Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2): விடாமுயற்சி வெற்றி தரும் மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ... மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி): அரசு வகையில் ஆதாயம் மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ...
முதல் பக்கம் » தை ராசி பலன் (14.01.2018 - 12.2.2018)
கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3): முயற்சிக்கேற்ற வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2018
15:20

குறையில்லாத மனம் படைத்த கும்ப ராசி அன்பர்களே!

புதனால் ஜன.21- வரை அனுகூல பலன் உண்டாகும். குரு, சனி,ராகு மாதம் முழுவதும் நற்பலன் தர காத்திருக்கின்றனர்.  சுக்கிரன் பிப். 7- முதல் நன்மை தருவார். மனதிலும், உடலிலும் புத்துணர்ச்சி மேலோங்கும். ஆற்றல் மேம்படும். முயற்சிக்கேற்ப வாழ்வில் நல்ல வளர்ச்சி காண்பீர்கள்.

குடும்பத்தில் குருவால் மகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்த செயலை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் ஒவ்வொன்றாக பூர்த்தி ஆகும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும்.  உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. இது தவிர குருவின் 9-ம் இடத்துப் பார்வை மூலம் நற்பலன் கிடைக்கும்.  பெண்களால் மேன்மை கிடைக்கும். புதுமணத் தம்பதியர் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர். பொன், பொருள் சேரும்.  சுக்கிரனால் பெண்கள் உறுதுணையாக செயல்படுவர்.  விருந்து விழா என சென்று வருவீர்கள்.  கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். ஜன. 15,16 பிப். 11,12- ல் உறவினர் வருகையால் நன்மை உண்டாகும்.  ஜனவரி 26,27,28- ல் அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. ஜன.20,21-ல் எதிர்பாராமல் பணம் கிடைக்கும்.   ஜன.22-ல் புதன் இடம் மாறுவதால் அண்டை வீட்டார் வகையில்  கருத்துவேறுபாடு ஏற்படலாம். உடல்நலம் சீராக  இருக்கும். ஜன.19-க்கு பிறகு உஷ்ணம், தோல் தொடர்பான பிரச்னை உண்டாகலாம்.   

தொழில், வியாபாரத்தில் பொருளாதார வளம் மேம்படும்.  பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம்  நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். புதன் ஜன. 22-ல் இடம் மாறுவதால் எதிரிகளால் தொல்லை வரலாம். சூரியனால் அவ்வப்போது வீண் விரயம் ஏற்படலாம்.   ஜன.31, பிப்.1-ல் பகைவர்களை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் இருக்கும்.  செவ்வாயால் ஜன. 19-க்கு பிறகு  பொருள் களவு ஏற்பட வாய்ப்புண்டு.

பணியாளர்கள் குருவின் பலத்தால் பணியிடத்தில் செல்வாக்குடன் திகழ்வர்.  சக பெண் ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெறலாம். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு தானாக வந்து சேரும். அரசு ஊழியர்களுக்கு கோரிக்கை ஒவ்வொன்றாக நிறைவேறும்.  ஜன.14, பிப்.8,9,10ல் எதிர்பார்ப்பு நிறைவேற வாய்ப்புண்டு. பணியிடத்தில் உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். செவ்வாயால் ஜன.19-க்கு பிறகு அவ்வப்போது வீண்விரயம் ஏற்படலாம்.  

கலைஞர்களுக்கு வருமானம் எதிர்பார்த்தபடி இல்லை என்றாலும் பாதகமான நிலை உண்டாகாது. பிப்.7க்கு பிறகு அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும். விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தம் கிடைக்க பெறலாம்.  அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் உழைப்புக்கு ஏற்ற பலனை எதிர்பார்க்க முடியாது. ஜன.29,30-ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள் போட்டியில் பங்கேற்று வெற்றி காண்பர்.  ஜன.21-க்கு பிறகு புதன் சாதகமற்று காணப்படுவதால் படிப்பில் கூடுதல் கவனம் தேவை.  அதே நேரம் குருவால் ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவர்.

விவசாயிகள் உழைப்புக்கேற்ற வருமானத்தை பெறலாம். கால்நடை செல்வம் பெருகும்.
பெண்கள் கணவரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வீர்கள். ஜன. 24,25ல் எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனமாக பொருட்கள் வரப் பெறலாம்.

* நல்ல நாள்: ஜன.14,15,16,20,21,24,25,31, பிப்.1,2,3,8,9,10,11,12
* கவன நாள்: பிப். 4,5- சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 1,9  நிறம்: நீலம், மஞ்சள்  

பரிகாரம்:
● ஞாயிறன்று காலையில் சூரிய நமஸ்காரம்
● செவ்வாயன்று துர்க்கைக்கு எலுமிச்சை தீபம்
● சனிக்கிழமையில் தர்ம சாஸ்தா வழிபாடு

 
மேலும் தை ராசி பலன் (14.01.2018 - 12.2.2018) »
temple
உதவும் குணமுள்ள மேஷ ராசி அன்பர்களே!

சூரியன் 10-ம் இடத்திற்கு வந்தும், குரு மாதம் முழுவதும், புதன் ... மேலும்
 
temple
வெற்றி ஒன்றையே இலக்காகக் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!

ராகு 3-ம் இடத்தில் இருந்து மாதம் முழுவதும் ... மேலும்
 
temple
பிறர் நன்மையை பெரிதென எண்ணும் மிதுன ராசி அன்பர்களே!

குரு பகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் ... மேலும்
 
temple
நேசமும் பாசமும் மிக்க கடக ராசி அன்பர்களே!

அதிக உழைப்பையும் விடா முயற்சியையும் கொடுக்க வேண்டிய ... மேலும்
 
temple
கண்ணசைவில் காரியம் சாதிக்கும் சிம்ம ராசி அன்பர்களே!

சூரியன் மற்றும்  கேது தரும் சிறப்பான பலனால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.