சுக்கிரன், சனி மாதம் முழுவதும் சாதகமாக இருந்து சிறப்பான பலனை தருவர். செவ்வாய் பிப். 27க்கு பிறகு நன்மை தருவார். மற்ற கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும், சனி பகவானின் சிறப்பான இடத்தால் எந்த பிரச்னையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். ஆற்றல் மேம்படும். பெண்களால் பொருள் சேரும். விருந்து விழாவுக்கு செல்வீர்கள். புதனால் வீட்டிற்குள்ளும், அக்கம் பக்கத்தினர் வகையிலும் கருத்து வேறுபாடு வரலாம். புதிய வீடு, வாகனம் வாங்கலாம்.
தொழில், வியாபாரத்தில் லாபம் பெருகும். இருப்பினும் செலவு அதிகரிக்கும். புதிய வியாபாரம் அனுகூலம் அடையும். பிப்ரவரி 18,19ல் எதிர்பாராத வருவாய் கிடைக்கும். பொருள் களவு போக வாய்ப்பு உண்டு. பாதுகாப்பை பலப்படுத்தவும். அரசின் சலுகை, வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.
பணியாளர்கள் சிலர் இடமாற்றத்தை சந்திக்கலாம். 22,23,24ல் எதிலும் வெற்றி காணலாம். பிப். 27க்கு பிறகு பணியில் சிறப்பான நிலையை காணலாம். சம்பள உயர்வு, விண்ணப்பித்த கடன் கிடைத்தல் ஆகியவற்றால் மகிழ்வீர்கள். கடந்த காலத்தில் இருந்த கடுமையான அதிகாரிகளின் கெடுபிடி படிப்படியாக குறைந்து விடும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். எதிர்பார்த்த புகழ் வரும்.
அரசியல்வாதிகள் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
மாணவர்கள் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. சேர்க்கை காரணமாக உங்கள் செல்வாக்குக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் நட்பு விஷயத்தில் சற்று கவனமாக இருக்கவும்.
விவசாயிகள் நல்ல பலன் கிடைக்கப் பெறலாம். விளைச்சல் நன்றாக இருக்கும். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த வருவாய் கிடைகும். புதிய சொத்து வாங்க நினைப்பவர்கள் மாத இறுதியை பயன்படுத்திக் கொள்ளவும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
பெண்கள் சாலையில் கவனமாக நடக்கவும். பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு. பிப். 14, மார்ச்10,11ல் புத்தாடை, நகை வாங்கலாம். பிப். 20,21ல் பெற்றோர் வீட்டில் இருந்து உதவிகள் வரப் பெறலாம். சகோதரிகளால் நன்மை ஏற்படும்.
நல்ல நாள்: பிப். 13,18,19,20,21,27,28,29 மார்ச் 1,2,5,6,7,10,11 கவன நாள்: பிப். 22,23,24 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்: 6,7 நிறம்: கருப்பு,வெள்ளை
பரிகாரம்: நவக்கிரக மண்டபத்தில் சூரியன், புதனுக்கு அர்ச்சனை செய்யுங்கள். கோதுமை, பாசிபயறு தானம் செய்யலாம்.
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »