மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) வீடு வாங்கலாம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மே 2016 12:05
அன்புள்ளம் கொண்ட மகர ராசி அன்பர்களே!
புதன் ஜூன் 3 வரையும், சுக்கிரன் ஜூன் 13 வரையும் நன்மை தருவார்கள். செவ்வாய், சனி மாதம் முழுவதும் நன்மை தருவர். நல்ல பணப்புழக்கம் இருக்கும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உறவினர்களால் உதவி கிடைக்கும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்கலாம்.
தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் அனுகூலத்தை கொடுக்கும். ஆனால் போட்டி கடுமையாக இருக்கும். வெளியூர் பயணம் ஏற்படலாம். ஜூன் 6,7ல் எதிர்பாராத அளவு பணவரவு இருக்கும்.
பணியாளர்களுக்கு வேலைப்பளு குறையும். கோரிக்கைகள் நிறைவேறும். ஜூன்3க்கு பிறகு வேலை காரணமாக சிலர் குடும்பத்தை பிரியும் நிலை வரலாம். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். மே 19,20,21-ந் தேதிகளில் சிறப்பான பலனை காணலாம். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
கலைஞர்கள் பிரபலம் அடைவர். பணவரவு நன்றாக இருக்கும். ஜூன் 3க்கு பிறகு முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும். புதிய ஒப்பந்தத்திற்காக சற்று முயற்சி எடுக்க வேண்டி இருக்கும்.
அரசியல்வாதிகள் தலைமையிடம் நல்ல பெயர் எடுப்பர். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். ஜூன் 3க்கு பிறகு சிரத்தை எடுத்து படிப்பது நல்லது.
விவசாயிகள் நல்ல வருமானத்தை பெறுவர். புதிய சொத்து வாங்கலாம். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.
பெண்களுக்கு பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பை பெறுவர்.
நல்ல நாள்: மே 19, 20, 21, 22, 23, 26, 27, 28, 31 ஜூன் 1, 6, 7, 8, 9, 10. கவன நாள்: மே 14, 15, 16, ஜூன் 11, 12 சந்திராஷ்டமம் அதிர்ஷ்ட எண்: 2, 4 நிறம்: சிவப்பு, வெள்ளை
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை கோதுமை தானம் செய்யுங்கள். துர்க்கை வழிபாடு முன்னேற்றத்திற்கு துணை நிற்கும்.
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »