Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மேஷம்: சுபநிகழ்ச்சி நடந்தேறும் மேஷம்: சுபநிகழ்ச்சி நடந்தேறும் மிதுனம்: காத்திருக்கு பதவி உயர்வு மிதுனம்: காத்திருக்கு பதவி உயர்வு
முதல் பக்கம் » கார்த்திகை ராசிபலன் (17.11.2018 – 15.12.2018)
ரிஷபம்: பயணத்தால் இனிய அனுபவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 நவ
2017
14:47

வெற்றி மனப்பான்மையுடன் செயல்படும் ரிஷப ராசி அன்பர்களே!

செவ்வாய் டிச.2ல் இருந்து நற்பலன் தர காத்திருக்கிறார். மற்ற கிரகங்களால் சுமாரான பலனே உண்டாகும். ஆனாலும் கவலை கொள்ள வேண்டாம். காரணம் ராகுவால் மாதம் முழுவதும் நன்மை உண்டாகும். அவரால் செயலில் வெற்றி உண்டாகும். டிச.1க்கு பிறகு பொருளாதார வளம் அதிகரிக்கும்.

பயணம் மூலம் இனிய அனுபவம் காண்பீர்கள். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். குடும்பத்தில் வீண்விவாதம், பிரச்னை குறுக்கிடலாம். கணவன், மனைவி இடையே சண்டை சச்சரவு ஏற்பட வாய்ப்புண்டு.  இதற்கு காரணம் புதன் 7ம் இடத்தில்இருப்பதே. ஆனால் டிச. 1ல் செவ்வாய் இடமாறுவதால் பிரச்னை அடியோடு விலகும்.  குடும்பத்தில் அமைதி நிலைக்கும். பிள்ளைகளின் செயல்பாட்டால் பெருமை உண்டாகும். வீட்டுக்கு தேவையான சகல வசதிகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.  நவ.28,29,30 ல் உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் டிச.9,10ல் அவர்கள் வகையில் கருத்துவேறுபாடு உருவாகலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். டிச.3,4ல் பெண்கள் உதவிகரமாக செயல்படுவர். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.

கேதுவால் உடல்நலக்குறைவு ஏற்படலாம். விழிப்புடன் இருந்தால் பிரச்னையை தவிர்க்கலாம். பிள்ளைகளின் உடல் நலனில் அக்கறை தேவை. சூரியனால் அலைச்சல் அதிகரிக்கும்.

தொழில், வியாபாரத்தில் வீண் அலைச்சல், பகைவர் தொல்லையை சந்திக்க வேண்டியதுஇருக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரிடும். அரசு வகையில் எதிர்பார்த்த சலுகை தள்ளிப் போகும். புதிய தொழில் முயற்சி தற்போது வேண்டாம். பணவிஷயத்தில் புதியவர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பது நல்லதல்ல. டிச.1க்கு பிறகு  பகைவர் தொல்லையில் விடுபட வாய்ப்புண்டு.  நவ.17,18, டிச.14,15 ல் எதிர்பாராத வருமானம் கிடைக்கும். டிச. 1,2,5,6 ல் பண விரயம் ஆகலாம். உங்கள் முயற்சிகளில் தடைகள் குறுக்கிடலாம்.

பணியாளர்கள் வேலைப் பளுவுக்கு ஆளாக நேரிடும். சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும். நவ.26,27ல் சிறப்பான பலன்களை காணலாம். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.

கலைஞர்கள் பணியைத் தவிர மற்ற எதையும் சிந்திக்க வேண்டாம். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாக விடாமுயற்சி தேவைப்படும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய புகழ், பாராட்டு தட்டி பறிக்கப்படலாம். முயற்சிகளில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும், நவ.27க்கு பிறகு மறையும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான பலனை காண்பர்.

டிச.1க்கு பிறகு நற்பலனை எதிர்நோக்கலாம். புகழ், கவுரவம் மேலோங்கும். மாணவர்கள்  அதிக சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும். மாத மத்தியில் புதன் வக்கிரத்தில் சிக்குவதால் கூடுதல் முயற்சி தேவைப்படும்.

போட்டியில் வெற்றி பெற கடின முயற்சி அவசியம். ஆசிரியர்கள் ஆலோனையை ஏற்று நடந்தால் நன்மை காணலாம்.

விவசாயிகளுக்கு எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். நெல், கரும்பு, எள், கேழ் வரகு, பழ வகைகள், காய்கறி வகைகள் மூலம் அதிக வருமானம் காணலாம். கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் பெருகும். புதிய சொத்து வாங்க நினைப்பவர்களின் எண்ணம், டிச.1க்கு பிறகு கைகூடும்.

பெண்கள் குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு  பொறுமையும் நிதானமும் தேவை. டிச.1க்கு பிறகு  அண்டை வீட்டாரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். டிச.7,8 ல் எதிர்பார்ப்பு நிறைவேறும். பிறந்த வீட்டினரின் உதவி கிடைக்கப் பெறுவர்.

* நல்ல நாள்: நவ.17,18,19,20,26,27,28,29,30, டிச. 3,4,7,8,14,15
* கவன நாள்:  நவ.21,22,23 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 5,6  நிறம்: பச்சை, கருநீலம்

*பரிகாரம்:
* சனிக்கிழமை ராமருக்கு துளசி அர்ச்சனை
* வெள்ளிக்கிழமை துர்க்கைக்கு நெய் தீபம்
* ஞாயிறு ராகு காலத்தில் பைரவர் வழிபாடு.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.