Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
மிதுனம்: (மிருகசிரீடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3).. காத்திருக்கு பதவி உயர்வு மிதுனம்: (மிருகசிரீடம் 3,4, திருவாதிரை, ... சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1).. அதிர்ஷ்டவசமாக சொத்து சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1).. ...
முதல் பக்கம் » சித்திரை ராசிபலன் (14.4.2018 – 14.5.2018)
கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்).. முயற்சியில் வெற்றி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மே
2017
16:35

அனைவரையும் நேசிக்கும் கடக ராசி அன்பர்களே!

இந்த மாதம் 11ம் இடமான ரிஷபத்தில் இருக்கும் செவ்வாய், சூரியன் நற்பலனை கொடுப்பர். புதன் ஜூன் 13 வரையும், சுக்கிரன் மே 31 வரை  நன்மையளிக்க காத்திருக்கின்றனர்.  குரு 3ம் இடமான மிதுனத்தில் சஞ்சரிப்பதால் சுமாரான பலன் உண்டாகும்.செவ்வாயால் முயற்சியில் வெற்றி  ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். சூரியன், புதனால் தொழிலில் லாபம் படிப்படியாக அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த நன்மை நடக்கும்.  சுக்கிரனால் மே 31 வரை, பெண்களின் மூலம் நன்மையை எதிர்பார்க்கலாம். அதன் பின் எதிரி  தொல்லை, அவப்பெயர் ஏற்பட வாய்ப்புண்டு.

கணவன், மனைவி இடையே அன்பு நீடிக்கும். மே 25,26 ல் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஜூன் 5,6,7ல்  உறவினர்கள் வகையில் கருத்துவேறுபாடு உருவாகி மறையும்.  மே 30,31ல் சகோதர வழியில் நன்மை உண்டாகும். விருந்து, விழா என அடிக்கடி  செல்வீர்கள். ஜூன் 3,4ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். மாத முற்பகுதியில் புதிய வீடு,வாகனம் வாங்க யோகமுண்டு. தொழில், வியாபாரத்தில் வருமானத்திற்கு குறைவிருக்காது. மாத தொடக்கத்தில் பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம்  அடையும். பங்கு வர்த்தகம் மூலம்  நல்ல லாபம் கிடைக்கும்.  சூரியன், செவ்வாயால் வங்கி கடன் எளிதாக கிடைக்கும். வியாபாரத்தை  விரிவுபடுத்தும் முயற்சி வெற்றி பெறும். தொழிலாளர்கள் உங்கள் மீதுள்ள அன்பால் நன்றியுணர்வுடன் பணியாற்றுவர்.

அரசாங்க வகையில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். ஜூன் 13 க்குப் பிறகு மறைமுக எதிரி தொல்லை குறுக்கிடலாம். மே 27,28,29,  ஜூன் 3,4 ல் ச ந்திரனால் சிறு தடைகள் வரலாம். மே15, ஜூன் 10,11,12 ல் எதிர்பாராத வகையில் பணம் வர வாய்ப்புண்டு.  பகைவர்களை எதிர்த்து வெற்றி  கொள்ளும் ஆற்றல் உண்டாகும்.

பணியாளர்கள் நல்ல வளர்ச்சி காண்பர். குறிப்பாக போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் மேன்மை  அடைவர். அரசு ஊழியர்களுக்கு விண்ணப்பித்த கோரிக்கை நிறைவேறும். புதன், சுக்கிரன் சாதகமான இடத்தில் இருப்பதால்,  தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.  கடந்த மாதத்தில் இருந்த வேலைப்பளு  குறையும். இடமாற்ற பீதி இனி இருக்காது. சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். ஜூன் 13 க்கு பிறகு முயற்சிகளில் பின்னடைவு நேரிடும்.  மே 23,24 ஆகிய நாட்களில் முக்கிய கோரிக்கை நிறைவேறும். பணியிடத்தில் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.  கலைஞர்களுக்கு சாதகமான காற்று வீசும் கால கட்டம். எதிர்பார்த்த புகழ், பாராட்டு வந்து சேரும். புதிய ஒப்பந்தம் எளிதில் கையெழுத்தாகும். மே 30க்கு பிறகு விடாமுயற்சி தேவைப்படும்.

அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் மக்கள் மத்தியில் நற்பெயர் காண்பர். பொருளாதார நிலையிலும் முன்னேற்றம் பெறுவர்.  ஜூன் 1,4,5,6 ல்  மனக்குழப்பம் ஏற்பட்டு விலகும். மாணவர்களுக்கு புதன் சாதகமாக இருப்பதால் கல்வி வளர்ச்சி உண்டாகும். ஆசிரியர்களின் ஆலோசனை நன்மைக்கு வழிவகுக்கும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். ஜூன் 13க்குப் பிறகு சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். விவசாயிகள் பயறு வகைகள் மற்றும் பசு வளர்ப்பு மூலம் எதிர்பார்த்த வருமானம்  காணலாம். புதிய சொத்து வாங்க நினைப்பவர்களுக்கு மே  27க்குள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வழக்கு, விவகாரத்தில் சாதகமான முடிவு வர வாய்ப்புண்டு பெண்கள், கணவர் மற்றும் குடும்பத்தாரின்  அன்பை பெறுவர். அண்டை வீட்டாரின் ஆதரவு கிடைக்கும்.  பெண் காவலர்கள் சிறப்பான பலன் பெறுவர். புதிய பதவி வலிய தேடி வரும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஜூன் 13க்குப் பிறகு வேலையில் பொறுமை தேவை. ஜூன் 3,4 ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்க யோகமுண்டு. பெற்றோர் வீட்டில் இருந்து சீதனப் பொருள் வரப் பெறலாம். மே16,17,18, ஜூன் 13,14 ல் வாழ்வில் இனிய அனுபவம் உண்டாகும். விருந்து, விழா என செல்வீர்கள். சகோதரர்களால் பண உதவி கிடைக்கும்.

பரிகாரம்:
* சனியன்று பெருமாளுக்கு துளசி அர்ச்சனை
* பவுர்ணமியன்று அம்மன் கோவிலில் விளக்கு
* சஷ்டியன்று முருகனுக்கு பாலாபிஷேகம்

நல்ல நாள்: மே 15, 16, 17, 18, 23, 24, 25,26, 30, 31, ஜூன் 3, 4, 10, 11, 2, 13, 14
கவன நாள்: மே 19,20 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்:  1,3,7  நிறம்: சிவப்பு, பச்சை

 
மேலும் சித்திரை ராசிபலன் (14.4.2018 – 14.5.2018) »
temple
மற்றவருக்கு உதாரணமாக திகழும் மேஷ ராசி அன்பர்களே!

குருபகவான் ராசிக்கு 7-ம் இடத்தில்   அமர்ந்து ... மேலும்
 
temple
பிறரை குறை கூற விரும்பாத ரிஷப ராசி அன்பர்களே!

ராகு 3-ம் இடத்தில் இருந்து சாதகபலனை வாரி வழங்குவார். ... மேலும்
 
temple
மற்றவர் நலனில் அக்கறை கொண்ட மிதுன ராசி அன்பர்களே!

ராசிக்கு  5-ல் இருக்கும் குரு பகவானும், 11-ல் ... மேலும்
 
temple
மனித நேயமுடன் நடக்க விரும்பும் கடக ராசி அன்பர்களே!

இந்த மாதம் முழுவதும் வளர்ச்சிக்கான சூழ்நிலை ... மேலும்
 
temple
சிந்தனையால் தூயவாழ்வு நடத்தும் சிம்ம ராசி அன்பர்களே!

மாத முற்பகுதியில் அதிக நன்மை உண்டாகும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.