Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) - உறவினரால் உதவி மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ... மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) - பதவி உயர்வு மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ...
முதல் பக்கம் » ஆடி ராசிபலன் (17.7.2018 – 16.8.2018)
கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) - ஆடம்பர வசதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 செப்
2017
15:27

சுறுசுறுப்புக்கு பெயர் பெற்ற கும்ப ராசி அன்பர்களே!

இந்த மாதம் புதன் செப்.22ல் இருந்து அக். 9 வரையும், சுக்கிரன் அக்.9க்கு பிறகும் நற்பலன் கொடுப்பர். குரு, ராகு மாதம் முழுவதும் நன்மையளிப்பர். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தேவை தாராள செலவில் பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக செயல்படுவர். திட்டமிட்டபடி சுபநிகழ்ச்சிகள் இனிதே கைகூடும். முயற்சிகளில் வெற்றியை ராகு தருவார். பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பொருளாதார வளத்தால் ஆடம்பர வசதி கூடும்.

செப்.22க்கு பிறகு ஆடை, அணிகலன் சேரும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். மனைவி வகையில் இருந்த பிரச்னை அடியோடு மறையும். அக். 2,3,4ல் பெண்கள் மூலம் உதவி கிடைக்கும். செப்.27,28,29ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அக்.9,10ல் அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். அக்.9க்கு பிறகு குடும்பத்தினருடன் விட்டு கொடுத்து போகவும்.

தொழில், வியாபாரத்தில் சிரத்தை எடுத்தே உழைக்க வேண்டியதிருக்கும். பகைவர் தொல்லை ஏற்பட்டு மறையும். அரசு வகையில் அனுகூலம் இல்லை. எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைத்து கொள்ளவும். செப்.30, அக்.1,5,6ல் சந்திரனால்
இடையூறுகள் வரலாம்.செப்.17, அக்.13,14ல் எதிர்பாராத வகையில் லாபம் கிடைக்க
வாய்ப்புண்டு. அக்.9க்கு பிறகு சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகலாம். எனவே
எச்சரிக்கையுடன் இருக்கவும். அக்.14க்கு பிறகு உஷ்ண, பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் ஏற்படலாம்.

பணியாளர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனாலும் திறமைக்கு ஏற்ற கவுரவம் கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு பணியில் கூடுதல் கவனம் தேவை. செப். 22க்கு பிறகு புதனால் நன்மை உண்டாகும். பணிச்சுமை குறையும். எதிர்பார்த்த பணி, இடமாற்றம் கிடைக்கும். அதிகாரிகள் அனுசரணையுடன் இருப்பர். செப்.25,26ல் முன்னேற்றமான சம்பவம் நடக்கும்.

கலைஞர்களுக்கு பெண்கள் வகையில் இருந்த பிரச்னை அக்.10 க்கு பிறகு மறையும். அதன் பின் அதே பெண்கள் தவறை உணர்ந்து உதவிகரமாக செயல்படுவர். புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்கும். அரசியல்வாதிகள் வீண் அலைச்சலுக்கு ஆளாவர். மறைமுக எதிரியால் பிரச்னை உருவாகலாம்.

மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். செப். 22க்கு பிறகு கல்வியில் வளர்ச்சி காண்பர். ஆசிரியர்களின் ஆலோசனை பக்கபலமாக அமையும். அக்.9 க்கு பிறகு படிப்பில் சற்று கவனம் தேவை.

விவசாயிகள் சீரான வளர்ச்சி காண்பர். காய்கறி, கீரை, பழ வகைகள் ஆகிய வற்றில் நல்ல மகசூல் காணலாம். கால்நடைவளர்ப்பின் மூலம் லாபம் பெருகும். வழக்கு விவகாரத்தில் முடிவு சீராக இருக்கும்.புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளி போகும்.

பெண்கள் செப்.22 வரை குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். வேலையில் பொறுமை தேவை. அதன் பிறகு கணவர், குடும்பத்தாரிடம் நன் மதிப்பு உண்டாகும். அக்.7,8ல் ஆடை, ஆபரணம் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம் வரப் பெறலாம். செப்.18,19, அக்.15,16,17ல் விருந்து விழா என சென்று வருவீர்கள்.தோழிகள் ஆதரவுடன் செயல்படுவர். அக். 10க்கு பிறகு சுக்கிரனால் ஆடம்பர வசதி பெருகும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர்.

நல்ல நாள்: செப். 17, 18, 19, 25, 26, 27, 28, 29,  அக். 2, 3, 4, 7, 8, 13, 14, 15, 16, 17
கவன நாள்: செப். 20,21,22 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 2,3       
நிறம்: மஞ்சள், நீலம்

பரிகாரம்
● சனிக்கிழமையன்று பெருமாளுக்கு அர்ச்சனை
● வெள்ளிக்கிழமையில் சுக்கிரனுக்கு நெய் தீபம்
● ஞாயிறு காலை நீராடியதும் சூரிய நமஸ்காரம்

 
மேலும் ஆடி ராசிபலன் (17.7.2018 – 16.8.2018) »
temple
தர்மவழியில் வாழ்வு நடத்தும் மேஷ ராசி அன்பர்களே!

இந்த மாதம் குருபகவான் முன்னேற்றத்தை கொடுப்பார். ... மேலும்
 
temple
வெற்றி நோக்குடன் செயல்பட்டு முன்னேறும் ரிஷப ராசி அன்பர்களே!

சூரியன், சுக்கிரன், ராகு மாதம் ... மேலும்
 
temple
சகோதர பாசம் கொண்ட மிதுன ராசி அன்பர்களே!

இந்த மாதம் சுக்கிரன், குரு இருவரும் முன்னேற்றம் அளிக்க ... மேலும்
 
temple
வசீகர பேச்சால் பிறரைக் கவரும் கடக  ராசி அன்பர்களே!

சுக்கிரன் ஆக. 2ல் இடம் மாறினாலும் மாதம் ... மேலும்
 
temple
சந்ததிக்கும் புண்ணியம் தேடும் சிம்ம ராசி அன்பர்களே!

முக்கிய கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.