Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரிஷபம்: (கார்த்திகை 2,3,4, ரோகிணி, ... கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்).. முயற்சியில் வெற்றி கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்).. ...
முதல் பக்கம் » ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 )
மிதுனம்: (மிருகசிரீடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3).. காத்திருக்கு பதவி உயர்வு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மிதுனம்: (மிருகசிரீடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3).. காத்திருக்கு பதவி உயர்வு

பதிவு செய்த நாள்

13 மே
2017
04:05

பண்பாளர்களாக  திகழும் மிதுன ராசி அன்பர்களே!

இந்த மாதம் 3ம் இடத்தில் இருக்கும் ராகு, 6ம் இடத்தில் இருக்கும் சனி ஆகியோரால் நற்பலன் தொடர்ந்து கிடைக்கும்.  சுக்கிரன் மே 31ல்  ராசிக்கு  11ம் இடமான மேஷத்திற்கு மாறி நன்மை தர காத்திருக்கிறார். புதனால் மே 28 வரை நன்மை உண்டாகும்.  மற்ற கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சுமாரான பலன் கிடைக்கும். ராசிக்கு 4ல் உள்ள குரு, 9ல் உள்ள கேது,  12ல் இணைந்திருக்கும் சூரியன்,செவ்வாய் ஆகியோரால் நன்மையை எதிர்பார்க்க முடியாது. ராகுவால் முயற்சியில் வெற்றி உண்டாகும். மனதில் மகிழ்ச்சி குடியிருக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சியை வாரி வழங்குவார்.  மே 30க்கு பிறகு வருமானம் சிறப்பாக இருக்கும். உறவினர் வருகையால் நன்மை உண்டாகும்.  

ஜூன் 3, 4 ல் உறவினர் வகையில் கருத்து வேறுபாடு உருவாகலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.  மே 27,28,29 ல் பெண்களால் நன்மை கிடைக்க வா ய்ப்புண்டு. விருந்து விழா என செல்வீர்கள்.  புதனால் ஜூன் 12 க்கு பிறகு குடும்பத்தில் பிரச்னை உருவாகலாம். அண்டை வீட்டாருடன் கருத்துவேறுபாடு  வரலாம். சிலருக்கு பொருள் இழப்பும் ஏற்படலாம். செவ்வாயால் இருந்த பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள்,  பொருள் விரயம் முதலியன மே26 க்கு பிறகு மறையும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.  சனீஸ்வரரால்  போட்டியாளர்களின்  சதியை முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள். ஜூன் 8,9 ல் எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்கும். மே 25,26,30,31ல் சந்திரனால் பண விரயம் ஆகலாம். சமூகத்தில் மதிப்பு, மரியாதை எதிர்பார்த்தபடி இருக்காது. சூரியன், புதன் உங்கள் ராசிக்கு 12ல் இருப்பதால் திடீர் விரயம் ஏற்படும். தொழிலில் அவ்வப்போது சிறு தடைகள் குறுக்கிடலாம். பணியாளர்கள் பணியிடத்தில் செல்வாக்குடன் திகழ்வர். நீண்ட நாளாக எதிர்பார்த்த பதவி உயர்வு விரைவில் கிடைக்கும். அதிகாரிகளின் கருணை பார்வை பெற்று முன்னேறுவர்.  மே 27க்கு பிறகு வேலைப் பளுவும், அலைச்சலும் ஏற்பட வாய்ப்புண்டு.  மே 21,22ல்  உங்களின் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது கேட்பது நல்லது.  சூரியன்  ராசிக்கு 12ல் இருப்பதால் திடீர் இடமாற்றம் ஏற்படலாம்.

கலைஞர்கள் சீரான வளர்ச்சி காண்பர். சுக்கிரனால் ஏற்பட்ட எதிரி தொல்லை, மறைமுகப்போட்டி, அவப்பெயர் மே 30க்கு பிறகு  மறையும். புதிய  ஒப்பந்தம்  விரைவில் கிடைக்கும்.  அரசியல்வாதிகள், பொது நல சேவகர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஜூன் 5,6,7ல் மனக்குழப்பம் ஏற்படலாம். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பர்.  மேல் படிப்பில் விரும்பிய நிறுவனத்தில் எதிர்பார்த்த பாடப்பிரிவில் சேர்ந்து மகிழ்வர். ஆசிரியர்களின் ஆலோசனை பயனுள்ளதாக அமையும்.  ஜூன் 13க்கு பிறகு விடாமுயற்சி இருந்தால் மட்டுமே பலன்  கிடைக்கும்.

விவசாயிகள் பழவகைகள், கால்நடை வளர்ப்பின் மூலம்  நல்ல வருமானம் பெறுவர்.  புதிய சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்க  நேரிடும்.  வழக்கு, விவகாரத்தில்  சுமாரான முடிவு கிடைக்கும். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம். பெண்கள் கணவன் மற்றும் குடும்பத்தாரின் மத்தியில் நற்பெயருடன் திகழ்வர்.  அக்கம்பக்கத்தினர் வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம். தடைபட்ட திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் மே 27க்குள் கைகூடி வரும்.  வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிம்மதியும், திருப்தியும் உண்டாகும். வியாபாரம் செய்யும் பெண்களுக்கு சுக்கிரனால்  லாபத்துக்கு குறைவிருக்காது. ஜூன் 1,2ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்க யோகமுண்டு.  பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம்  வரப் பெறலாம். மே 15, ஜூன் 10,11,12ல் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம்.  சகோதரர்கள் ஆதரவுடன் செயல்படுவர்.

பரிகாரம்:
* சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு எள்தீபம்
* தினமும் காலையில் சூரிய தரிசனம்
* பிரதோஷத்தன்று சிவனுக்கு பாலாபிஷேகம்

நல்ல நாள்: மே 15,21,22,23,24,27,28,29, ஜூன் 1,2,8,9,10,11,12
கவன நாள்: மே 16,17,18, ஜூன் 13,14 சந்திராஷ்டமம்.  
அதிர்ஷ்ட எண்: 5,7  நிறம்: நீலம், வெள்ளை

பகிர்க copied
 
மேலும் ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 ) »
temple news
மேஷம்: அசுவினி: எந்த நிலை வந்தாலும் அதை எதிர்கொண்டு வாழக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் ... மேலும்
 
temple news
ரிஷபம் .. கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: செல்வாக்கு, அந்தஸ்து என்ற நோக்கத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மிதுனம். .மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி ... மேலும்
 
temple news
கடகம்.. புனர்பூசம் 4 ம் பாதம்: சூழ்நிலை அறிந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்.. மகம்: படிப்பினைகளால் பாடம் கற்றுவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் சங்கடங்கள் விலகும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar