Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனம்: ஆடம்பரமா இருப்பீங்க! ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) எதிர்பார்ப்பு நிறைவேறும் ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ...
முதல் பக்கம் » ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 )
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) பிள்ளைகளால் மகிழ்ச்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்)  பிள்ளைகளால் மகிழ்ச்சி

பதிவு செய்த நாள்

18 டிச
2017
12:12

நல்லவர் நட்பை விரும்பி ஏற்கும் மேஷ ராசி அன்பர்களே!

புதன் 8ம் இடத்தில் இருப்பதால் வெற்றி உண்டாகும். ஆடை, அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும்.  2018 ஜன.4-ல் தனுசு ராசிக்கு  மாறுவதால் அவரால் நற்பலன் தர இயலாது.  மற்ற முக்கிய கிரகங்களான குரு 7-ம் இடத்தில் இருந்தும், சுக்கிரன் 8-ம் இடத்தில் இருந்தும் நன்மையளிப்பர்.  சுக்கிரன் டிச.21-ல் தனுசு ராசிக்கு இடம் மாறினாலும், மாதம் முழுவதும் நன்மை உண்டாகும். சுக்கிரன் டிச.21- வரை விருச்சிகத்தில் இருப்பதால் வசதி பெருகும்.  பெண்கள் ஆதரவுடன் செயல்படுவர்.  ஆனால் சூரியன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் வீண் விவாதங்களை தவிர்க்கவும்.பொறுமை தேவை.

குருவால் குடும்பத் தேவை பூர்த்தியாகும்.  முயற்சி வெற்றி பெறும். புதிய வீடு, -மனை வாங்க யோகம் கூடி வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.  சனிபகவான் டிச.21ல் 9-ம் இடமான தனுசு ராசிக்கு செல்கிறார். அவரால் முயற்சியில் தடை குறுக்கிடலாம். எதிரி தொல்லை தலைதூக்கும். சனிபகவான் சாதகமற்று இருந்தாலும் அவரது பார்வைகள் சாதகமாக உள்ளன. பிரச்னையை முறியடித்து வெற்றிக்கு வழிகாண்பீர்கள்.

சுபநிகழ்ச்சி பற்றிய பேச்சில் முன்னேற்றம் உண்டாகும்.  தம்பதியிடையே அன்பு மேம்படும். பெண்களின் ஆதரவு இருக்கும்.  டிச.28,29-ல் பெண்கள் உதவிகரமாக செயல்படுவர். பொன், பொருள் சேரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். டிச. 23,24,25- ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஜன.3,4- ல் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.

தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிரிகளால் மறைமுகப்போட்டி குறுக்கிடலாம். குருவால் அவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். பெண்கள் வகையில் இருந்த தொல்லை மறையும்.

பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும். ஜன. 8,9-ல் திடீர் பணவரவுக்கு வாய்ப்புண்டு. டிச. 26,27,30,31ல் சந்திரனால் தடைகள் குறுக்கிடலாம். 2018 ஜன. 4-க்கு பிறகு நட்பு விஷயத்தில் விழிப்புடன் இருப்பது நல்லது.

பணியாளர்கள் ஜன.4- வரை நல்ல வளர்ச்சியை காண்பர். வேலையில் திருப்தி உண்டாகும். மேல் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். கோரிக்கை ஒவ்வொன்றாக நிறைவேறும். டிச.21,22-ல் எதிர்பாராத நன்மை உண்டாகும்.  மாத இறுதியில் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். பணியிடத்தில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர்.  சக பெண் கலைஞர்கள் உதவி கரமாக இருப்பர்.  அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான நிலையில் இருப்பர். உங்களுக்கு வரவேண்டிய புகழ், பாராட்டு கிடைக்கும். ஜன.5,6,7-ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள் ஜன.4- வரை கல்வியில் வளர்ச்சியடைவர். தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். போட்டி, பந்தயங்களில் வெற்றி உண்டாகும். மாத இறுதியில் சிலர் கெட்ட சகவாசத்திற்கு ஆளாகலாம் கவனம்.  சிரத்தை எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால் வருமானத்திற்கு குறை இருக்காது. குறிப்பாக நெல், சோளம் போன்றவற்றில்  மகசூல் அதிகரிக்கும். வழக்கு, விவகாரத்தில் முடிவு  சுமாராக இருக்கும். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.

பெண்கள் மகிழ்ச்சிகரமாக காணப்படுவர். புதிய பதவி தேடி வரும். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.  பிள்ளைகளின் செயல்பாடு பெருமையளிக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் நல்ல வளர்ச்சி பெறுவர். டிச.21-க்கு பிறகு பணப்புழக்கம் அதிகரிக்கும்.    ஜன. 1,2- ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து உதவி கிடைக்கும். ஜன.10,11-ல் சகோதரிகள்  ஆதரவுடன்  செயல்படுவர். விருந்து ,விழா என சென்று வருவீர்கள்.

* நல்ல நாள்: டிச. 21, 22, 23, 24, 25, 28, 29, ஜன. 1, 2, 8, 9, 10, 11
* கவன நாள்: டிச.16,17 ஜன.12,13 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 3,5     நிறம்: மஞ்சள், பச்சை

* பரிகாரம்:
●  சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் விளக்கு
●  சூரியனை வழிபட்டு ஏழைக்கு தானம்
●  பைரவருக்கு ராகு காலத்தில் அர்ச்சனை

பகிர்க copied
 
மேலும் ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 ) »
temple news
மேஷம்: அசுவினி: எந்த நிலை வந்தாலும் அதை எதிர்கொண்டு வாழக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் ... மேலும்
 
temple news
ரிஷபம் .. கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: செல்வாக்கு, அந்தஸ்து என்ற நோக்கத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மிதுனம். .மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி ... மேலும்
 
temple news
கடகம்.. புனர்பூசம் 4 ம் பாதம்: சூழ்நிலை அறிந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்.. மகம்: படிப்பினைகளால் பாடம் கற்றுவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் சங்கடங்கள் விலகும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar