Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ... மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) பதவி உயர்வு பெறுவீங்க! சுபநிகழ்ச்சி நடத்துவீங்க! மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) குடும்பத்தில் குதூகலம் தொழிலில் அமோக லாபம்
எழுத்தின் அளவு:
ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) குடும்பத்தில் குதூகலம் தொழிலில் அமோக லாபம்

பதிவு செய்த நாள்

16 ஆக
2016
09:08

தன்னம்பிக்கையுடன் செயலாற்றும் ரிஷப ராசி அன்பர்களே!

புதன், சுக்கிரன், குரு மாதம் முழுவதும் நன்மை தருவர். மற்ற கிரகங்களால் நன்மை ஓரளவே கிடைக்கும். பணப்புழக்கத்துக்கு குறைவிருக்காது. புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வீர்கள். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். பொன், பொருள் சேரும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். சான்றோர்களின் அன்பும், ஆசியும் கிடைக்கப்பெறுவீர்கள். குடும்பத்தில் புதனால் குதுõகலம் உண்டாகும். சுபவிஷயத்தில் இருந்த தடையனைத்தும் விலகும். மனம் போல சுபநிகழ்ச்சிகள் ஆடம்பர முறையில் நடந்தேறும். கணவன், மனைவி இடையே இணக்கம் அதிகரிக்கும். புதுமணத் தம்பதியர் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர். ஆக.25,26ல் பெண்களால் நன்மை உண்டாகும். அடிக்கடி விருந்து, விழா என சென்று வருவீர்கள். பூர்வீகச் சொத்து மூலம் வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு.  ஆக. 21,22ல் உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே சமயத்தில் செப்.1,2ல் உறவினர் வகையில் சிரமத்தை சந்திக்க நேரிடலாம் கவனம். செவ்வாயால் அக்கம் பக்கத்தினர் வகையில் தொல்லை உருவாகலாம். பயணத்தின் போது கவனம் தேவை. உடல் நலம் சுமாராக இருக்கும். கண் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது அவசியம்.

தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சேமிக்கும் விதத்தில் அமோக லாபம் கிடைக்கும். தொழிலாளர் நலனில் அக்கறை செலுத்த தொடங்குவீர்கள். வங்கி நிதி உதவியால் புதிய வியாபார முயற்சி வெற்றி பெறும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும். சூரியனால் போட்டியாளர்களின் தொல்லையைச் சந்தித்தாலும் சாமர்த்தியமாக எதிர்கொள்வீர்கள்.

பணியாளர்களுக்கு வேலையில் திறமை பளிச்சிடும். மேலதிகாரிகளின் ஆதரவும்,
சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் சிறப்பான முறையில் கிடைக்கும். குரு சாதகமாக
இருப்பதால் தடைகளை முறியடித்து சாதனை படைப்பீர்கள். எதிர்பார்த்த புதிய பதவி கிடைக்க யோகமுண்டாகும். விண்ணப்பித்த கடனுதவி விரைவில் கிடைக்கும்.
ஆக. 19,20, செப்.15,16ல் சிறப்பான நன்மையை எதிர்பார்க்கலாம்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்கும். அரசு வகையில் விருது, பாராட்டு கிடைக்க வாய்ப்புண்டு. ஆக. 26க்கு பிறகு சக கலைஞர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் ரீதியாக நீண்ட துõரப் பயணம் செல்ல நேரிடலாம்.

அரசியல்வாதிகள் தலைமையின் ஆதரவு கிடைக்கப் பெறுவர். ஆனால் பதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். தொண்டர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். மக்கள்நல பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். அரசியல் ரீதியான பயணங்களில் இனிய அனுபவம் கிடைக்கும்.

மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர். ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு துணை நிற்கும். போட்டி, பந்தயத்தில் பங்கேற்று வெற்றி பெறுவீர்கள். பெற்றோருக்கு பெருமை சேர்ப்பர். விளையாட்டுத்துறையில் சாதிக்கும் நோக்கில் செயல்படுவீர்கள்.

விவசாயிகள் சீரான வளர்ச்சி காண்பர். காய்கறி, கீரை வகைகள், நெல், கோதுமை, கேழ்வரகு மற்றும் பழ வகைகள் ஆகியவற்றில் நல்ல மகசூல் கிடைக்கப் பெறுவர். கால்நடைவளர்ப்பின் மூலம் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். வழக்கு, விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம். நிலப்பிரச்னைக்கு சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது நல்லது.

பெண்கள் உறவினர் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். கணவரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு விரும்பிய பணி,
இடமாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு. சுயதொழில் புரியும் பெண்களுக்கு அரசு வகையில் சலுகை கிடைக்கும். ஆக.26க்கு பிறகு ஆடை, ஆபரணம் சேர வாய்ப்புண்டு. மாத
முற்பகுதியில் சகோதர வகையில் நன்மை உண்டாகும்.

நல்ல நாள்: உங்கள் ராசிக்கு ஆக.19,20,21, 22,25,26,29,30,31.செப். 5,6,7,8,9,15,16 ஆகியவை நல்ல நாட்களாகும். இந்த நாட்களில் சுபநிகழ்ச்சிகளுக்குரிய ஏற்பாடு துவங்குதல், பயணம் செல்லுதல் ஆகியவற்றைச் செய்யலாம்.

கவன நாள்: ஒரு ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம் தான்
சந்திராஷ்டமம். அந்த வகையில் உங்கள் ராசிக்கு 8ம் இடமான தனுசு ராசியில் சந்திரன் செப்.10,11,12ல் இருப்பார். இந்த காலத்தில் வீண் விவாதங்களைத் தவிர்த்து இறை
வழிபாட்டில் கவனம் செலுத்தவும். பண விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட எண்: 4,6 நிறம்: பச்சை, மஞ்சள்

பரிகாரம்: நாகதேவதையை வணங்கி வாருங்கள். சனிக்கிழமை ஆஞ்சநேயரை வழிபடுங்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar