Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கும்பம்: லாபம் அள்ளுவீங்க! கும்பம்: லாபம் அள்ளுவீங்க! மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்)  பிள்ளைகளால் மகிழ்ச்சி மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ...
முதல் பக்கம் » கார்த்திகை ராசிபலன் (17.11.2018 – 15.12.2018)
மீனம்: ஆடம்பரமா இருப்பீங்க!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 நவ
2017
14:59

கண்ணியத்துடன் நடக்க விரும்பும் மீன ராசி அன்பர்களே!

இந்த மாதம் சுக்கிரன் நவ.27ல் இடம் மாறினாலும், மாதம் முழுவதும் நன்மைகளை தருவார். கேதுவும் நற்பலன் தர காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், செயலை நிறைவேற்றும்முன்,  தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். சூரியன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் வீண் விவாதங்களில் ஈடுபடாமல் இருக்கவும். செவ்வாயால் ஏற்படும் அலைச்சல், மனவேதனை, மனைவி வகையில் பிரச்னை, எதிரி தொல்லை
முதலியன டிச.1 க்கு பிறகு மறையும்.

குடும்பத்தில் பெண்களின் நிலை  மேலோங்கி நிற்கும். ஆடம்பர வசதிகள் பெருகும். வீட்டில் மகிழ்ச்சியும்,  நிம்மதியும் குடியிருக்கும். பெற்றோரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள்.  அக்கம்பக்கத்தினர் ஆதரவுடன்  செயல்படுவர். கணவர், மனைவி இடையே இணக்கம் அதிகரிக்கும். நவ.28,29,30ல்  சகோதரிகளால் நன்மை உண்டாகும். பொன், பொருள் சேரும். டிச.3,4ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.  நவ.24,25ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் டிச.5,6ல் அவர்கள் வகையில் கருத்துவேறுபாடு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். புதனால் சிலர் வீண் பொல்லாப்பை சந்திக்கலாம். பொறுமையுடன் இருக்கவும்.

செவ்வாயால் உடல்நலக்குறைவு ஏற்படலாம். டிச.1க்கு பிறகு உஷ்ண, பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் வரலாம். நவ.19,20 ல் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.

தொழில், வியாபாரத்தில் உழைப்புக்கு தகுந்த முன்னேற்றம் உண்டாகும். கேதுவால் திடீர் வாய்ப்பு மூலம் பொருளாதாரம் அதிகரிக்கும். பங்கு வர்த்தகம் மூலம் லாபம் கிடைக்க வாய்ப்புண்டு.  பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் அபரிமிதமான முன்னேற்றம் பெறும். நவ.26,27, டிச.1,2ல் சந்திரனால் தடைகள் வரலாம். டிச.9,10ல் திடீர் பணவரவுக்கு வாய்ப்புண்டு. எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். புதனால் சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகலாம். எனவே எச்சரிக்கையுடன் பழகவும்.

பணியாளர்கள் பணிச்சுமையை சந்திப்பர். மேலதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும். முக்கிய பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். எதிர்பார்த்த கோரிக்கை கிடைப்பதில் தாமதம் உண்டாகும். சக பெண் ஊழியர்கள்  ஆதரவுடன் செயல்படுவர்.  நவ.21,22,23ல் சிறப்பான பலனை எதிர் நோக்கலாம். புதனால், சிலர் பணத்தை இழக்க நேரிடலாம் கவனம் தேவை.

கலைஞர்கள் விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவர். பெண்கள் வகையில் இருந்த தொல்லை மறையும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்க பெறலாம். தொழில்ரீதியான பயணத்தால் இனிய அனுபவம் உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். வீண் அலைச்சலைச் சந்திக்க நேரிடும். டிசம்பர் 7,8ல் மனவேதனை ஏற்படலாம்.
தொண்டர்களுக்காக பணம் செலவழிக்கும் சூழல் உருவாகும். மாணவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். அதற்குரிய பலன் உடனடியாக கிடைக்காவிட்டாலும் எதிர்காலத்தில் வந்து சேரும். சிலருக்கு நண்பர்களால் பிரச்னை ஏற்படலாம். கவனமாக இருக்கவும்.

விவசாயிகளுக்கு கோதுமை, கம்பு, கேழ்வரகு, பழவகைகள் போன்றவற்றால் வருமானம் அதிகரிக்கும். புதிய சொத்துகள் வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும். கால் நடைவளர்ப்பின் மூலம் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும்.

பெண்கள் பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமை கொள்வர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பொறுமையும், நிதானமும் தேவைப்படும். அரசு ஊழியர்கள் பணிச்சுமைக்கு ஆளாக நேரிடலாம்.

* நல்ல நாள்: நவ. 21,22,23,24,25,28,29,30, டிச.3,4,9,10,11,12,13
* கவன நாள்: நவ.17,18, டிச.14,15 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்:  5,8 நிறம்: வெள்ளை,  சிவப்பு

*பரிகாரம்:
* தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்
* வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு
* செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம்

 
மேலும் கார்த்திகை ராசிபலன் (17.11.2018 – 15.12.2018) »
temple
நீங்கள் கடந்த மாதத்தை விட நல்ல முன்னேற்றம் உண்டாகும். காரணம் உங்கள் ராசிக்கு நட்பு கிரகமான புதன் ... மேலும்
 
temple
இந்த மாதம் புதன் டிச. 8 வரை நற்பலன் கொடுப்பார். அதன் பிறகு அவர் சாதகமாக காணப்படவில்லை. ரிஷப ராசிக்கு 7-ம் ... மேலும்
 
temple
புதன் உங்கள் ராசிக்கு 5-ம் இடமான துலாமில் வக்கிரம் அடைந்திருக்க இந்த மாதம் தொடங்குகிறது. இது சுமாரான ... மேலும்
 
temple
புதன் வக்கிரம் அடைந்து துலாமில் இருக்கிறார். அவரால் பொன், பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி ... மேலும்
 
temple
முக்கிய கிரகங்களான சுக்கிரன், கேது நன்மை தந்து கொண்டிருக்கிறார்கள். கல்விகாரகனான புதன் உங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.