Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரிஷபம்: பயணத்தால் இனிய அனுபவம் கடகம்: வரப்போகுது வசந்த காலம் கடகம்: வரப்போகுது வசந்த காலம்
முதல் பக்கம் » ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 )
மிதுனம்: காத்திருக்கு பதவி உயர்வு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மிதுனம்: காத்திருக்கு பதவி உயர்வு

பதிவு செய்த நாள்

10 நவ
2017
02:11

நட்புக்கு முன்னுரிமை அளிக்கும் மிதுன ராசி அன்பர்களே!

இந்த மாதம் நவ.28க்கு பிறகு சுக்கிரன் சாதகமற்ற நிலைக்கு சென்றாலும் அதிக பாதிப்பு ஏற்படாது. ஏனெனில் சூரியன், புதன், குரு, சனி நன்மை தர காத்திருக்கின்றனர். ராகு, கேதுவால் பொருளாதார தடை குறுக்கிட்டாலும் அதை குரு, சனிபலத்தால் முறியடிப்பீர்கள். செயலில் அனுகூலம் உண்டாகும். மக்கள் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும்.  பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள்.

குடும்பத்தில் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். பெண்களால் நன்மை கிடைக்கும். பொன், பொருள் சேரும். பக்தி எண்ணம் மேலோங்கும்.  திருமணம், புதுமனை புகுவிழா போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.  கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை உருவாகும். டிச.1,2ல் உறவினர்கள் வருகை இருக்கும். அவர்களால் நன்மை ஏற்படும். அதே நேரம்  டிச.11,12,13ல் அவர்கள் வகையில் கருத்துவேறுபாடு வர வாய்ப்புண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும்.

டிச.5,6ல் பெண்களால் நற்பலனை எதிர் நோக்கலாம். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஆரோக்கியம் மேம்படும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதிரிகளால் குறுக்கிட்ட  முட்டுக்கட்டை அடியோடு விலகும். புதிய வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம்.

கோயில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும். டிச.3,4,7,8ல் சந்திரனால் தடைகள் வரலாம்.  நவ.19,20ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும்.
செவ்வாயால்  தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து டிச.1க்கு பிறகு விடுபடுவர்.

பணியாளர்களுக்கு விரும்பிய பதவி உயர்வு கிடைக்கும். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சீராக இருக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவுடன் செயல்படுவர். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் டிச.1 வரை பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். நவ.28,29,30ல் எதிர்பார்ப்பு நிறைவேற வாய்ப்புண்டு.

கலைஞர்களுக்கு ரசிகர்களின் மத்தியில் புகழ், பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். தொழில்ரீதியாக அடிக்கடி வெளியூர் செல்ல நேரிடும்.

நவ.27க்கு பிறகு முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும். ஆனால், வருமானத்திற்கு குறைவிருக்காது.

அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் உழைப்புக்கு ஏற்ற பலனை எதிர்பார்க்க முடியாது. தொண்டர் நலனுக்காக பணம் செலவழிக்க நேரிடும்.

மாணவர்கள் கல்வியில் நல்ல வளர்ச்சி காண்பர்.  புதன் சாதகமாக காணப்படுவதால் போட்டியில் வெற்றி கிடைக்கும். ஆசிரியர்களின் மத்தியில் நற்பெயர் உண்டாகும். பெற்றோர் பெருமைப்படும் விதத்தில் செயல்படுவர்.  

விவசாயிகள் நெல், கோதுமை, கேழ்வரகு, சோளம் போன்ற  பயிர்கள் மூலம் நல்ல மகசூல் பெறுவர். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும்.  கால்நடை வளர்ப்பின் மூலம் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. வழக்கு, விவகாரத்தில் முடிவு சுமாராக இருக்கும்.

பெண்கள் குடும்பத்தில் நற்பெயர் காண்பர். உறவினர் மத்தியில் சுமூக நிலை
உண்டாகும். தோழிகள் உதவிகரமாக செயல்படுவர்.  குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.  வேலைக்கு செல்லும்
பெண்களுக்கு புதிய பதவி தேடி வரும். சுய தொழில் புரியும் பெண்கள், வங்கி கடன் மூலம் விரிவாக்கப்பணியில் ஈடுபடுவர்.

* நல்ல நாள்: நவ.19,20,21,22,23, 28,29,30, டிச.1,2,5,6,9,10
* கவன நாள்: நவ. 24,25 சந்திராஷ்டமம்.
* அதிர்ஷ்ட எண்: 1,7,9 நிறம்: மஞ்சள், பச்சை

* பரிகாரம்:
* செவ்வாயன்று முருகனுக்கு பாலாபிேஷகம்
* ஞாயிறு ராகு காலத்தில் பைரவர் வழிபாடு
* வெள்ளியன்று மாரியம்மனுக்கு நெய் தீபம்

பகிர்க copied
 
மேலும் ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 ) »
temple news
மேஷம்: அசுவினி: எந்த நிலை வந்தாலும் அதை எதிர்கொண்டு வாழக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் ... மேலும்
 
temple news
ரிஷபம் .. கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: செல்வாக்கு, அந்தஸ்து என்ற நோக்கத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மிதுனம். .மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி ... மேலும்
 
temple news
கடகம்.. புனர்பூசம் 4 ம் பாதம்: சூழ்நிலை அறிந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்.. மகம்: படிப்பினைகளால் பாடம் கற்றுவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் சங்கடங்கள் விலகும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar