Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) திட்டாமல் கொட்டாமல் உங்களை பார்த்துக்குவார் கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) ... விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) தேகத்திலே சாக்லெட் வேகத்திலே ராக்கெட் விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ...
முதல் பக்கம் » குரு பெயர்ச்சி பலன்கள் (2.9.2017 முதல் 3.10.2018 வரை)
துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) (ஆண்டவன் தருவான் வரம் அவனுக்கே கிடைக்காத சுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2016
12:10

சிறந்த நண்பர், நல்ல உறவினர்களையும் பெற்ற துலாம் ராசி அன்பர்களே!

குரு பகவான் இதுவரை உங்கள் ராசிக்கு 11ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை
செய்திருப்பார். குறிப்பாக புதிய வேலையும், சம்பள உயர்வும் கிடைத்திருக்கும். வேலையில் திருப்தி கண்டிருப்பீர்கள். வியாபாரம் சிறப்பாக நடந்திருக்கும். பணப்புழக்கம் மேம்பட்டிருக்கும். எடுத்த காரியத்தை எல்லாம் வெற்றிகரமாக செய்து முடித்திருப்பீர்கள். இவ்வாறு பல்வேறு நன்மைகளை தந்த குரு பகவான், இப்போது உங்கள் ராசிக்கு 12ம் இடமான கன்னி ராசிக்கு அடியெடுத்து வைத்துள்ளார். இது சுமாரான நிலையே. குரு 12ம் இடத்தில் இருக்கும்போது பொருளாதார தேக்கமும், சில தொல்லைகளும் உருவாகும். குடும்பம். பணி தொடர்பாக மன வருத்தம், வீண் அலைச்சலும் ஏற்படும் என்பது பொதுவான பலன். குரு சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் மற்ற கிரகங்களால் நன்மை கிடைக்கும். அந்த வகையில் மற்ற முக்கிய கிரகங்களின் நிலையை பார்ப்போம். நிழல் கிரகமான ராகு உங்கள் ராசிக்கு 11ம் இடமான சிம்மத்தில் இருப்பது மிகச்சிறப்பான இடம் ஆகும். அவர் பொருளாதாரத்தில் நல்ல வளத்தைத் தருவார். பெண்களால் அனுகூலம் கிடைக்கும். ஆனால், கேது 5ம் இடமான கும்பத்தில் இருந்து சில பிரச்னைகளை உருவாக்குவார். பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமை. சனிபகவான் தற்போது உங்கள் ராசிக்கு2ம் இடத்தில் இருக்கிறார்.

இதுவும் சிறப்பான இடம் அல்ல. அதாவது ஏழரை சனியின் இறுதிகட்டத்தில் இருக்கிறீர்கள். இந்த காலக்கட்டத்தில் சனி அதிக பளுவை உங்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அவர் விடுபடும் போது அதற்கான பலனையும் தர தயங்க மாட்டார். மேலும் சனிபகவான் தான் நின்ற ராசியில் இருந்து 3,7,10ம் இடங்களை பார்க்கிறார். அவரது 10ம் இடத்துப் பார்வை உங்களுக்கு சிறப்பாக அமைந்து உள்ளது. அதன் மூலம் நற்பலன்கள் கிடைக்கும். பொருளாதார வளம் சீராக இருக்கும். அதே நேரம் செலவுகளும் அதிகரிக்கும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. உறவினர், நண்பர்களிடம் வீண் விவாதத்தை தவிர்க்கவும். நன்மைகள் என பார்க்கும் போது ஒட்டுமொத்த கிரகநிலையின் அடிப்படையில், புதுமனை, நிலம் வாங்க நினைப்பவர்களின் எண்ணம் நிறைவேறும். புதிய வீடு வாங்கலாம். வாகனம் வாங்கும் யோகம் இருக்கும். வீட்டுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும். அதற்கான பொருளாதார வசதி இருக்கும். குடும்பத்தில் சில பிரச்னைகள் வரலாம். குடும்பத்தைப் பொறுத்தவரை கணவன், மனைவி இடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போக வேண்டும். சிலர் பணி அல்லது வேறு சூழ்நிலைகளால் குடும்பத்தை விட்டு பிரியும் நிலையும் உருவாகலாம். திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் தள்ளி போகலாம். ஆனால் எல்லாம் நல்லதற்கே என்று கருதவும்.  கேதுவால் உடல்நிலையில் சிற்சில உபாதைகள் வரலாம். ஆனால் பெரிய பாதிப்பு ஏதும் இருக்காது. பிள்ளைகளின் நடவடிக்கையை கண்காணிப்பது பிரச்னைகளைத் தவிர்க்கும். தெய்வ சங்கல்பம் உங்களுடன் இருப்பதால், நீங்கள் இதுவரை செய்த புண்ணியங்களின் பலன் கடவுளுக்கு கூட கிடைக்காத சுகத்தை
உங்களுக்கு அளிக்கும்.

தொழில், வியாபாரம்: தொழிலதிபர்களும், வியாபாரிகளும் இன்னும் சில மாதங்கள் ஓய்வை பற்றி கவலைப்படாமல் பாடுபட வேண்டியிருக்கும். பிற்போக்கான நிகழ்வில் இருந்து எதிர்நீச்சல் போட வேண்டியதிருக்கும். சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி பணத்தை இழக்க நேரிடலாம். எனவே யாரையும் எளிதில் நம்பிவிட வேண்டாம். வீண் அலைச்சல் ஏற்படலாம். அரசு வகையில் எந்த உதவியும் கிடைக்காமல் போகலாம். வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். இடம்விட்டு இடம் மாறும் சூழ்நிலை ஏற்படும். இந்த பின்னடைவுகள் எல்லாம் டிசம்பர் மாதம் வரைதான். அதன்பின் உங்கள் நிலையில் புதியதோர் மாற்றம் ஏற்படும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். அரசிடம் இருந்து வந்த தொல்லை அடியோடு மறையும். வெளியூர் பயணம் அனுகூலத்தை கொடுக்கும். புதிய வியாபாரத்தை தொடங்கலாம். வேலையின்றி இருப்பவர்கள் தொழில் ஆரம்பிக்கலாம். சற்று முயற்சி எடுத்தால் அரசின் உதவி கிடைக்கும். போட்டியாளர்களின் தொல்லை அவ்வப்போது தலைதுõக்கத்தான் செய்யும். சற்று கவனம் தேவை.

பணியாளர்கள்: கடந்த காலத்தைப் போல அனுகூலமான பலனை எதிர்பார்க்க முடியாது. கடுமையான உழைப்பை சிந்த வேண்டியிருக்கும். அலைச்சல் அதிகரிக்கும். அதற்காக உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்காமல் போகாது. மேல் அதிகாரிகளிடம் அனுசரணையாக போகவும். சிலருக்கு வெளியூர் மாற்றம் ஏற்படலாம். வேலைப்பளு அல்லது பிரச்னை வருகிறதே என்பதற்காக எந்தவித காரணத்தைக் கொண்டும் வேலையை விட்டுவிடும் நிலைக்கு போகக் கூடாது. அதை எதிர்த்து சமாளிக்க வேண்டும். அரசு வேலையில் இருப்பவர்கள் அதிக கவனத்துடன் இருக்கவும். அவர்களுக்கு கடன் போன்ற கோரிக்கைகள் நிறைவேற தாமதம் ஆகும்.

கலைஞர்கள்: இதற்கு முன்புபோல் அனுகூலங்கள் அதிகம் கிடைக்கும் என்று
எதிர்பார்க்க வேண்டாம். உங்கள் கவுரவம் மட்டும் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. டிசம்பர் மாதம் முதல் நல்ல பணப்புழக்கம் ஏற்படும்.

அரசியல்வாதிகள்: பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும். எதிர்பார்த்த பதவி ஏதும் கிடைக்க சாத்தியமில்லை.

மாணவர்கள்: சற்று சிரத்தை எடுத்து படிக்க வேண்யிருக்கும். கடந்த ஆண்டு குருபகவானின் கருணையால் நடந்து முடிந்த தேர்வுகளில் நல்ல மதிப்பெண்
கிடைத்திருக்கும். ஆனால் இந்த கல்வி ஆண்டில் அதிக முயற்சி எடுக்க வேண்டி வரும். போட்டி பந்தயங்களில் வெற்றி காண போராட்ட உணர்வு வேண்டும்.
ஆசிரியர்கள் ஆலோசனைப்படி நடந்து கொள்ள வேண்டும். தகாதவர்களோடு சேர வாய்ப்பு உண்டு என்பதால் நட்பு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

விவசாயிகள்: உழைப்புக்கு தகுந்த வருமானம் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் இருக்கும். அதிக செலவு பிடிக்கும் பயிரை தவிர்ப்பது நல்லது. குரு அதிசார காலத்தில் விவசாயம் செழிக்கும். விவசாயத்தை நவீனப்படுத்துவீர்கள். எள், உளுந்து, கொள்ளு, பனை போன்றவற்றில் நல்ல வருவாய் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் ஆரம்ப காலத்தில் சாதகமாக இல்லாவிட்டாலும் பின்பு சரியாகி விடும்.

பெண்கள்: சீரான பலனை காண்பீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். குடும்ப ஒற்றுமைக்காக கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். குழந்தைகளை உங்கள் கண்காணிப்பில் வைப்பது நல்லது.

பரிகாரம்
: ஏழைகள் படிக்க உதவி செய்யுங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர் மாலை அணிவித்து வழிபாடு நடத்துங்கள். சனிக்கிழமை சனிபகவானுக்கு சிறப்பு அர்ச்சனை செய்யுங்கள்.  முருகப்பெருமானை வழிபடுங்கள்.

 
மேலும் குரு பெயர்ச்சி பலன்கள் (2.9.2017 முதல் 3.10.2018 வரை) »
temple
நல்லவர்களின் நட்பை விரும்பும் மேஷ ராசி அன்பர்களே!

குரு பகவான் 6-ம் இடத்தில் இருந்து 7-ம் இடத்திற்கு ... மேலும்
 
temple
விடாமுயற்சியால் வெற்றி காணும் ரிஷப ராசி அன்பர்களே!

குருபகவான் ராசிக்கு 5-ம் இடத்தில் இருந்து 6-ம் ... மேலும்
 
temple
அனைவரிடமும் அன்பு காட்டும் மிதுன ராசி அன்பர்களே!

குருபகவான்  ராசிக்கு 5-ம் இடத்துக்கு செல்வது ... மேலும்
 
temple
குறிக்கோளுடன் பணியாற்றி வரும் கடக ராசி அன்பர்களே!
 
குருபகவான் ராசிக்கு 4-ம் இடமான துலாம் ... மேலும்
 
temple
நம்பகத்தன்மையுடன் நடந்து கொள்ளும்  சிம்ம ராசி அன்பர்களே!

குருபகவான்  ராசிக்கு 3-ம் இடமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.