கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) பெண்களால் நன்மை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10பிப் 2016 03:02
துணிவுடன் செயல்பட்டு வரும் கும்ப ராசி அன்பர்களே!
சுக்கிரன், குரு மாதம் முழுவதும் நற்பலன் வழங்குவர். சந்திரனால் நன்மை அதிகரிக்கும். விடா முயற்சி இருந்தால் மட்டுமே முயற்சியில் வெற்றி உண்டாகும். சமுக மதிப்பு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே அன்பு நீடிக்கும். புதிதாக ஆடை, அணிகலன் கிடைக்கப் பெறுவர். மார்ச் 3,4 ல் உறவினர் வருகையால் சந்தோஷம் உண்டாகும். மார்ச் 8 க்கு பிறகு பெண்களால் நன்மை கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்துடன் அடிக்கடி விருந்து, விழாவுக்கு சென்று வருவீர்கள்.
தொழில், வியாபாரத்தில் கடினமாக உழைத்தால் முன்னேற்றம் காணலாம். மாத இறுதியில் வருமானம் அதிகரிக்கும். எதிரி தொல்லை மறையும். வாடிக்கையாளர்களின் விருப்பம் அறிந்து செயல்படுவது நல்லது. பிப். 20,21 ல் எதிர்பாராத வகையில் ஆதாயம் கிடைக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும்.
பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் உண்டாகும். சிலருக்கு பணி, இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. மார்ச் 8 க்கு பிறகு சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர்.
கலைஞர்கள் மார்ச் 8 க்கு பிறகு புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். வருமானம் சீராக இருக்கும். புகழ் பாராட்டு சிறப்பாக அமையும்.
அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பலனை பெற முடியாது. தொண்டர்களுக்காக பணம் செலவழிக்க நேரிடும்.
மாணவர்கள் அக்கறையுடன் படிப்பது நல்லது. ஆசிரியர்களின் அறிவுரையை பின்பற்றுவது அவசியம்.
விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற வருமானம் காண்பர். கால்நடை மூலம் ஆதாயம் கிடைக்கும். மாத இறுதியில் புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும்.
பெண்கள் சிறப்பான பலன் காணலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். விருந்து விழா என சென்று மகிழ்வீர்கள். பிப். 14,15 மார்ச் 12,13 தேதிகளில் புத்தாடை, நகைகள் வாங்கலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
நல்ல நாள்: பிப்.14,15,20,21,22,23,24, மார்ச் 1,2,3,4,8,9,12,13 கவன நாள்: பிப். 25,26 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 3,9 நிறம்: சிவப்பு, மஞ்சள்
பரிகாரம்: வீரபத்திரருக்கு பன்னீர் அபிஷேகம் செய்யுங்கள். செவ்வாய்கிழமைகளில் முருகன் கோவிலுக்குச் செல்லுங்கள்.
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »