம் வாங்குதல் என்ற கனவு நிறைவேறும்,

பரிகாரம்: திருவெண்காடு புதபகவான், கீழப்பெரும்பள்ளம் கேதுபகவானைத் தரிசித்து வர  நன்மை அதிகரிக்கும்.

 
மேலும் ராகு கேது பெயர்ச்சி பலன் (8.10.2023 முதல் 26.4.2025 வரை) »
temple news
அசுவினி: முயற்சி வெற்றி பெறும்உங்கள் ஜென்ம ராசியில் இதுவரை சஞ்சரித்த ராகு 12ம் இடமான மீன ராசியிலும், ... மேலும்
 
temple news
கார்த்திகை;  கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக ராகு கார்த்திகை முதல் பாதத்தினருக்கு ஜென்ம ராகுவாகவும், 2,3,4 ம் ... மேலும்
 
temple news
மிருக சீரிடம்: கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மிருகசீரிடம் 1 2 ம் பாதத்தினருக்கு விரய ராகுவாகவும், 3,4 ம் ... மேலும்
 
temple news
மகம்: எச்சரிக்கை அவசியம்கேது பகவானை நட்சத்திர நாதனாகவும் சூரியனை ராசி நாதனாகவும் கொண்ட உங்களுக்கு ... மேலும்
 
temple news
உத்திரம்: கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக முதல் பாதத்தினருக்கு பாக்கிய ராகுவாகவும், 2,3,4 ம் பாதத்தினருக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar