Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ... மேஷம்: (வீட்டில் சுபநிகழ்ச்சி) மேஷம்: (வீட்டில் சுபநிகழ்ச்சி)
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (15.3.2026 முதல் 13.4.2026 வரை)
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) - பதவி உயர்வு
எழுத்தின் அளவு:
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) - பதவி உயர்வு

பதிவு செய்த நாள்

14 செப்
2017
03:09

நேர்மை எண்ணத்துடன் செயல்படும் மீன ராசி அன்பர்களே!

கடந்த மாதத்தில் கிடைத்த நற்பலன் சற்று குறையும். செவ்வாய் அக். 14 வரையும், புதன் செப்.22 வரையும், அக். 9 க்கு பிறகும் நற்பலன் கொடுப்பர். கேதுவின் நன்மைகள் இப்போதும் தொடரும். முயற்சி அனைத்திலும் வெற்றி காணலாம். குருவின் 7ம் இடத்துப்பார்வை சிறப்பாக உள்ளதால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுப நிகழ்ச்சி நடந்தேறும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத் தேவை பூர்த்தியாகும். செவ்வாயால் பொருளாதார வளம் அதிகரிக்கும். அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணம் வாங்கலாம்.

குடும்பத்தில் அமைதி நிலவும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்கலாம். செப். 22ல் இருந்து அக்.9 வரை கணவன் மனைவி இடையே கருத்துவேறுபாடு உருவாகலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். அதன் பிறகு முயற்சியில் வெற்றி உண்டாகும்.

பிள்ளைகளின் செயல்பாடு பெருமையளிக்கும். அக். 5,6 ல் பெண்கள் உதவிகரமாக செயல்படுவர். செப்.30, அக்.1ல் உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் அவர்கள் வகையில் அக்.11,12ல் சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. உடல்நலம் சுமாராக இருக்கும். சூரியனால் வீண் அலைச்சல் அதிகரிக்கும்.
தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்க அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.
மறைமுக எதிரிகளால் அவ்வப்போது இடையூறு ஏற்படலாம். ஆனாலும் பணவரவு
திருப்திகரமாக இருக்கும். செப்.18,19, அக்.15,16,17ல் திடீர் பணவரவு கிடைக்க வாய்ப்புண்டு. அக்.2,3,4,7,8 ல் சிறு தடைகள் தொழிலில் ஏற்படலாம். அக்.9க்கு பிறகு
வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும்.

பணியாளர்கள் புதனின் அனுகூலத்தால் பதவி உயர்வு காண்பர். பணியிடத்தில்
செல்வாக்கு அதிகரிக்கும். அதிகாரிகள் ஆதரவுடன் செயல்படுவர். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உண்டு. கோரிக்கைகள் எளிதில் நிறைவேறும். செப்.22ல் இருந்து அக்.9 வரை பணிச்சுமை ஏற்பட வாய்ப்புண்டு.

செப்.27,28,29 சிறப்பான நாட்களாக அமையும். பணியிடத்தில் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான
முன்னேற்றத்தை காணலாம். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை அக்.14க்குள் கேட்டு பெற்று கொள்ளவும்.

கலைஞர்களுக்கு முயற்சியில் இருந்த தடை, அக்.10க்கு பிறகு மறையும். ஆனால் அதன் பிறகு பெண்கள் வகையில் தொல்லை குறுக்கிடலாம். அரசியல்வாதிகள், பொது நல சேவகர்கள் சிறப்பான பலன் பெறுவர். செப்.17,அக்.13,14ல் மனக்குழப்பம்
ஏற்படலாம்.

மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர். போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவர்.
ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு துணைநிற்கும். செப்.22ல் இருந்து அக்.9 வரை சற்று கவனம் தேவை.

விவசாயிகளுக்கு வருமானத்திற்கு குறைவிருக்காது. கீரை, காய்கறிகள், பயறு வகைகள், நெல், கோதுமை மூலம் நல்ல மகசூல் கிடைக்கும். வழக்கு,விவகாரம் திருப்திகரமாக இருக்கும். புதிய சொத்து வாங்குபவர்கள் அக்.14க்குள் பயன்படுத்தி கொள்ளவும்.

பெண்களுக்கு திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடி வரும். செப்.20,21,22 சிறப்பான நாட்களாக அமையும். விருந்து விழா என சென்று வருவீர்கள். சகோதரிகள்
ஆதரவுடன் செயல்படுவர். அக்.9,10ல் ஆடை, அணிகலன்கள் வாங்கலாம்.

செப். 22ல் இருந்து அக். 9 வரை குடும்பத்தில், விட்டுக் கொடுத்து போவது நல்லது.

நல்ல நாள்: செப். 18, 19, 20, 21, 22, 27, 28, 29, 30,  அக். 1, 5, 6, 9, 10, 15, 16, 17
கவன நாள்: செப் 23, 24 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 3, 6       
நிறம்: சிவப்பு, பச்சை

பரிகாரம்
● சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு
● சனிக்கிழமை சனீஸ்வரருக்கு எள் தீபம்
● செவ்வாயன்று முருகனுக்கு பாலாபிஷேகம்.

 
மேலும் பங்குனி ராசி பலன் (15.3.2026 முதல் 13.4.2026 வரை) »
temple news
மேஷம்அசுவினி: வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை உணர்ந்து, அனைத்தையும் எதிர்கொண்டு வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: நினைத்ததை சாதிப்பதில் முதன்மையானவரான உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்எந்த ஒன்றிலும் உறுதியாக இருந்து செயல்பட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்சிந்தித்து செயல்படுவதுடன் மற்றவர்களை வழிநடத்தும் திறமையும் கொண்ட உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மகம்விடா முயற்சியுடன் தொடர்ந்து எதிர்நீச்சல் போட்டுவரும் உங்களுக்கும் பிறக்கும் பங்குனி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar